September 2025

அரச முதியோர் இல்லத்தில் சமூகத்தொடர்பு மைய (Community Interaction Hub) கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட்து

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் இயங்கிவரும் கைதடியில் அமைந்துள்ள அரச முதியோர் இல்லத்திற்காக அமைக்கப்படவுள்ள சமூகத்தொடர்பு மைய (Community Interaction Hub) கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா 24.09.2025 அன்று நடைபெற்றது. இந்த சமூகத்தெடர்பு மையம் ஆனது 37.57 மில்லியன் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை ஊடாக மாகாண சமூக சேவைகள் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து வடக்கு மாகாண மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண […]

அரச முதியோர் இல்லத்தில் சமூகத்தொடர்பு மைய (Community Interaction Hub) கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட்து Read More »

கழிவு நீர் சுத்திகரிப்புத் தொகுதி (Sewerage Treatment Plant) கட்டுமாணப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது கைச்சாத்திடப்பட்டது

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் ஊடாக (PSDG) மாவட்ட பொது வைத்தியசாலை-மன்னார் மற்றும் மாவட்ட பொது வைத்தியசாலை-முல்லைத்தீவு ஆகிய வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படவிருக்கும் கழிவு நீர் சுத்திகரிப்புத் தொகுதி (Sewerage Treatment Plant) கட்டுமாணப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது (MOU) தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை, பிரதம செயலாளர் செயலகம், மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் ஆகியவற்றுக்கிடையில் பிரதம செயலாளர் செயலகத்தில் 23.09.2025 அன்று கைச்சாத்திடப்பட்டது. இந் நிதியீட்டத்தின் மூலம் மாவட்ட பொது வைத்தியசாலை-மன்னாருக்கு 190Mn ரூபா செலவிலும் மாவட்ட

கழிவு நீர் சுத்திகரிப்புத் தொகுதி (Sewerage Treatment Plant) கட்டுமாணப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது கைச்சாத்திடப்பட்டது Read More »

டெங்கு கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு நடைபெற்றது

யாழ்ப்பாண மாவட்டத்தில் பருவப் பெயர்ச்சி மழை காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கில் டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக யாழ்மாவட்ட செயலகத்தால் டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக வடக்கு மாகாணசபை வளாகத்தில் அமைந்துள்ள திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் மத்தியில் டெங்கு கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு 23.09.2025 அன்று பிரதம செயலாளர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த செயலமர்வில் சமூக மருத்துவர் வைத்தியகலாநிதி நாகராசா பரமேஸ்வரன் அவர்களும் வைத்தியகலாநிதி துவாரகா சுதன்

டெங்கு கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு நடைபெற்றது Read More »

புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட (திறந்த) இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளிற்கான நிறுவனமயப்படுத்தப்பட்ட பயிற்சித் திட்டம்

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தால் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளிற்கான நிறுவனமயப்படுத்தப்பட்ட பயிற்சித் திட்டத்தின் தொடர்ச்சியாக மாகாண சபைகளில் பயிற்சி பெறுவதற்கான அறிமுக நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி.தனுஜா முருகேசன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் 22.09.2025 அன்று நடைபெற்றது. செப்டம்பர் 22 முதல் 26 வரை நடைபெறவுள்ள இப் பயிற்சி திட்டத்தில் வடக்கு மாகாண சபையில் உள்ள பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் தொடர்பிலான

புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட (திறந்த) இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளிற்கான நிறுவனமயப்படுத்தப்பட்ட பயிற்சித் திட்டம் Read More »

இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் தாக்க மதிப்பீடு, அடுத்த ஆண்டு நிச்சயம் மேற்கொள்ளப்பட வேண்டும் – ஆளுநர்

2026ஆம் ஆண்டுக்குரிய திட்டங்களைத் தயாரிக்கும்போது மக்களுடன் கலந்துரையாடி அதனை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தினார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை (25.09.2025) நடைபெற்றது. இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் தாக்க மதிப்பீடு அடுத்த ஆண்டு நிச்சயம் மேற்கொள்ளப்பட

இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் தாக்க மதிப்பீடு, அடுத்த ஆண்டு நிச்சயம் மேற்கொள்ளப்பட வேண்டும் – ஆளுநர் Read More »

வடக்கு மாகாணத்திற்கு புதிய பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) நியமனம்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி ஆக என்.எஸ்.ஆர்.சிவரூபன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (25.09.2025) அவர் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.

வடக்கு மாகாணத்திற்கு புதிய பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) நியமனம் Read More »

மாங்குளம் மத்திய பேருந்து நிலையத்தை செயற்படுத்துவது தொடர்பில் ஆளுநர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் களவிஜயம் மேற்கொண்டனர்

மாங்குளம் நகரில் அமைக்கப்பட்டுள்ள மத்திய பேருந்து நிலையத்தை செயற்படுத்துவது தொடர்பில் ஆராயும் களப்பயணமும் கலந்துரையாடலும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று புதன்கிழமை (24.09.2025) நடைபெற்றது. மத்திய பேருந்து நிலையத்தை ஆளுநர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர். மத்திய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்வதற்கான ஒழுங்குகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆராயப்பட்டது. அதற்கான சாத்தியமான வழிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாங்குளத்திலுள்ள வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களத்தின் தலைமை

மாங்குளம் மத்திய பேருந்து நிலையத்தை செயற்படுத்துவது தொடர்பில் ஆளுநர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் களவிஜயம் மேற்கொண்டனர் Read More »

கிளிநொச்சி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள பெண்நோயியல் விடுதியின் சேவைக்கான பகுதி கௌரவ ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நெதர்லாந்து அரசின் நிதி உதவியில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் பராமரிப்பு சிறப்பு மையம் தொடர்பில் தேவையற்ற வதந்திகள் பரப்படுகின்றன. இந்த மருத்துவமனையை முழு வீச்சில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஓர் அங்கமாக இன்றைய நிகழ்வு அமைந்துள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட பொதுமருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் பராமரிப்பு சிறப்பு மையத்தின் பெண்நோயியல் விடுதியின் சேவைக்கான

கிளிநொச்சி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள பெண்நோயியல் விடுதியின் சேவைக்கான பகுதி கௌரவ ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் குடிநீர் விநியோகத் திட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் குடிநீர் விநியோகத் திட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (23.09.2025) நடைபெற்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் யாழ். மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகத் திட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. திட்டத்தின் சில தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. எதிர்காலத்தில் யாழ்ப்பாண நகரத்தின் கழிவுநீர் முகாமைத்துவம் தொடர்பான திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் குடிநீர் விநியோகத் திட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் Read More »

அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழுவுக்கும் ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தின் நிலைத்த நீடித்த அபிவிருத்திக்காக முதலீட்டாளர்களை வரவேற்கின்றோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களுக்குப் பொறுப்பான செயலர் அந்தோனி பெர்னார்ட்டிடம் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (23.09.2025) அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழுவுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக வந்துள்ளதாகவும், பல தரப்பினரையும் சந்தித்துள்ளதாகவும் அமெரிக்கத் தூதரகத்தின் செயலர்

அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழுவுக்கும் ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. Read More »