‘நாளைய தலைவர்களை உருவாக்குதல்’ தேசிய வேலைத் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்குரிய ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.
நடத்தை மற்றும் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி எதிர்காலத்தில் இந்த நாட்டை சிறந்த தலைமைத்துவப்பண்புள்ளவர்கள் ஆட்சி செய்யவேண்டும் என்பதற்காக மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாகவே ‘நாளைய தலைவர்களை உருவாக்குதல்’ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் கீழ் ‘நாளைய தலைவர்களை உருவாக்குதல்’ (NEXTGEN LEADERS) தேசிய வேலைத் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்குரிய ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் இன்று வியாழக்கிழமை காலை […]
