April 17, 2024

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைமாணவர்களுக்கான பார்வை ஆய்வுஅட்டைகள்(Vision charts) கௌரவ ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் பார்வைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயல்திட்டத்தின் ஒரு கட்டமாக பார்வை ஆய்வு அட்டைகளை (Vision charts) உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில், கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களிடம் பார்வை ஆய்வு அட்டைகள் இன்று (17/04/2024) கையளிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் முத்துசாமி மலரவன் அவர்களின் வழிநடத்தலின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த விசேட செயல்திட்டத்திற்கான பார்வை ஆய்வு அட்டைகளை, Vision care நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி […]

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைமாணவர்களுக்கான பார்வை ஆய்வுஅட்டைகள்(Vision charts) கௌரவ ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது Read More »

கிராமிய கலைகளை வளர்ப்பதற்கான புதிய அணுகுமுறைகளை கலாசார உத்தியோகஸ்தர்கள் பின்பற்ற வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் புதுவருட கொண்டாட்டத்தில் தெரிவிப்பு

வடக்கு மாகாண புதுவருட கொண்டாட்டம் வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்று  (16/04/2024) நடைபெற்றது. கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக நிகழ்வில் கலந்து சிறப்பித்தார். புத்தாண்டு விழாவில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை கலாசார நிகழ்வுகளை கண்டுகளித்த கௌரவ ஆளுநர், பிரதம விருந்தினருக்கான உரையை ஆற்றினார். “இந்த வருடத்தில் வெற்றி அளிக்கக்கூடிய பயிர் செய்கையை வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ள முடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய குளங்கள் மற்றும் சிறு குளங்களின் நீர்மட்டம்

கிராமிய கலைகளை வளர்ப்பதற்கான புதிய அணுகுமுறைகளை கலாசார உத்தியோகஸ்தர்கள் பின்பற்ற வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் புதுவருட கொண்டாட்டத்தில் தெரிவிப்பு Read More »

தென்னையை தாக்கும் வெண் ஈக்களை முகாமைத்துவம் செய்யும் முகமாக வவுனியாவில் ஒட்டுண்ணி விடுவிப்பு

அண்மைக் காலத்தில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாக நாடு முழுவதும் தென்னைச் செய்கையில் வெண் ஈக்களின் (Aleurodicus disperse) தாக்கம் பாரிய அளவில் அவதானிக்கப்பட்டிருந்தது. இவ் வெண் ஈக்களின் தாக்கத்தை முகாமைத்துவம் செய்யும் முகமாக வெண் ஈக்களைத் தாக்கும் ஒட்டுண்ணி (Encarsia gaudulapae) விவசாயத் திணைக்களத்தினால் வடமாகாண தென்னம் தோட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக 15.04.2024 ஆம் திகதியன்று வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் சமனன்குளம் விவசாயப்

தென்னையை தாக்கும் வெண் ஈக்களை முகாமைத்துவம் செய்யும் முகமாக வவுனியாவில் ஒட்டுண்ணி விடுவிப்பு Read More »