முல்லைத்தீவு மல்லாவி நகர நீர் வழங்கல்திட்டத்திற்கான, நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்குஇன்று அடிக்கல் நாட்டல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை மற்றும் துணுக்காய் பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் நோக்குடன், மல்லாவி நகர நீர் வழங்கல் திட்டத்திற்கான, நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்கு இன்று (15/05/2024) அடிக்கல் நாட்டப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரால் நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நிலத்தடி நீரினால் மாந்தை மற்றும் துணுக்காய் பகுதிகளில் மூன்று வீதமான மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிறுநீரக பாதிப்புக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் […]