மாகாண வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தவும், நடைமுறைச் சவால்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் ஆளுநர் வலியுறுத்தல்
வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தைத் தொடர்ச்சியாக மீளாய்வு செய்து, திட்டங்களை உரிய காலத்துக்குள் நிறைவு செய்வதுடன், நிரல் அமைச்சுக்களால் வழங்கப்படும் மேலதிக நிதியை வினைத்திறனுடன் பயன்படுத்தவும், தொழில்நுட்ப ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட நடைமுறைச் சவால்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாண ஆளுநருக்கும், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோருக்கும் இடையிலான […]
