யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு, ‘கூட்டு முகாமைத்துவக் குழு’ கூட்டத்தில் இன்று (27.07.2026) திங்கட்கிழமை எட்டப்பட்டுள்ளது. இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற 7ஆவது கூட்டு முகாமைத்துவக் கூட்டத்தில் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் பல்வேறு இடங்களிலிருந்தவாறு கலந்துகொண்டனர். கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் […]
