August 12, 2026

யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்களைத் தடுப்பதற்கு செயற்றிட்டம்; ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க ஆளுநர் பணிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக் காலமாக தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் கவலைக்கிடமாக அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதுடன், அதற்கான ஒருங்கிணைந்த கட்டமைப்புகளை மீளச் செயற்பாட்டு நிலைக்குக் கொண்டுவர விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (11.08.2026) மாலை நடைபெற்ற விசேட உயர்மட்ட கலந்துரையாடலின் போதே ஆளுநர் இந்தப் பணிப்புரையை வழங்கினார். கலந்துரையாடலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த […]

யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்களைத் தடுப்பதற்கு செயற்றிட்டம்; ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க ஆளுநர் பணிப்பு Read More »

நியமனம் வழங்கிவைப்பு

வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் நீண்டகாலமாக வெற்றிடமாக காணப்பட்ட மூன்று மேற்பார்வையாளர் பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட அலுவலர்களுக்கான நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (11.08.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார். 2026.07.01 ஆம் திகதி நடைபெற்ற நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கணபதிப்பிள்ளை ஜெயசீலன் சுகாதார மேற்பார்வையாளராகவும், பரமேஸ்வரன் தீபன் வேலை மற்றும் வெளிக்கள மேற்பார்வையாளராகவும், துரைச்சாமி கஜன் சந்தை மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் வடக்கு மாகாண

நியமனம் வழங்கிவைப்பு Read More »

கனமழை, வெள்ள அபாயங்களை எதிர்கொள்ள உள்ளூராட்சி மன்றங்கள் முழுமையான தயார்நிலையில் இருக்க வேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன் வலியுறுத்தல்

குறுகிய காலத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகி வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என காலநிலை முன்னறிவிப்புகள் வெளியாகி வருகின்ற நிலையில், அதனை எதிர்கொள்ள வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் மனிதவளம், நிதி, வாகனங்கள் மற்றும் அவசரகால உபகரணங்களுடன் முழுமையான தயார்நிலையில் இருக்க வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணம், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராமிய

கனமழை, வெள்ள அபாயங்களை எதிர்கொள்ள உள்ளூராட்சி மன்றங்கள் முழுமையான தயார்நிலையில் இருக்க வேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன் வலியுறுத்தல் Read More »

ஸ்மார்ட் மரைன் லங்கா தனியார் நிறுவனம் தனது யாழ். கிளை அலுவலகத்தை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை செயலகத்தின் முதலாம் மாடியில் ஆரம்பித்தது.

வடக்கு மாகாணத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் முக்கிய மைல்கல்லாக ஸ்மார்ட் மரைன் லங்கா (Smart Marine Lanka) நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை அலுவலகம் அமைகின்றது. வடக்கு மாகாணத்தின் உற்பத்தியாளர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு உலகளாவிய கப்பற் போக்குவரத்து மற்றும் தளபாடச் சேவைகளை நெருக்கமாகக் கொண்டு வரும் இந்த முயற்சி, வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஸ்மார்ட்

ஸ்மார்ட் மரைன் லங்கா தனியார் நிறுவனம் தனது யாழ். கிளை அலுவலகத்தை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை செயலகத்தின் முதலாம் மாடியில் ஆரம்பித்தது. Read More »