November 2023

FARM TO GATE – வடக்கு மாகாண விவசாய, உற்பத்தியாளர்களுக்கு இணையத்தள சந்தைவாய்ப்பை அறிமுகப்படுத்த நடவடிக்கை

வடக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வோர், உற்பத்திகளுக்கான நியாயமான விலையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் FARM TO GATE என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பணிப்புரைக்கு அமைய FARM TO GATE செயலிக்கான மென்பொருள் வடிவமைப்பு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு தை மாதம் FARM TO GATE செயலியை அங்குரார்ப்பணம் செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. FARM TO GATE […]

FARM TO GATE – வடக்கு மாகாண விவசாய, உற்பத்தியாளர்களுக்கு இணையத்தள சந்தைவாய்ப்பை அறிமுகப்படுத்த நடவடிக்கை Read More »

அடையாள சின்னம் அணிவிக்கும் நிகழ்வு

யாழ் பிராந்திய பொது சுகாதார பரிசோதகர் பயிற்சி நிலையத்தில் பொது சுகாதார பரிசோதகர் பயிற்சியை நெறியை பூர்த்தி செய்து கொண்டிருக்கும் பயிலுநர்களிற்கான இலச்சினை அணிவிக்கும் வைபவம் கடந்த வியாழக்கிழமை 21.11.2023ம் திகதி அன்று மாகாண சுகாதார சேவைகள் பணிமனை, வடக்கு மாகாண மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. சி. திருவாகரன் அவர்கள் கலந்து கொண்டார். மற்றும் சிறப்பு விருந்தினராக வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய

அடையாள சின்னம் அணிவிக்கும் நிகழ்வு Read More »

வட மாகாணத்தில் மூன்று தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரம்  – இலங்கை முதலீட்டுச் சபையின்  வலய முகாமைத்துவ பிரதம நிறைவேற்று பணிப்பாளர் தெரிவிப்பு

வடமாகாணத்தில் மேற்கொள்ளக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான கலந்துரையாடல், மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில், வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (21/11/2023) நடைபெற்றது. இலங்கை முதலீட்டு சபையின்  வலய முகாமைத்துவ நிறைவேற்று பணிப்பாளர் எம்.கே.டி.லோரன்ஸ், காணி, உள்ளுராட்சி திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகளும், சுற்றுலாத்துறை ஒன்றியத்தினரும், வர்த்தக பிரமுகர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். சுற்றுலாதுறை உள்ளிட்ட வருமானம் ஈட்டக்கூடிய துறைகளில் காணப்படக்கூடிய சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன்,

வட மாகாணத்தில் மூன்று தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரம்  – இலங்கை முதலீட்டுச் சபையின்  வலய முகாமைத்துவ பிரதம நிறைவேற்று பணிப்பாளர் தெரிவிப்பு Read More »

வடக்கு மாகாண சபை உத்தியோகத்தர்களின் இரங்கல் செய்தி

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் பாசமிகு தாயார் திருமதி.மேரி ஜோசபின் அமிர்தரத்தினம் 21.11.2023 அன்று தனது 93வது வயதில் கொழும்பில் இயற்கை எய்தினார். அன்னாரது மறைவையொற்றி வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், நிறைவேற்று அதிகாரிகள், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் சார்பில் எமது ஆழ்ந்த இதயபூர்வமான அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம். மேலும் அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். பிரதம

வடக்கு மாகாண சபை உத்தியோகத்தர்களின் இரங்கல் செய்தி Read More »

வடக்கு மாகாணத்தின் அனைத்து துறைசார் வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் – எரிக் சொல்ஹெய்ம், வட மாகாண ஆளுநரிடம் உறுதி

வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது. வட மாகாணத்தின் இடர்முகாமைத்துவம், மக்களின் அன்றாட வாழ்வியல் நிலை, காலநிலை, பொருளாதாரம், மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கௌரவ ஆளுநரால் இதன்போது சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்மிற்கு விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. விடயங்களை கேட்டறிந்துக்கொண்ட ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம்,

வடக்கு மாகாணத்தின் அனைத்து துறைசார் வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் – எரிக் சொல்ஹெய்ம், வட மாகாண ஆளுநரிடம் உறுதி Read More »

