June 2025

உலக வை.எம்.சி.ஏ கொடி வாரத்தினை முன்னிட்டு யாழ். மாவட்ட வை.எம்.சி.ஏ.யினரால் கொடி வாரத்தின் கொடி வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

உலக வை.எம்.சி.ஏ. வாரம் கடந்த 1ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 6ஆம் திகதி வரை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், யாழ். மாவட்ட வை.எம்.சி.ஏ.யினரால் அதனை முன்னிட்டு நடத்தப்படும் கொடி வாரத்தின் கொடி வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு 04.06.2025 அன்று புதன் கிழமை வழங்கி வைக்கப்பட்டது.  

உலக வை.எம்.சி.ஏ கொடி வாரத்தினை முன்னிட்டு யாழ். மாவட்ட வை.எம்.சி.ஏ.யினரால் கொடி வாரத்தின் கொடி வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. Read More »

சமூகசேவை பராமரிப்பு நிலையங்களின் தரத்தை உயர்த்துதல் மற்றும் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் ‘செயற்பாட்டுக்கைநூல்’ தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல்

சமூகசேவை பராமரிப்பு நிலையங்களின் தரத்தை உயர்த்துதல் மற்றும் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் ‘செயற்பாட்டுக்கைநூல்’ தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் 03.06.2025 அன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன் இந்தச் செயற்பாட்டுக்கைநூல் தொடர்பாக விளக்கமளித்தார். ஆசிய மன்றத்தின் உதவியுடன் இது உருவாக்கப்பட்டுள்ளதாக அவர்

சமூகசேவை பராமரிப்பு நிலையங்களின் தரத்தை உயர்த்துதல் மற்றும் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் ‘செயற்பாட்டுக்கைநூல்’ தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் Read More »

பெறுமதி சேர் வரி (VAT ) தொடர்பான செயலமர்வு

வட மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாகாண கூட்டுறவு பயிற்சி நிறுவனத்தின் ஒழுங்கமைப்புடன் 2025.06.03-ம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் மு.ப. 9.00 மணிக்கு வட பிராந்திய இறைவரித் திணைக்களத்தின் வழிகாட்டுதலில் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரும் (வ.மா) திரு. ந. திருலிங்கநாதன் அவர்களினால் பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பான செயலமர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. வட மாகாணத்தில் கூட்டுறவுச் சங்கங்களினால் பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பான

பெறுமதி சேர் வரி (VAT ) தொடர்பான செயலமர்வு Read More »

பயிர்மாற்றீட்டு செய்கையில் மேற்கொள்ளப்பட்ட உழுந்து அறுவடை விழா

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதிப்பங்களிப்பின் கீழ் வயல் நிலங்களில் அவரையினப் பயிர்ச்செய்கையினை ஊக்குவிக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கோம்பாவில் விவசாயப் போதனாசிரியர் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட பயிர்மாற்றீட்டுச் செய்கையின் உழுந்து அறுவடை வயல் விழா நிகழ்வானது கரியல் வயல் என்னும் இடத்தில் 27.05.2025ம் திகதி காலை 9.00 மணியளவில் தொழில்நுட்ப உதவியாளர் செல்வி கெ. மதுர்சிகா தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி கிருபவதனி

பயிர்மாற்றீட்டு செய்கையில் மேற்கொள்ளப்பட்ட உழுந்து அறுவடை விழா Read More »

குரும்பசிட்டி பொன்.பரமானந்தர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், ‘பரமானந்தம்’ மலர் வெளியீடும்

வடக்கில் ஒவ்வொரு ஆண்டும் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன. தரம் 1 அனுமதிக்காக வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. இது எமக்கு ஆபத்தான நிலைமை. அனைவரும் இதனைக் கவனத்திலெடுக்கவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கைவிடுத்தார். குரும்பசிட்டி பொன்.பரமானந்தர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், ‘பரமானந்தம்’ மலர் வெளியீடும் பாடசாலை அதிபர் க.வசந்தரூபன் தலைமையில் 31.05.2025 அன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பரமானந்தம் நூலை வெளியிட்டு வைத்த ஆளுநர், முன்னாள்

குரும்பசிட்டி பொன்.பரமானந்தர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், ‘பரமானந்தம்’ மலர் வெளியீடும் Read More »

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில், ‘யாழ்ப்பாணம் முதலீடு மற்றும் வர்த்தக மன்றம் – 2025’ தலைப்பிலான கலந்துரையாடல்

எமது அதிகாரிகள் ஒரு சிலர் முதலீட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கால் இழுத்தடிக்கின்றார்கள் என்பது தெரியும். அதற்காக எமது மாகாணத்துக்கு முதலீடு செய்ய வரும் உங்கள் முயற்சிகளை தயவு செய்து கைவிட்டுவிடாதீர்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை முன்வைத்தார். இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில், ‘யாழ்ப்பாணம் முதலீடு மற்றும் வர்த்தக மன்றம் – 2025’ தலைப்பிலான கலந்துரையாடல் அரியாலை ஜே ஹொட்டலில் 30.05.2025 அன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில், ‘யாழ்ப்பாணம் முதலீடு மற்றும் வர்த்தக மன்றம் – 2025’ தலைப்பிலான கலந்துரையாடல் Read More »

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – மே 2025

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் 30.05.2025 அன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபனின் வரவேற்புரையைத் தொடர்ந்து ஆளுநர் அவர்கள் உரையாற்றினார். நடப்பு ஆண்டின் மே மாதமும் நிறைவுகின்றது. மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விரைவாகவும் – வினைத்திறனாகவும் செலவு செய்யவேண்டும்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – மே 2025 Read More »

நெற் பயிற்செய்கையில் பன்றி நெல்லை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

சிறுபோகம் 2025 இல் வயல் நிலங்களில் பரவலாக களை நெல் இனங்காணப்பட்டதனை அடுத்து 23.06.2025 – 27.06.2025 ஆகிய தினங்கள் விவசாயத் திணைக்களத்தினால் களை நெல் கட்டுப்பாட்டு வாரமாக அறிமுகப்படுத்தப்பட்டு நாடளாவிய நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் பல்வேறுபட்ட பயிற்சி வகுப்புக்கள், விழிப்புணர்வு நிகழ்வுகள், மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இந் நிகழ்ச்சித் திட்டம் வடக்கு மாகாணத்திலும் நடை பெற்று வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் புளியம்பொக்கணை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் நெற் பயிற்செய்கையில் பன்றி நெல்லை கட்டுப்படுத்துவது தொடர்பான

நெற் பயிற்செய்கையில் பன்றி நெல்லை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு Read More »