வடக்கு மாகாண உற்பத்திகளை உலகச் சந்தையுடன் இணைக்கும் பாலமாக வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – ஆளுநர்
வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை வெறுமனே ஒரு வர்த்தகக் கண்காட்சியாக நான் பார்க்கவில்லை. இது வடக்கு மாகாணத்தின் தொழில் முயற்சித் திறனை வெளிப்படுத்தும் மேடையாகவும், எமது உற்பத்திகளைச் சந்தையுடன் இணைக்கும் பாலமாகவும், முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்துக்கு அழைக்கும் வாயிலாகவும் அமைகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026 இன்று (28.08.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில், வடக்கு கைத்தொழில் மன்றத்தின் தலைவர் எஸ்.நகுலேஸ்வரன் தலைமையில் […]
