August 20, 2026

வடக்கு மாகாணத்தில் வரலாற்றில் அதிகூடிய சிறுபோக நெல் விளைச்சல்; விவசாயிகளின் நெல்லை விரைவாகக் கொள்வனவு செய்ய பொறிமுறைகளைத் துரிதப்படுத்த ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாண வரலாற்றில் முதல் தடவையாக சிறுபோகத்தில் அதிகூடிய நெல் விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், விவசாயிகள் தமது விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு உடனடி தீர்வை வழங்கும் வகையில் நெல் கொள்வனவு பொறிமுறைகளை விரைவுபடுத்த வேண்டும். திறைசேரியால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சிறிய, நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் ஊடாக வட்டியில்லாக் கடன் அடிப்படையில் நெல் கொள்வனவை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் […]

வடக்கு மாகாணத்தில் வரலாற்றில் அதிகூடிய சிறுபோக நெல் விளைச்சல்; விவசாயிகளின் நெல்லை விரைவாகக் கொள்வனவு செய்ய பொறிமுறைகளைத் துரிதப்படுத்த ஆளுநர் பணிப்பு Read More »

வடக்கு மாகாண அபிவிருத்திப் பணிகளை ஒற்றுமையுடன் முன்னெடுக்க இருதரப்பினரும் இணக்கம்; விரும்பத்தகாத சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது – ஆளுநர் வலியுறுத்தல்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் விடுத்த கோரிக்கைக்கு, மாகாணத்தின் நிறைவேற்று அதிகாரிகளும் வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கத்தினரும் இணங்கினர். வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (19.08.2026) புதன்கிழமை

வடக்கு மாகாண அபிவிருத்திப் பணிகளை ஒற்றுமையுடன் முன்னெடுக்க இருதரப்பினரும் இணக்கம்; விரும்பத்தகாத சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது – ஆளுநர் வலியுறுத்தல் Read More »

வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுச் செயற்பாடுகள் ஆரம்பம்

வீதிப் போக்குவரத்து விபத்துக்களைத் தடுப்பதற்கும், உயிரிழப்புகள் மற்றும் காயங்களைக் குறைப்பதற்கும் வீதியைப் பயன்படுத்தும் அனைவரிடமும் பொறுப்புணர்வை உருவாக்கும் நோக்கில், போக்குவரத்து அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுச் செயற்பாடுகள் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையும் யாழ்ப்பாண மருத்துவச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த வீதிப் போக்குவரத்து விபத்து

வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுச் செயற்பாடுகள் ஆரம்பம் Read More »

வடக்கு மாகாண இளையோரின் உள்ளூராட்சி சேவைகள் மீதான நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டும் – ஆளுநர்

வடக்கு மாகாண இளையோர் உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகள் மீது கொண்டுள்ள நம்பிக்கை கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களை விட உயர்ந்த நிலையில் இருப்பதாக ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது எமக்குச் சாதகமான விடயமாகும். இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, அதனை ஒருபோதும் சிதைக்காத வகையில் உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகள் அமைய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். ‘இளைஞர் நிலவரக் குறியீடு: இலங்கையில் உள்ளடக்கிய ஆட்சிக்கான இளைஞர்களின் தேவைகள், பிரச்சினைகள் மற்றும் வாய்ப்புகளைப் பதிவுசெய்தல்’ என்ற

வடக்கு மாகாண இளையோரின் உள்ளூராட்சி சேவைகள் மீதான நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டும் – ஆளுநர் Read More »

நூல்கள் அலுமாரியில் மட்டும் இருந்தால் அவை ஆவணங்கள்; இளைய தலைமுறையின் கைகளில் சென்றால் அவை இயக்கங்களாக மாறும் – ஆளுநர்

நல்லைக்குமரன் மலர் போன்ற வெளியீடுகள் வெறுமனே அச்சுப் பிரதிகளாக வெளியிடப்பட்டு நூல் அலுமாரிகளில் நிற்பதுடன் முடிவடையக்கூடாது. இன்றைய இளைய தலைமுறையின் வாசிப்பு பழக்கமும் தகவல் பெற்றுக்கொள்ளும் முறையும் மாறிவரும் நிலையில், இத்தகைய அறிவுச் செல்வங்கள் அச்சு வடிவத்துடன் டிஜிட்டல் வடிவங்களிலும் அவர்களைச் சென்றடைய வேண்டும். அப்போதுதான் ஒரு வருடாந்த வெளியீடு தலைமுறைகளை இணைக்கும் தொடர்ச்சியான பண்பாட்டு இயக்கமாக மாறும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். நல்லைக்குமரன் மலர் – 34 வெளியீட்டு விழா

நூல்கள் அலுமாரியில் மட்டும் இருந்தால் அவை ஆவணங்கள்; இளைய தலைமுறையின் கைகளில் சென்றால் அவை இயக்கங்களாக மாறும் – ஆளுநர் Read More »