சுகாதார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சேவைகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதன்போதே ஆளுநர் மேற்கண்டவாறு […]
