March 16, 2026

வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன

வடக்கு மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தும் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் கௌரவ அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக யாழ். மாவட்டத்தில் 117.04 மில்லியன் ரூபா செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து […]

வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன Read More »

1970ஆம் ஆண்டுகளில் சிறப்பான நிலையில் கொடிகட்டிப் பறந்தது எமது மாகாணக் கூட்டுறவுத்துறை, தற்போது பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது – கௌரவ ஆளுநர்

அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகளைப் பயன்படுத்தி, உங்கள் ஆர்வத்தையும் முயற்சியையும் மூலதனமாக்கி எவ்வாறு சிறப்பாகச் செயற்படுகின்றார்கள் என்பதைப் பொறுத்தே, எதிர்காலத்தில் உங்களுக்கு மேலதிக உதவிகளை வழங்குவதற்கான தீர்மானங்கள் அமையும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையாளர் கூட்டுறவுச் சங்கத்தின் நெல் சுத்தப்படுத்தும் மற்றும் தரம் பிரிக்கும் இயந்திரத்தின் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (14.03.2026)

1970ஆம் ஆண்டுகளில் சிறப்பான நிலையில் கொடிகட்டிப் பறந்தது எமது மாகாணக் கூட்டுறவுத்துறை, தற்போது பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது – கௌரவ ஆளுநர் Read More »

திருமுறிகண்டியில், ‘அரியாத்தை பாரம்பரிய சைவ உணவகம்’ மற்றும் ‘மேட் இன் முல்லைத்தீவு’ ஆகிய இரு நிலையங்களும் கௌரவ ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது

சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சந்தைப்படுத்தல் சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில், உள்ளூர் உற்பத்திகளை யாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாகப் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒழுங்குகளை இலங்கைச் சுங்கத் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுத்து வருவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள புனிதப் பிரதேசமான திருமுறிகண்டியில், ‘அரியாத்தை பாரம்பரிய சைவ உணவகம்’ மற்றும் முல்லைத்தீவு உற்பத்திகளின் விற்பனை நிலையமான ‘மேட் இன் முல்லைத்தீவு’ (Made in Mullaitivu) ஆகிய

திருமுறிகண்டியில், ‘அரியாத்தை பாரம்பரிய சைவ உணவகம்’ மற்றும் ‘மேட் இன் முல்லைத்தீவு’ ஆகிய இரு நிலையங்களும் கௌரவ ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது Read More »

நவாலி கிழக்கு – கல்லுண்டாய் குடியேற்ற கிராமத்தில் மக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதற்கான விசேட செயற்றிட்ட அறிக்கை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நவாலி கிழக்கு – கல்லுண்டாய் குடியேற்ற வீட்டுத்திட்டக் கிராமத்தில் மக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதற்கான விசேட செயற்றிட்ட அறிக்கை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை (13.03.2026) கையளிக்கப்பட்டது. கல்லுண்டாயில் சுமார் 103 குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர். தாழ்நிலப் பகுதியான இங்கு மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுடன், நீண்ட நாட்களுக்கு நீர் தேங்கி நிற்கும் அவலமும் காணப்படுகின்றது. இதனால் மக்கள் பெரும்

நவாலி கிழக்கு – கல்லுண்டாய் குடியேற்ற கிராமத்தில் மக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதற்கான விசேட செயற்றிட்ட அறிக்கை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. Read More »