May 13, 2026

ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் அமைக்கப்பட்ட புதிய சமூகப் பராமரிப்பு நிலையம் கௌரவ ஆளுநரால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் தேவைகளுக்காக எங்களை நாடி வரத் தேவையில்லை. நாமே அவர்களை நாடிச் சென்று சேவையாற்ற வேண்டும். அப்படி அவர்கள் தங்களது தேவைகளுக்காக அரச அலுவலகங்களுக்கு வந்தாலும், ஒரு தடவை மட்டுமே வர வேண்டும். அவர்கள் மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கப்படாதவாறு அவர்களின் தேவைகளை நாம் முழுமையாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள சமூகப் பராமரிப்பு நிலையத்தை […]

ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் அமைக்கப்பட்ட புதிய சமூகப் பராமரிப்பு நிலையம் கௌரவ ஆளுநரால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. Read More »

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

வட மாகாணத்தின் விவசாயம், கடற்றொழில், காணி உரிமை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வொர்த் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (13.05.2026) புதன்கிழமை காலை கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள ‘றீச்சா பார்க்’ வளாகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் வட மாகாணத்தின் சமகால நிலவரங்கள், விவசாய மற்றும்

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. Read More »

வறுமை நிலையிலுள்ள விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் நெற் செய்கைக்கான காணிப் பங்கீடுகள் அமைய வேண்டும் – கௌரவ ஆளுநர்

சிறுபோக நெற்செய்கைக்காக அரச காணிகளைப் பங்கீடு செய்யும் போது, வறுமை நிலையில் உள்ள விவசாயிகளும் பயன்பெறும் வகையிலேயே அப்பங்கீடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (12.05.2026) செவ்வாய்க்கிழமை காலை மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்டச் செயலாளர் கே.கனகேஸ்வரன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கூட்டுறவுத்துறை கௌரவ பிரதி அமைச்சருமான உபாலி

வறுமை நிலையிலுள்ள விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் நெற் செய்கைக்கான காணிப் பங்கீடுகள் அமைய வேண்டும் – கௌரவ ஆளுநர் Read More »