June 24, 2026

மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற அதியுயர் பொறுப்புணர்வுடன் களமட்ட உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டும். – கௌரவ ஆளுநர்

போர் முடிந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் எங்கள் மக்களின் காணிப் பிரச்சினைகளை எவ்வளவு காலத்துக்கு நாம் இழுத்தடிக்கப் போகின்றோம்? பாதிக்கப்பட்டவர்கள் எமது முல்லைத்தீவு மக்கள் என்ற உணர்வோடும், அவர்களுக்காகவே நாம் சேவையாற்றுகின்றோம் என்ற கடமையுணர்வோடும் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்டத்தின் ‘5 ஆண்டுச் செயலாற்றுகை’ தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம், கிளிநொச்சியில் அமைந்துள்ள […]

மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற அதியுயர் பொறுப்புணர்வுடன் களமட்ட உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து, ஆவணங்களை வழங்கி வைக்க வேண்டியது அதிகாரிகள் அனைவரதும் பொறுப்பும் கடமையுமாகும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான் பிரதேச செயலாளர்களின் முக்கிய பொறுப்பாகவும் கடமையாகவும் இருக்க வேண்டும். பொதுமக்களை அலைக்கழித்துக் கொண்டிருக்காதீர்கள். நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து, அவர்களுக்கான ஆவணங்களை வழங்கி வைக்க வேண்டியது அதிகாரிகள் அனைவரதும் பொறுப்பும் கடமையுமாகும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்டத்தின் ‘5 ஆண்டுச் செயலாற்றுகை’ தொடர்பான விசேட

நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து, ஆவணங்களை வழங்கி வைக்க வேண்டியது அதிகாரிகள் அனைவரதும் பொறுப்பும் கடமையுமாகும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தின் கீழ் கிளிநொச்சி, கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலத்தின் புதிய கற்றல் வளநிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றது.

கல்வி அமைச்சின் ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தின் கீழ் 21 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி, கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலயத்தின் இரண்டு மாடிகளைக் கொண்ட புதிய கற்றல் வளநிலையக் கட்டடத் திறப்பு விழா இன்று (23.06.2026) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. பாடசாலை அதிபர் திருமதி வி.செல்வானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய கட்டடத்தை மாணவர்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து

‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தின் கீழ் கிளிநொச்சி, கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலத்தின் புதிய கற்றல் வளநிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. Read More »

‘நாமும் கரும்பும்’ செயற்றிட்டத்தின் கீழ், கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியில் கரும்புச் செய்கையை மீள ஆரம்பிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது.

வடக்கின் வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என நான் பல தடவைகள் வலியுறுத்தியுள்ளேன். இன்று கரும்பு மீள்நடுகைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையானது, எமது வளங்களை நாம் உரிய வகையில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம் என்ற நம்பிக்கையைத் தருகின்றது, என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் ‘கரும்புத்தோட்டம்’ பகுதியில் பல தசாப்தங்களின் பின்னர் கரும்புச் செய்கையை மீள ஆரம்பிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இன்று (23.06.2026) செவ்வாய்கிழமை காலை நடைபெற்றது. ‘நாமும் கரும்பும்’ செயற்றிட்டத்தின்

‘நாமும் கரும்பும்’ செயற்றிட்டத்தின் கீழ், கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியில் கரும்புச் செய்கையை மீள ஆரம்பிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. Read More »