July 2024

இணையத்தளமூடாக வியாபார பதிவுகளை (OnlineBusiness Registration) ஆரம்பிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ ஆளுநர்தெரிவிப்பு

இணையத்தளமூடாக வியாபார பதிவுகளை (Online Business Registration) ஆரம்பிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள்  தெரிவித்துள்ளார். சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கௌரவ அனுப பஸ்குவல் மற்றும் கௌரவ ஆளுநர் ஆகியோரின் தலைமையில் , ஆளுநர் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (30/07/2024) விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன், யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எம்.பிரதீபன், ஆளுநரின் உதவிச் செயலாளர், சமுர்த்தி […]

இணையத்தளமூடாக வியாபார பதிவுகளை (OnlineBusiness Registration) ஆரம்பிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ ஆளுநர்தெரிவிப்பு Read More »

வடக்கு மாகாண பனை அபிவிருத்தி வாரம் 2024

வடக்கு மாகாண பனை அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு பனை சார் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும், தாலம் சஞ்சிகை வெளியீடு மற்றும் பனை அபிவிருத்தி தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் என்பன 2024.07.22-ம் திகதி தொடக்கம் 2024.07.28 திகதி வரை திரு. ந. திருலிங்கநாதன் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரும் வடக்கு மாகாணம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆரம்ப நாள் நிகழ்ச்சியாக கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வினை திரு. இ. இளங்கோவன், பிரதம செயலாளர்

வடக்கு மாகாண பனை அபிவிருத்தி வாரம் 2024 Read More »

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கௌரவ ஆளுநரால் இன்று தெளிவுப்படுத்தப்பட்டது

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடக மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த ஊடக மாநாட்டில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் அவர்களும் கலந்துக்கொண்டார். கண்ணிவெடி அகற்றல் மற்றும் மீள்குடியேற்ற செயற்பாட்டின் முன்னேற்றம், சிவில் பிரஜைகளின் காணி விடுவிப்பு, சூரிய மின்படல வீட்டுத்திட்டம், குடிநீர் விநியோக திட்டம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள், “உரித்து” செயற்றிட்டம், கல்வித்துறை,

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கௌரவ ஆளுநரால் இன்று தெளிவுப்படுத்தப்பட்டது Read More »

நெடுந்தீவின் அபிவிருத்திச் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வேலைத்திட்டம்

நெடுந்தீவின் அபிவிருத்திச் செயற்திட்டத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் எதிர்வரும் 04.08.2024 தொடக்கம் 10.08.2024 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நெடுவூர் திருவிழா காலத்தை சிறப்பாக நடாத்துவதற்கும் நெடுந்தீவின் அபிவிருத்தியினை முன்னெடுக்கும் பொருட்டான கலந்துரையாடல் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் 22.07.2024 திகதி அன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதேச அபிவிருத்தி மற்றும் மேம்பாடு தொடர்பிலான அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத்தலைவர்களுடன் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் தலைவர், செயலாளர் மற்றும்

நெடுந்தீவின் அபிவிருத்திச் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வேலைத்திட்டம் Read More »

சித்த மத்திய மருந்தகம் பருத்தித்துறை தொண்டைமானாறு திறப்பு விழா

தொண்டைமானாற்றில் மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்திற்கு திருமதி.ஜெயதேவி நாகேந்திரன் அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட 120 பேர்ச்சஸ் காணியில் PSDG நிதியின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட சித்த மத்திய மருந்தகம் வடக்கு மாகாண கொளரவ ஆளுனர் அவர்களால் 09.07.2024 அன்று உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. மாகாண சுதேசமருத்துவ திணைக்கள ஆணையாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண சுகாதார சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர்பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், சுதேச மருத்தவ திணைக்கள பிரதி ஆணையாளர்,

சித்த மத்திய மருந்தகம் பருத்தித்துறை தொண்டைமானாறு திறப்பு விழா Read More »

48 வது தேசிய விளையாட்டு விழாவில் வடமாகாண வீரர்களால் இரு சாதனைகள் பதிவு செய்யப்பட்டன

இலங்கையின் 48 வது தேசிய விளையாட்டு விழா கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இம்மாதம் 17,18,19 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இதில் நாட்டிலுள்ள 9 மாகாண வீர,வீராங்கனைகள் பங்குபற்றினர். இப்போட்டிகளில் கோலூன்றிப்பாய்தல் ஆண்கள் பிரிவில் சாவகச்சேரியினைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் 5.11 மீற்றர் உயரத்தினை கடந்து புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார். அத்தோடு கோலூன்றிப்பாய்தல் பெண்கள் பிரிவில் சாவகச்சேரியினைச் சேர்ந்த நேசராசா டக்சிதா 3.51 மீற்றர் உயரத்தினைக் கடந்து புதிய சாதனையினை நிகழ்த்தியுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த காலங்களில் தங்களால்

48 வது தேசிய விளையாட்டு விழாவில் வடமாகாண வீரர்களால் இரு சாதனைகள் பதிவு செய்யப்பட்டன Read More »

வட மாகாண ஆடிப்பிறப்பு விழா 2024

வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் வட மாகாண ஆடிப்பிறப்பு விழா 2024.07.17 புதன்கிழமை காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் எனும் கிராமத்திலுள்ள அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் பாடசாலை முதல்வர் திருவாளர் எஸ்.மகேந்திரராஜா தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட இப்பாடசாலையில் ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி விழாவில் கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.

வட மாகாண ஆடிப்பிறப்பு விழா 2024 Read More »

PIMD Lotus நிறுவனத்தினால் சிறார்களிற்கான ஆங்கில மொழி எழுத்தாற்றல் செயற்திட்டம் மற்றும் ஆசிரியர்களிற்கான பயிற்சி ஆய்வு நடாத்தப்பட்டது

முன்பள்ளி மற்றும் ஆரம்ப பாடசாலை சிறார்களின் ஆங்கிலம் தொடர்பிலான எழுத்தாற்றல் வாசிப்பு மற்றும் இதர திறமைகளை மேம்படுத்தும் நோக்கோடு PIMD Lotus நிறுவனத்தினரால் ‘சிறார்களிற்கான ஆங்கிலமொழி எழுத்தாற்றல் செயற்திட்டம் மற்றும் ஆசிரியர்களிற்கான பயிற்சி ஆய்வு’ எனும் தலைப்பிலான செயற்திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் 18.07.2024 திகதி அன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் PIMD Lotus அரச சார்பற்ற நிறுவன தலைவர், ஒருங்கிணைப்பாளர், உதவிக் கல்விப்

PIMD Lotus நிறுவனத்தினால் சிறார்களிற்கான ஆங்கில மொழி எழுத்தாற்றல் செயற்திட்டம் மற்றும் ஆசிரியர்களிற்கான பயிற்சி ஆய்வு நடாத்தப்பட்டது Read More »

வட மாகாண சுகாதாரதுறையில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைக்கான தீர்வுகளை வழங்குமாறு சுகாதாரஅமைச்சரிடம், கௌரவ ஆளுநர் கோரிக்கை

வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் கௌரவ சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தலைமையில் இன்று (17/07/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் P.G. மஹிபால, வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டனர். அத்துடன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட சுகாதார சேவைகள்

வட மாகாண சுகாதாரதுறையில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைக்கான தீர்வுகளை வழங்குமாறு சுகாதாரஅமைச்சரிடம், கௌரவ ஆளுநர் கோரிக்கை Read More »

ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்கள்

ஜுன் 27, 2024 அன்று, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திலும் ஜுலை 05 மற்றும் 09 ஆம் திகதிகளில் முறையே கிளிநொச்சி, மன்னார் மாவட்டச் செயலகங்களிலும் இரண்டாம் காலாண்டிற்கான ஊராட்சி முற்றக் (Town Hall) கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக மட்ட அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை

ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்கள் Read More »