January 2026

“எங்கள் கரங்கள் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும்; ஊழல்வாதிகளுக்கு இந்த அரசில் இடமில்லை!” – ஆளுநர் வேதநாயகன்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ததற்கான பிரதான காரணமே, இதுவொரு ஊழலற்ற நிர்வாகம் என்பதால்தான். இந்த அரசாங்கத்துக்கு யாருடனும் இரகசியக் கொடுக்கல் வாங்கல்களோ கிடையாது. எனவே, ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதுடன், தவறிழைப்பவர்களுக்கு எதிராகத் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேசிய விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தின் முதலாவது […]

“எங்கள் கரங்கள் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும்; ஊழல்வாதிகளுக்கு இந்த அரசில் இடமில்லை!” – ஆளுநர் வேதநாயகன் Read More »

முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் பிரதமர் ஹரிணி அவர்கள் விசேட அக்கறை செலுத்தி வருகின்றார். – கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

இலங்கையிலுள்ள முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, அதனை ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தற்போதைய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாண்புமிகு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் இதில் விசேட அக்கறை செலுத்தி வருகின்றார். இத்திட்டம் முழுமையடையும்போது முன்பள்ளி தொடர்பான பல குறைபாடுகள் தீர்க்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். காரைநகர், புதுவீதியில் அமைந்துள்ள அம்பாள் முன்பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (25.01.2026) காலை 9

முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் பிரதமர் ஹரிணி அவர்கள் விசேட அக்கறை செலுத்தி வருகின்றார். – கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு – 2026 ஆரம்பம்; வடக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் ‘3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு – 2026’ இன்று சனிக்கிழமை (24.01.2026) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விசேட அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2024ஆம் ஆண்டில் முதலாவது சட்ட மாநாட்டை நடத்திய யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை,

3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு – 2026 ஆரம்பம்; வடக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு Read More »

தர்மபுரம் பிரதேசத்தில் காளான் செய்கை அறுவடை விழாவும், காளான் கொட்டகை திறப்பு விழாவும்

கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் விவசாயப்போதனாசிரியர் பிரிவில் தர்மபுரம் 10ஆம் யுனிற் எனும் இடத்தில் திரு.ப.யோகநாதன் என்பவரின் காளான் அறுவடை விழாவும் புதிய காளான் கொட்டகை திறப்பு விழாவும் விவசாயப் போதனாசிரியர் திருமதி.க.சரண்யா தலைமையில் 20.01.2026 அன்று மு.ப.10.30 மணியளவில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் மாகாண விவசாயப்பணிப்பாளர் அவர்களும் மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர், பிரதி விவசாயப் பணிப்பாளர், மாகாண விவசாயத்திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர், பாடவிதான உத்தியோகத்தர்கள், கண்டாவளை பிரதேச விவசாயப் போதனாசிரியர்கள், கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி

தர்மபுரம் பிரதேசத்தில் காளான் செய்கை அறுவடை விழாவும், காளான் கொட்டகை திறப்பு விழாவும் Read More »

மாங்குளம் பேருந்து நிலையத்தை, முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய மையப் புள்ளியாகத் திகழும் மாங்குளம் பேருந்து நிலையத்தை, முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு ஏதுவான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். மாங்குளம் பேருந்து நிலைய அபிவிருத்தி தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையால், தயாரிக்கப்பட்ட திட்டவரைவு பற்றி ஆராயும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (23.01.2026) மாலை நடைபெற்றது. மாங்குளம் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் என்பன

மாங்குளம் பேருந்து நிலையத்தை, முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை. Read More »

வர்த்தகக் கண்காட்சிகள் வெறும் பொருட்காட்சிகள் மட்டுமல்ல. அவை பொருளாதார வளர்ச்சியின் இயந்திரங்களாகும். – யாழ் வர்த்தக கண்காட்சியில் கௌரவ ஆளுநர்

