January 2026

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா அவர்களின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா அவர்கள் பதவி ஆசையற்றவர்;, சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மிகச் சிறந்ததொரு மனிதரை நாம் இழந்திருக்கின்றோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் தலைவருமான காலஞ்சென்ற மாவை.சோ.சேனாதிராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாவிட்டபுரத்தில் அமைக்கப்பட்ட அன்னாரது […]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா அவர்களின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது Read More »

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு

போரின் இறுதிக் காலத்தில் நான் கிளிநொச்சி மாவட்டச் செயலராகக் கடமையாற்றியவன் என்ற வகையில், இப்பகுதி மக்கள் அனுபவித்த வேதனைகளை நான் நன்கறிவேன். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதே எமது நோக்கம். பணம் படைத்த எல்லோருக்கும் உதவுவதற்கு மனம் வருவதில்லை. ஆனால், சிங்கப்பூரைச் சேர்ந்த துரை குடும்பத்தினருக்கு அந்தத் தாயுள்ளம் வந்திருக்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். சிங்கப்பூரைச் சேர்ந்த திரு.திருமதி ரி.ரி.துரை குடும்பத்தினர் மற்றும் செல்வி சரசீஜா ராமன் ஆகியோரின்

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு Read More »

“ஏற்றுமதிப் பொருளாதாரமே வடக்கின் விடிவு; 1970களின் பொருளாதாரச் செழிப்பை மீண்டும் உருவாக்குவோம்!” – ஆளுநர் வேதநாயகன் சூளுரை

வடக்கு மாகாணத்தைப் போன்று வளமானதொரு மாகாணம் இலங்கையில் வேறில்லை. ஆனால், வறுமையில் முன்னிலையிலிருப்பது எமது மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களே. இந்த முரண்நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. 1970களில் மூடிய பொருளாதாரக் கொள்கை இருந்தபோது, வடக்கு மாகாணம் பொருளாதாரத்தில் உச்ச நிலையில் இருந்தது. தற்போதைய திறந்த பொருளாதாரச் சூழலில், நாம் மீண்டும் அந்த உன்னத நிலையை அடைய வேண்டுமானால், நேரடி ஏற்றுமதிப் பொருளாதாரமே நமக்கான ஒரே வழியாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்

“ஏற்றுமதிப் பொருளாதாரமே வடக்கின் விடிவு; 1970களின் பொருளாதாரச் செழிப்பை மீண்டும் உருவாக்குவோம்!” – ஆளுநர் வேதநாயகன் சூளுரை Read More »

கைப்பேசி பாவித்தவாறு பேருந்தைச் செலுத்திய சாரதி பணிநீக்கம்;: மாணவர்களை ஏற்றாத சாரதிக்கு கடும் எச்சரிக்கை!’ – வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அதிரடி

பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய தனியார் பேருந்துச் சாரதி ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற மற்றொரு பேருந்துச் சாரதி மற்றும் நடத்துனருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 25.01.2026 அன்று காலை 9.45 மணியளவில் மன்னாரிலிருந்து புறப்பட்ட தனியார்

கைப்பேசி பாவித்தவாறு பேருந்தைச் செலுத்திய சாரதி பணிநீக்கம்;: மாணவர்களை ஏற்றாத சாரதிக்கு கடும் எச்சரிக்கை!’ – வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அதிரடி Read More »

“காலநிலைச் சவால்களை வென்று நிலைபேறான விவசாயத்தை நோக்கி!” – ஒட்டுசுட்டான் விவசாயக் கண்காட்சியை ஆளுநர் பார்வையிட்டார்

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில், ஒட்டுசுட்டான் விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான விவசாயக் கண்காட்சியை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (27.01.2026) மாலை நேரில் சென்று பார்வையிட்டார். ‘காலநிலைச் சவால்களை எதிர்கொண்டு நிலைபேறான விவசாயத்தை நோக்கி’ எனும் காலத்துக்கு ஏற்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கண்காட்சி, நேற்று (26.01.2026) திங்கட்கிழமை ஆரம்பமாகி, இன்றுடன் நிறைவுபெற்றது. கண்காட்சியைப் பார்வையிட்ட ஆளுநருக்கு,

“காலநிலைச் சவால்களை வென்று நிலைபேறான விவசாயத்தை நோக்கி!” – ஒட்டுசுட்டான் விவசாயக் கண்காட்சியை ஆளுநர் பார்வையிட்டார் Read More »

2026ஆம் ஆண்டு வடக்கை பொறுத்தவரையில் ஒரு ‘அபிவிருத்தி ஆண்டாக’ அமையவுள்ளது. – முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்

டித்வா புயல் இடர்பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டு, பிரதேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்கியுள்ளதுடன், அப்பணிகளை மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று செவ்வாய்க்கிழமை (27.01.2026) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இணைத்தலைவராக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:

2026ஆம் ஆண்டு வடக்கை பொறுத்தவரையில் ஒரு ‘அபிவிருத்தி ஆண்டாக’ அமையவுள்ளது. – முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார் Read More »

மாங்குளம் ஆதார மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட விடுதிகள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டன

வடக்கு மாகாணத்துக்கு ஏனைய மாகாணங்களிலிருந்தே சுகாதாரத் துறைக்கான உத்தியோகத்தர்கள் வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகளை நாம் முறையாகப் பூர்த்தி செய்து கொடுக்கும்போதே, அவர்களிடமிருந்து எமது மக்களுக்கான முழுமையான சேவையை பெற்றுக்கொடுக்க முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் ஆதார மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட விடுதிகளைப் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (27.01.2026) மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விடுதிகளைத் திறந்து வைத்து உரையாற்றும்

மாங்குளம் ஆதார மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட விடுதிகள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டன Read More »

இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் 77ஆவது குடியரசு தின விசேட கலாசாரப் பெருவிழா நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலாசாரப் பெருவிழா, இன்று திங்கட்கிழமை (26.01.2026) மாலை யாழ்ப்பாணம், திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விசேட அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி அவர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த மாலை நேர நிகழ்வில், கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான வண்ணமயமான

இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் 77ஆவது குடியரசு தின விசேட கலாசாரப் பெருவிழா நடைபெற்றது. Read More »

தற்போதைய அரசாங்கம் போல வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி; மக்களின் வாழ்க்கைத் தரம் தொடர்பில் இதற்கு முன்னர் அக்கறை காண்பிக்கப்படவில்லை – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

போர் முடிவுற்ற கடந்த 16 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களை விட, தற்போதைய அரசாங்கம் வடக்கு மாகாணம் தொடர்பில் கூடுதல் கரிசனையுடனும், அக்கறையுடனும் செயற்படுகின்றது. வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் தொடர்பில் இவ்வாறானதொரு அக்கறை இதுவரை காண்பிக்கப்படவில்லை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய இசபெல் மார்ட்டின் அவர்களுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும்

தற்போதைய அரசாங்கம் போல வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி; மக்களின் வாழ்க்கைத் தரம் தொடர்பில் இதற்கு முன்னர் அக்கறை காண்பிக்கப்படவில்லை – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

தர்மக்கேணி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் ஒருங்கிணைந்த முறையில் பயிர்ச்செய்கை

பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் கிளிநொச்சி, தர்மக்கேணி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் விவசாயிகள் பயிற்சி நிலையம் தர்மக்கேணியில் 21.01.2026 அன்று காலை 09.30 மணியளவில் விவசாயப் போதனாசிரியர் திரு.க.ஜனார்த்தனன் தலைமையில் ‘ஒருங்கிணைந்த முறையில் பயிர்ச்செய்கை’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலக பாடவிதான உத்தியோகத்தர்(பூங்கனியியல்), பாடவிதான உத்தியோகத்தர்(மறுவயற்பயிர்), பாடவிதான உத்தியோகத்தர்(பயிர்பாதுகாப்பு), விவசாயப் போதனாசிரியர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர், சோரன்பற்று கிராமசேவை உத்தியோகத்தர் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இயற்கை

தர்மக்கேணி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் ஒருங்கிணைந்த முறையில் பயிர்ச்செய்கை Read More »