யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில்மாணவன் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கௌரவஆளுநர் பணிப்புரை
யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் தரம் 06 இல் இணைந்துக்கொண்ட புதுமுக மாணவன் மீது, தரம் பத்து மாணவனால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் பணிப்புரைக்கு அமைய, இந்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு பாடசாலை அதிபர் மற்றும் வலயக்கல்வி பணிமனைக்கு கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படும் அபயம் பிரிவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் மாணவன் ஆகியோரிடம் […]