‘சில்ப அபிமானி’ 2023 தேசிய கைப்பணிப் போட்டி

கைப்பணியாளர்களை தேசிய ரீதியில் கௌரவப்படுத்தும் நோக்கில் கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலுடன் தேசிய அருங்கலைகள் பேரவையால் வருடாந்தம் தேசிய ரீதியில் நடாத்தப்படும் மேற்படி போட்டிக்கான மாகாண மட்டப் போட்டி வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் நவம்பர் மாதம் 15,16ம் திகதிகளில் யாழ் மத்திய கல்லூரியில் நடாத்தப்பட்டது. இப்போட்டியில் வடமாகணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கைப்பணிவேலைகளில் ஈடுபடும் கைப்பணியாளர்களினால் வடிவமைக்கப்பட்ட 1105 கைப்பணி ஆக்கங்கள் போட்டிக்காக காட்சிப்படுத்தப்பட்டு தேசிய அருங்கலைகள் பேரவையின் நடுவர் குழுவினால் 313 ஆக்கங்கள் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டது இதில்

‘சில்ப அபிமானி’ 2023 தேசிய கைப்பணிப் போட்டி Read More »

வடமாகணத்தில் இளையோர் மத்தியில்  காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்கான  குழுவை நியமிக்குமாறு ஆளுநர் பணிப்புரை

வட மாகாணத்தில் இளையோர், பாடசாலை மாணவர்கள் மற்றும் கட்டிளம் பருவத்தினரிடையே காணப்படும் சில நடவடிக்கைகளால், சமூக மட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் உருவாகுவதாகவும், இவற்றை ஆராய்ந்து தீர்க்கும் பட்சத்தில், சிறந்த சமூக கட்டமைப்பை ஏற்படுத்த முடியும் என அரச அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விடயத்தை ஏற்றுக்கொண்ட வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,  இளையோர் மற்றும் கட்டிளம் பருவத்தினரின் தகாத செயற்பாடுகளால் சமூக மட்டத்தில் ஏற்படும்  பிரச்சினைகளை ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு பணிப்புரை விடுத்தார். வட மாகாணத்திலுள்ள கல்வி,

வடமாகணத்தில் இளையோர் மத்தியில்  காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்கான  குழுவை நியமிக்குமாறு ஆளுநர் பணிப்புரை Read More »

வடக்கு மாகாண கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் – வட மாகாண அதிபர்கள் சங்கம், ஆளுநரிடம் உறுதி

வடக்கு மாகாண கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்வதற்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக வட மாகாண அதிபர்கள் சங்கம், மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் உறுதியளித்தனர். வட மாகாண அதிபர்கள் சங்கத்தின் தலைவர் த. ஜெயந்தன் தலைமையிலான குழுவினர் , யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்திற்கு வருகை தந்து இந்த உறுதியை வழங்கினர். வட மாகாணத்தில் அதிகரித்துள்ள பாடசாலை இடைவிலகல், பிரத்தியேக வகுப்புகளுக்கு அதிக நேரத்தை செலவிடுதல், இணை பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பு குறைந்து

வடக்கு மாகாண கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் – வட மாகாண அதிபர்கள் சங்கம், ஆளுநரிடம் உறுதி Read More »

மொழிக்கொள்கை அமுலாக்கம் மற்றும் மொழித்திட்டம் தயாரித்தல் தொடர்பான செயலமர்வு

அரசகரும மொழிக்கொள்கையை வடக்கு மாகாணசபை அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக வடக்கு மாகாணசபை உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் கூடிய செயலமர்வானது 14.11.2023 அன்று பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், பிரதிப்பிரதம செயலாளர்கள், உதவிப்பிரதம செயலாளர் மற்றும் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகின் பணிப்பாளர், தேசிய மொழிப் பிரிவின் மாகாண அலுவலக பொறுப்பாளர், சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், சகல திணைக்களத்தின் தலைவர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், பயிற்சியாளர்கள், விடய உத்தியோகத்தர்கள் என

மொழிக்கொள்கை அமுலாக்கம் மற்றும் மொழித்திட்டம் தயாரித்தல் தொடர்பான செயலமர்வு Read More »

வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் பயிர்செய்கை நடவடிக்கை கௌரவ ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாட்டின் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தில் தென்னம் பிள்ளைகளை நாட்டும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சி  – இயக்கச்சி பகுதியில் வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில், தென்னம் பிள்ளைகள் நடப்பட்டு செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய , ஒரு இலட்சம் தென்னம் பிள்ளைகளை நடும் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது. வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ். கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதிஸ்வரன், தென்னை பயிர்செய்கை சபையின் தலைவர்  ஏ.வீ.கே.மாதவி

வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் பயிர்செய்கை நடவடிக்கை கௌரவ ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »