ஆசிரியர்கள் ஓய்வுபெற்று ஒரு மாதத்துககுள் ஓய்வூதியம் கிடைப்பதற்கான ஒழுங்குகளைச் செய்ய வேண்டும் – கௌரவ ஆளுநர் அறிவுறுத்தினார்
இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் இலங்கை அதிபர் சேவைச் சங்கம் என்பனவற்றுக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை (22.09.2025) நடைபெற்றது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகளை இன்னும் விரைவாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதேவேளை, ஒழுக்காற்று விசாரணைகளும் அதிகரித்துச் செல்வதாகவும் கல்வி அமைச்சின் செயலரால் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், வலய இடமாற்றச் சபையில் இருக்கும் தொழிற்சங்கத்தின் அதே பிரதிநிதி மேன்முறையீட்டுச் […]