“மணல் மாபியாக்களுக்கு முற்றுப்புள்ளி; சீரான விலையில் தடையற்ற விநியோகம்!” – ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் அதிரடித் தீர்மானங்கள்.
வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராகப் பேணுவதற்கும், மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்குமான புதிய பொறிமுறையொன்றை உருவாக்கும் நோக்கிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (10.03.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. மணல் மற்றும் கிரவல் விநியோகத்தில் வடக்கு மாகாணத்தில் தற்போது எழுந்துள்ள சவால்கள் தொடர்பில் நேரில் ஆராய்ந்து தீர்வுகாண்பதற்காக, ஆளுநரால் விடுக்கப்பட்ட விசேட அழைப்பை ஏற்று, புவிச்சரிதவியல் […]
