August 2024

யாழ் மத்திய பஸ் நிலையத்தில் பொலிஸார்திடீர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (28/08/2024) நடைபெற்றது. மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், எதிர்காலத்தில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது. குடிநீர் பிரச்சினை, வீதி சீரின்மை, காணி பிணக்குகள், போக்குவரத்து சிக்கல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பான் முறைப்பாடுகள் […]

யாழ் மத்திய பஸ் நிலையத்தில் பொலிஸார்திடீர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

மக்கள் தங்களுக்கான சேவைகளை ஒரே இடத்தில் இலகுவில் பெற்றுக்கொள்ள கூடிய வகையில் நகரத் திட்டமிடல்கள் அமைய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

தேசிய பௌதீக திட்டமிடல் தொடர்பான விசேட கலந்துரையாடல் வட மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (27/08/2014) நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் , கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், தேசிய  பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து

மக்கள் தங்களுக்கான சேவைகளை ஒரே இடத்தில் இலகுவில் பெற்றுக்கொள்ள கூடிய வகையில் நகரத் திட்டமிடல்கள் அமைய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

பரசூட் மற்றும் இயந்திர தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்ட குமரபுரம் விவசாயப்போதனாசிரியர் பிரிவல் பரசூட் மற்றும் இயந்திர தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை வயல் விழா நிகழ்வானது 26.08.2024 அன்று காலை 10.00 மணியளவில் T.மகேஸ்வரன்(குணா),குமரபுரம்,பரந்தன் என்னும் முகவரியில் உள்ள அவரது வயலில் வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் வழிகாட்டலில் விவசாயப் போதனாசிரியர் திருமதி.N.சரண்ஜா அவர்களின் தலைமையில் யாழ் பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்கள் மற்றும் கமநல சேவைகள் நிலையத்தின் அலுவலர்களுடன் இணைந்து நடாத்தப்பட்டது . இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி.சூ.ஜெகதீஸ்வரி

பரசூட் மற்றும் இயந்திர தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை வயல் விழா நிகழ்வு Read More »

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் பொதியிடல் தொழில்நுட்பப் பயிற்சியானது வழங்கப்பட்டது

வட மாகாணத்தில் உணவு சார் உற்பத்தி முயற்சியில் ஈடுபடும் சிறுதொழில் முயற்சியாளர்களால் கோரப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கொழும்பு கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தொழில்நுட்ப பிரிவின் உதவியுடன் வடமாகாணத்தில் மாவட்ட ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட உணவு பொதியிடல் தொழில்நுட்பங்கள் தேவைப்படும் தொழில் முயற்சியாளர்களுக்கு வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பொதியிடல் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 13.08.2024 ஆம் திகதியன்று வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 35 தொழில்முயற்சியாளர்களுக்கும் மன்னார் மாவட்டத்தில் 14.08.2024 ஆம்

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் பொதியிடல் தொழில்நுட்பப் பயிற்சியானது வழங்கப்பட்டது Read More »

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு டிஜிட்டல் சந்தை செயல் முறை தொடர்பான ஒருநாள் பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வட மாகாணத்தின் மாவட்ட ரீதியாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு டிஜிட்டல் சந்தை செயல் முறையினை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவான ஒருநாள் பயிற்சிப்பட்டறை முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், மற்றும் கிளிநொச்சி, மாவட்டங்களில் தனித்தனியாக நடாத்தப்பட்டது. இப்பயிற்சிப்பட்டறையில் முல்லைத்தீவு, மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 14 தொழில் முயற்சியாளர்களுக்கு 16.07.2024 ஆம் திகதியும் வவுனியா மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 14 தொழில் முயற்சியாளர்களுக்கு 18.07.2024 ஆம் திகதியும் மன்னார் மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 15 தொழில் முயற்சியாளர்களுக்கு 22.07.2024

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு டிஜிட்டல் சந்தை செயல் முறை தொடர்பான ஒருநாள் பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது Read More »

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பிலக்கங்கள் அடங்கிய அறிவிப்பு பதாதை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என கௌரவ ஆளுநர் பணிப்புரை

வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள், அரச  மருந்தகங்கள் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல் அடங்கிய பாதாதைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள், மாகாண சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், நோயாளர்களும், வைத்தியர்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், சேவையை பெற்றுக் கொள்வதில் தாமதம் அல்லது சிக்கல்கள் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய உயர் அதிகாரிகளின் தொடர்பு இலக்கங்கள் ஆகியன குறித்த பதாதையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பிலக்கங்கள் அடங்கிய அறிவிப்பு பதாதை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என கௌரவ ஆளுநர் பணிப்புரை Read More »

தெய்வீக சுகானுபவம் – 10

நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவத்தை முன்னிட்டு யாழ் இந்திய துணைத்தூதரகத்துடன், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு இணைந்து நடாத்திய தெய்வீக சுகானுபவம் – 10 நிகழ்வானது 2024.08.18 ஞாயிற்றுக்கிழமை மாலை 7மணிக்கு யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள சங்கிலியன் தோப்பு வளாகத்தில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக

தெய்வீக சுகானுபவம் – 10 Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய, மத்திய சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படும் அவசர தேவைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களிடம் எடுத்து கூறியதற்கு அமைய மத்திய சுகாதார அமைச்சுக்கு, கௌரவ ஆளுநரால் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கமைய, சுமார் நூறு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் ஊடாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான 500 KW வலுவுடைய மின்பிறப்பாக்கி பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது. அத்துடன் வைத்தியசாலை ஊழியர்களுக்கான விடுதி புனரமைப்பு மற்றும் உள்ளக

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய, மத்திய சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு Read More »

மூலிகைக் கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும் நெடுந்தீவில் இடம்பெற்றது

நெடுவூர் மூவிழா – 2024 இனை முன்னிட்டு உணர்வும் உறவும் அமைப்பானது 05.08.2024 தொடக்கம் 10.08.2024 வரை வடமாகாண சுதேச மருத்தவத்திணைக்களத்துடன் இணைந்து மூலிகைக் கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வினை நெடுந்தீவில் நடாத்தினர். இக்கண்காட்சியில் மூலிகைகள், சிறுதானியவகைகள், பாரம்பரிய ஆரோக்கிய உணவுகள் காட்சிப்படுத்தல்களுடன் அவற்றிற்குரிய விளக்கங்களும் வழங்கப்பட்டன.  மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், இயற்கை மூலிகைப்பாணங்கள், இலைக்கஞ்சி, நீரிழிவு முகாமைத்துவம், சூரிய நமஸ்காரம் போன்ற விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.  மாகாண சுதேசமருத்துவத் திணைக்களத்தின் கீழ் கடமையாற்றும்

மூலிகைக் கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும் நெடுந்தீவில் இடம்பெற்றது Read More »

சர்வதேச ஆயுள்வேதக் கண்காட்சியும் ஆய்வு மாநாடும் 2024

2024 ம் ஆண்டுக்கரிய சர்வதேச ஆயுள்வேதக் கண்காட்சியும் ஆய்வுமாநாடும் கடந்த 09.08.2024 தொடக்கம் 11.08.2024 ம் திகதிவரை மூன்று நாட்கள் தென்மாகாணம் காலிமாவட்டத்தின் மாநகரசபை வளாகத்தில் நடைபெற்றது. இதில் வடமாகாண சுதேச மருத்துவத்திணைக்களம் கண்காட்சிக்கூடம் ஒன்றினை ஏற்படுத்தியிருந்தது. இதில் பிரதி மாகாண ஆணையாளர் இவைத்தியர்கள் பங்குபற்றியிருந்தனர். இக்கண்காட்சியில் வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மருந்து உற்பத்திப் பிரிவினரால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் வெளியீடுகள் மற்றும் ஆரோக்கிய சிற்றுண்டிகள், கோப்பிவகைகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும் இடம்பெற்றது.  

சர்வதேச ஆயுள்வேதக் கண்காட்சியும் ஆய்வு மாநாடும் 2024 Read More »