March 2024

ILO LEED+ செயற்திட்டத்தின் கீழ் தொழிற்துறைத் திணைக்களத்தினால் உங்கள் தொழிலை ஆரம்பித்தல் பயிற்சிநெறி வழங்கப்பட்டது

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 19 நபர்களிற்கு உங்கள் தொழிலை ஆரம்பித்தல் (SYB) பயிற்சி நெறியானது 13.02.2024 தொடக்கம் 16.02.2024 வரை 4 நாட்கள் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.இரத்தினசபாபதி கௌசிகன் முதன்மை வளவாளராகவும் மற்றும் திரு.தில்லையம்பலம் திவாகரன் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இப் பயிற்சியில் பங்கு பற்றியவர்கள் தாம் புதிதாக ஆரம்பிக்க […]

ILO LEED+ செயற்திட்டத்தின் கீழ் தொழிற்துறைத் திணைக்களத்தினால் உங்கள் தொழிலை ஆரம்பித்தல் பயிற்சிநெறி வழங்கப்பட்டது Read More »

வடக்கில் முன்னெடுக்கக்கூடிய சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கௌரவ ஆளுநருடன் இந்திய உயர் அதிகாரிகள் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர்  கலாநிதி சத்வஞ்சல் பாண்டே (Dr.Satvanjal Pandey) உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளியும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி, சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரித்தல், காங்கேசன்துறைக்கும் தூத்துக்குடிக்குமான பயணிகள் கப்பல் சேவை போன்ற திட்டங்கள் தொடர்பில்

வடக்கில் முன்னெடுக்கக்கூடிய சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கௌரவ ஆளுநருடன் இந்திய உயர் அதிகாரிகள் கலந்துரையாடல் Read More »

சர்வதேச மகளிர் தினம் 2024

‘அவளையும் உள்வாங்குங்கள்: பொருளாதார வலுவூட்டல் மூலம் பாலின சமத்துவத்தை துரிதப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வானது 2024.03.06 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. அமைச்சின் செயலாளர் திரு.பொ. வாகீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். பாடசாலை மாணவர்கள், பொது

சர்வதேச மகளிர் தினம் 2024 Read More »

சமுத்திர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல்

சமுத்திர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்பகட்ட கள ஆய்வில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை நேற்று (12.03.2024) மாலை சந்தித்து கலந்துரையாடினர். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் பொருளாதார துறையின் முதலாம் நிலை செயலாளரின் தலைமையில் குறித்த நிபுணர்கள் குழாம் கௌரவ ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண மக்களின் தற்போதைய வாழ்வியல் செயற்பாடுகள், பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுலாத்துறை, உட்கட்டமைப்பு வசதிகள், சமுத்திர

சமுத்திர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல் Read More »

இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் திறந்துவைப்பு

யாழ்ப்பாணம் இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டட  நோயாளர் விடுதி வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களால் நேற்று (11.03.2024) மாலை திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர்கள், அதிகாரிகள், நோயாளர் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர். நோயாளர் விடுதியை பார்வையிட்ட கௌரவ ஆளுநர், முதலாவது நோயாளரையும் விடுதியில் அனுமதித்தார். இதன்போது நிகழ்வின் பிரதம விருந்தினருக்கான உரையை ஆற்றிய கௌரவ ஆளுநர், வடக்கு

இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் திறந்துவைப்பு Read More »

வட மாகாண மஹா சிவராத்திரி நிகழ்வு– 2024

உருத்திரபுரநாயகி உடனுறை உருத்திரபுரீசுவரர் ஆலயம் – கிளிநொச்சி. வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு, கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உருத்திரபுரீசுவரர் ஆலய  பரிபாலன சபையுடன் இணைந்து நடாத்திய வடக்கு மாகாண மஹா சிவராத்திரி நிகழ்வு 2024.03.08ஆம் நாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.00மணிக்கு உருத்திரபுரீச்சுரர் ஆலய  முன்றலில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருவாளர் ம.பற்றிக் டிறஞ்சன்  அவர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. மாலை 6.00மணிக்கு

வட மாகாண மஹா சிவராத்திரி நிகழ்வு– 2024 Read More »

யாழ்ப்பாண மாவட்ட ஊராட்சி முற்றக் கூட்டம் இடம்பெற்றது

யாழ் மாவட்டச் செயலகத்தில் ஊராட்சி முற்றக் (Town Hall) கூட்டம் 05 மார்ச் 2024 அன்று நடைபெற்றது. பெண்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தின் இணைத் தலைமையில் இக்கூட்டம் நடாத்தப்பட்டது. இக் கூட்டத்திற்கு வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ.

யாழ்ப்பாண மாவட்ட ஊராட்சி முற்றக் கூட்டம் இடம்பெற்றது Read More »

வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்புதிணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறுதுறைசார் அமைச்சரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை.

வடக்கு மாகாணத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை மீள விடுவிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள், அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள அரச மரக்கூட்டுதாபனத்தில் அமைச்சரை நேரடியாக சந்தித்து கௌரவ ஆளுனரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட காணிகள் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த காணிகளுக்குள் பொதுமக்கள் செல்ல

வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்புதிணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறுதுறைசார் அமைச்சரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை. Read More »

வடக்கு மாகாணத்தில் தற்காலிக பணி இணைப்பிலுள்ள 388 பேருக்கான நிரந்தர நியமனங்களை வழங்குவதற்குரிய அமைச்சரவை அனுமதியைபெற்றுத்தருமாறு பிரதமரிடம், வடக்கு ஆளுநர் கோரிக்கை

வடக்கு மாகாணத்தில் தற்காலிக, பதிலீட்டு, சாதாரண மற்றும் தினக்கூலி அடிப்படையில் சேவையாற்றும் 388 பேருக்கான நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுத்தருமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் நேரடியாக சென்று கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில்  07.03.2024 அன்று இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சில் பணியாற்றும் 67 பேருக்கும், உள்ளுராட்சி அமைச்சின் கீழுள்ள பிரிவுகளில் கடமையாற்றும் 321 பேருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட

வடக்கு மாகாணத்தில் தற்காலிக பணி இணைப்பிலுள்ள 388 பேருக்கான நிரந்தர நியமனங்களை வழங்குவதற்குரிய அமைச்சரவை அனுமதியைபெற்றுத்தருமாறு பிரதமரிடம், வடக்கு ஆளுநர் கோரிக்கை Read More »

சர்வதேச மகளிர் தினம் -2024

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் தலைமையில் ‘ அவளையும் உள்வாங்குங்கள் பொருளாதார வலுவூட்டல் மூலம் பாலின சமத்துவத்தைத் துரிதப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் 06.03.2024 புதன்கிழமை அன்று சாவகச்சேரியின் நகரசபையின் பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக வடமாகாணத்தின் பிரதம செயலாளர் திரு.எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களும், செயலாளர் திரு.பொ.வாகீசன், மகளிர் விவகார அமைச்சு மற்றும் மாகாண அமைச்சு செயலாளர்கள்,பிரதிப்பிரதம செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய

சர்வதேச மகளிர் தினம் -2024 Read More »