May 30, 2026

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின், வெசாக் செய்தி

கௌதம புத்த பெருமானின் மூன்று புனித நிகழ்வுகளையும் — பிறப்பு, ஞானோதயம், பரிநிர்வாணம் — நினைவுகூரும் வெசாக் திருநாளை முன்னிட்டு, வட மாகாணத்தில் வாழும் அனைத்து பௌத்த சகோதர சகோதரிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பௌத்த தர்மம் என்பது காலத்தை வென்று நிலைத்திருக்கும் அமைதியின் போதனையாகும். அன்பு, கருணை, மகிழ்ச்சி மற்றும் சமநோக்கு என்ற நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டு, கௌதம புத்த பெருமானால் போதிக்கப்பட்ட இந்த தர்மம் இன்றும் உலகம் முழுவதிலும் வழிகாட்டும் ஒளியாக […]

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின், வெசாக் செய்தி Read More »

“அடிமட்ட அமைப்புகள் சிறப்பாக இயங்கும் போது கிராமத்தின் வளர்ச்சியில் நாம் காத்திரமான வேறுபாட்டைக் காண முடியும் – கௌரவ ஆளுநர்

ஒரு கிராமத்தின் உண்மையான வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி என்பன, அக்கிராமத்தில் இயங்கும் அடிமட்ட அமைப்புகளின் சிறப்பான செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். இளவாலை ‘எழுச்சியகம்’ மக்கள் வலுவூட்டல் மையத்தின் 15ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கௌரவ ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், “அடிமட்ட அமைப்புகள் எவ்வளவு சிறப்பாக இயங்குகின்றனவோ, அப்போதே அக்கிராமத்தின் வளர்ச்சியில் நாம் காத்திரமான

“அடிமட்ட அமைப்புகள் சிறப்பாக இயங்கும் போது கிராமத்தின் வளர்ச்சியில் நாம் காத்திரமான வேறுபாட்டைக் காண முடியும் – கௌரவ ஆளுநர் Read More »

சமூக ஊடகங்களில் வெளிவருகின்ற விடயங்கள் தொடர்பில் இளம் சமுதாயத்தினர் மட்டுமல்லாது, அனைவரும் அதீத அவதானத்துடன் செயற்பட வேண்டும். – கௌரவ ஆளுநர்

சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களின் உண்மைத்தன்மையையும், அதன் பின்னணியையும் தீர்க்கமாக ஆராய்ந்த பின்னரே அவற்றிற்கு விருப்பம் தெரிவிக்கவோ அல்லது பகிரவோ வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்புவதால் சமூகத்தில் பல பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ‘சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூகம்’ எனும் தொனிப்பொருளின் கீழ், வடமாகாண இளையோர் மற்றும் சிறுவர் பங்கேற்புக்கான விசேட மதிப்பளித்தல் நிகழ்வு, யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் ‘சொண்ட்’

சமூக ஊடகங்களில் வெளிவருகின்ற விடயங்கள் தொடர்பில் இளம் சமுதாயத்தினர் மட்டுமல்லாது, அனைவரும் அதீத அவதானத்துடன் செயற்பட வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »