வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள இலவச வீட்டுத்திட்டம் தொடர்பில் பயனாளர்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்துவது அவசியமாகும் என கௌரவ ஆளுநர் தெரிவிப்பு
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இலவச வீட்டுத்திட்டம் தொடர்பில் பயனாளர்களை நேரில் சந்தித்து தெளிவுப்படுத்துவது அவசியமானதொன்று என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இலவச வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனத்தின் பிரதிதிநிகளுடன் ஆளுநர் செயலகத்தில் நேற்று (03/04/2024) நடைபெற்ற கூட்டத்தின் போதே கௌரவ ஆளுநர் இதனை தெரிவித்தார். சூரிய படலங்கள் பொருத்தப்பட்ட கூரைகளுடன் நிர்மாணிக்க திட்டமிடப்பட்ட இந்த வீட்டுத் திட்டமானது தற்போது சற்று மாற்றப்பட்டு, கூரைகளில் சூரிய படலங்கள் அற்ற வகையில் வீடுகளை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. […]
