August 2024

யாழ் மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் கோவிலை அண்மித்து அமைந்துள்ள மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது. வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள், யாழ் மாநகர சபை ஆணையாளர், உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மடம் அறக்கட்டளையின் பொறுப்பாளர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குரியதாக கருதப்படும் மந்திரி மனை, […]

யாழ் மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் Read More »

வட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் இன்று வழங்கிவைப்பு

வடக்கு மாகாணத்தில் பயிற்சி பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் 10/08/2024 அன்று வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ரோட்டரி கழகத்தின் அனுசரணையுடன் ஆறுதல் அமைப்பினரால் பயிற்றுவிக்கப்பட்ட 337 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இதன்போது டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக நிகழ்வில் கலந்துச் சிறப்பித்தார். இதன்போது உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள்,  “குழந்தைகளை உருவாக்குவது என்பது பாரிய ஒரு பணி. ஒரு

வட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் இன்று வழங்கிவைப்பு Read More »

பரசூட் தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை தொடர்பான வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்ட திணைக்களத்தின் கீழ் உள்ள அக்கராயன் விவசாயப்போதனாசிரியர் பிரிவல் பரசூட் தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை தொடர்பான வயல் விழா நிகழவானது 07.08.2024 அன்று காலை 09 மணியளவில் கந்தையா சௌந்தரராசா,அக்கராயன் என்னும் முகவரியில் உள்ள அவரது வயலினில் சிரேஸ்ட பாடவிதான உத்தியோகத்தர் திரு.சோ. விஜயன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.ம.விஜிதரன் (கமநல அபிவருத்தி உத்தியோகத்தர்,அக்கராயன் குளம்)அவர்கள் கலந்து கொண்டதுடன்,பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர்,பாடவிதானஉத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், பகுதிக்குரிய கிராம சேவகர்,

பரசூட் தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை தொடர்பான வயல் விழா நிகழ்வு Read More »

வரிசை முறையிலான பயறுச் செய்கை – வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் ஸ்கந்தபுரம் விவசாயப்போதனாசிரியர் பிரிவல் வரிசை முறையிலான பயறுச் செய்கை தொடர்பான வயல் விழா நிகழவானது 07.08.2024 அன்று காலை 11 மணியளவில் ம.புவநேந்தின் அவர்களினது தோட்டத்தில் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.சூ.ஜெகதிஸ்வரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.ம.விஜிதரன் (கமநல அபிவருத்தி உத்தியோகத்தர்,அக்கராயன் குளம்) அவர்கள் கலந்து கொண்டதுடன், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், பகுதிக்குரிய கிராம சேவகர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டமை

வரிசை முறையிலான பயறுச் செய்கை – வயல் விழா நிகழ்வு Read More »

பிரதேச பண்பாட்டு விழா – 2024

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் பண்பாட்டு விழா நிகழ்வுகள் பல பிரதேச செயலகங்களில் முன்னெடுக்கப்பட்டன. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பண்பாட்டு விழா பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு விழா 03.07.2024 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியின் ஆருக்.ஷ்;கிருத்திக் கலையரங்கத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில்

பிரதேச பண்பாட்டு விழா – 2024 Read More »

யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2024 இன்று கோலாகலமாக ஆரம்பமாகியது

‘யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா – 2024’ இன்று (09/08/2024) காலை யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் ஆரம்பமாகியுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்கள் புத்தகத் திருவிழாவை ஆரம்பித்து வைத்தார். இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தினமும் காலை 10.00 மணிமுதல் மாலை 8.00 மணிவரை இந்த புத்தகக்கண்காட்சியும் விற்பனையும் நடைபெற உள்ளது. யாழ்ப்பாண தொழில்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவில் இருபதுக்கும் மேற்பட்ட புத்தக விற்பனை

யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2024 இன்று கோலாகலமாக ஆரம்பமாகியது Read More »

வடக்குமாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என கௌரவ ஆளுநர்பணிப்புரை

வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (08/08/2024) நடைபெற்றது. கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். மாகாண சுகாதார துறையில் காணப்படும் சிக்கல்கள், மேற்கொள்ள வேண்டிய பொறிமுறை மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவை ஸ்தாபிக்குமாறு மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த கௌரவ ஆளுநர் அவர்கள்,

வடக்குமாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என கௌரவ ஆளுநர்பணிப்புரை Read More »

வடக்கு மாகாண வரலாற்றில் பாரிய குடிநீர் திட்டத்தை மக்கள் மயப்படுத்தியஜனாதிபதிக்கு, ஆளுநர் நன்றி தெரிவிப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி  அனுசரணையில், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (02/08/2024) திறந்து வைக்கப்பட்டது. இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் 266 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சர் ஜீவன் தொண்டமான், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்

வடக்கு மாகாண வரலாற்றில் பாரிய குடிநீர் திட்டத்தை மக்கள் மயப்படுத்தியஜனாதிபதிக்கு, ஆளுநர் நன்றி தெரிவிப்பு Read More »

உலர் வலயத்தில் கறுவா பயிர்ச்செய்கை அறிமுகம் மற்றும் பதப்படுத்தல் செயன்முறை விளக்க நிகழ்வு

நிகழ்வானது 25.07.2024 அன்று மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் வட்டக்கச்சியில் “வளம் தரும் வாசனை பயிரை வரவேற்போம்” எனும் தொனிப்பொருளில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி.சூ.ஜெகதீஸ்வரி தலைமையில் காலை 10 மணிக்கு இடம்பெற்றது. 1/4 ஏக்கர் விஸ்தீரணத்தில் செய்கையை மேற்கொள்ளும் நோக்கில் குறித்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் வைபவ ரீதியான கறுவாச்செடி நடுகை, அதன் பதப்படுத்தல் தொடர்பான செயல்முறை விளக்கங்கள், பயிற்செய்கை முகாமைத்துவம் தொடர்பான தெளிவு படுத்தல்கள் மற்றும் கருவாவிலிருந்து சிற்றுண்டி, தேநீர் தயாரிப்பு

உலர் வலயத்தில் கறுவா பயிர்ச்செய்கை அறிமுகம் மற்றும் பதப்படுத்தல் செயன்முறை விளக்க நிகழ்வு Read More »

பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியம்

பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியம் 2023 ஆம் ஆண்டு தொடக்கம் செப்ரெம்பர் மாதத்திலிருந்து நாடு முழுவதும் இரண்டாண்டு காலப்பகுதியில் ஆறு இடங்களுக்கு தனது பயணத்தை மேற்கொள்கின்றது அதன் ஜந்தாம் கட்டமாக மன்னார் நகர மண்டபத்தில் செப்ரெம்பர் 4 முதல் 11 வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது அதுதொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் 29.07.2024 திகதி அன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கல்வி அமைச்சின் செயலாளர், மகளிர் விவகார

பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியம் Read More »