விவசாய டிஜிட்டல்வலையமைப்புக்குள் ஒன்றிணையவும் – FARMTO GATE இணைய செயலி அங்குரார்ப்பண நிகழ்வில் வடக்குமாகாண கௌரவ ஆளுநர் கோரிக்கை
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் வழிகாட்டுதல்களுக்கு அமைய வடிவமைக்கப்பட்ட FARM TO GATE இணைய செயலியை, கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். யாழ்ப்பாணம் ஒட்டகப்புலம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வின் போது இந்த இணைய செயலி மக்கள் மயப்படுத்தப்பட்டது. வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் உற்பத்திகளுக்கான இணைய வழி சந்தை வாய்ப்புகளுக்கு வசதியளிக்கும் வகையில் FARM TO GATE இணைய செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர முயற்சியாளர்களின் வாழ்க்கையில் புத்துயிர் ஊட்டக்கூடிய ஒரு […]