யாழ்ப்பாணத்தை இலங்கையின் பொருளாதாரத்தில் வெறுமனே ஒரு பங்காளராக மட்டுமல்லாமல், புத்தாக்கம் மற்றும் வர்த்தகத்தின் ஒரு உந்துசக்தியாக முன்னிறுத்துவதே எமது கூட்டு இலக்காகும். அதற்கு இந்தக் கண்காட்சியே சிறந்த சான்றாகும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தின் வர்த்தகப் பெருவிழாவான ‘யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026’, 16வது ஆண்டாக இம்முறை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை (23.01.2026) காலை யாழ்ப்பாணம் ரில்கோ

வர்த்தகக் கண்காட்சிகள் வெறும் பொருட்காட்சிகள் மட்டுமல்ல. அவை பொருளாதார வளர்ச்சியின் இயந்திரங்களாகும். – யாழ் வர்த்தக கண்காட்சியில் கௌரவ ஆளுநர் Read More »

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வடக்கில் முதலீட்டுக்கான மிகச் சாதகமான சூழல் நிலவுகின்றது. – கௌரவ ஆளுநர்

நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. எனவே, அப்பிரதேச மக்கள் மற்றும் சுற்றுலாவிகளின் நலன் கருதி, நெடுந்தீவு இறங்குதுறையைப் புனரமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார். வடக்கு மாகாண ஆளுநருக்கும், இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் வீபே டி போர் (Wiebe de Boer) அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வச் சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வடக்கில் முதலீட்டுக்கான மிகச் சாதகமான சூழல் நிலவுகின்றது. – கௌரவ ஆளுநர் Read More »

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலைய பிரதம பிரதிநிதிக்கும், வடக்கு ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது

வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை மேம்பாடு மற்றும் கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் (JICA) தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார். இலங்கையிலுள்ள ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்தின் பிரதம பிரதிநிதி (Country Director) கென்ஜி குரோனுமாவுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (21.01.2026) மாலை நடைபெற்றது. இச்சந்திப்பின்போது, ஜெய்க்கா நிறுவனம் கடந்த காலங்களில்

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலைய பிரதம பிரதிநிதிக்கும், வடக்கு ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது Read More »

“40 வருடங்களின் பின் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு மீண்டும் உயிர்; புலம்பெயர் உறவுகள் முதலீடு செய்ய முன்வர வேண்டும்!” – அடிக்கல் நடுகை விழாவில் ஆளுநர் அழைப்பு

அரச – தனியார் கூட்டுப் பங்காண்மை மூலமாக முதலீடுகளை ஈர்த்து, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை முழுமையாக இயக்கப்படவுள்ளதால், புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் இவ்வாறான நிலையான உற்பத்திகளில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். இது உங்களுக்கான மிகச் சிறந்ததொரு வாய்ப்பாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு விடுத்தார். போர்ச் சூழல் காரணமாக 1985ஆம் ஆண்டு மூடப்பட்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்காக, அரசாங்கத்தால் முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

“40 வருடங்களின் பின் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு மீண்டும் உயிர்; புலம்பெயர் உறவுகள் முதலீடு செய்ய முன்வர வேண்டும்!” – அடிக்கல் நடுகை விழாவில் ஆளுநர் அழைப்பு Read More »

“முதலீட்டாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய வரலாறு முடிகிறது; வடக்கில் முதலீட்டுக்கு உகந்த பொற்காலம் ஆரம்பம்!” – உச்சிமாநாட்டில் ஆளுநர் பிரகடனம்

கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் முதலீடுகளைச் செய்ய வந்தவர்கள், சாதகமற்ற சூழல் காரணமாகத் திரும்பிச் சென்றதே வரலாறாக இருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ நடைபெறுகின்றமை மிகப் பொருத்தமானது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு, தேசிய மொத்த உற்பத்திக்கான வடக்கின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண வரலாற்றில்

“முதலீட்டாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய வரலாறு முடிகிறது; வடக்கில் முதலீட்டுக்கு உகந்த பொற்காலம் ஆரம்பம்!” – உச்சிமாநாட்டில் ஆளுநர் பிரகடனம் Read More »