October 17, 2023

நெடுந்தீவு மண்ணில் வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் சிறுவர் தினக் கொண்டாட்டம் 2023

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு வடமாகாண பிரதம செயலாளரின் தலைமையில் சிறுவர் தினக் கொண்டாட்டமானது 08.10.2023 அன்று காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு பிரதேச சபையின் தேவா கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. நெடுந்தீவின் ஏழு முன்பள்ளிகளைக் கொண்ட 137 சிறுவர் சிறுமியர்கள் கலந்து சிறப்பித்திருந்த இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணத்தின் பிரதம செயலாளர் மற்றும் அவரது பாரியார், தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி நிர்வாகம்), தீவக வலய முன்பள்ளி உதவிக் கல்வி பணிப்பாளர், […]

நெடுந்தீவு மண்ணில் வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் சிறுவர் தினக் கொண்டாட்டம் 2023 Read More »

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் – 2023, வவுனியா மாவட்டம்

வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கோடு அவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும். அந்த வகையில் வவுனியா மாவட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார தொழில் முயற்சிகளுக்கான உபகரண உதவி வழங்கும் நிகழ்வானது வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் 13.10.2023 அன்று காலை 11 மணியளவில் மாவட்டச் சமூக சேவைகள் அலுவலகம், வவுனியாவில் நடைபெற்றது.  

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் – 2023, வவுனியா மாவட்டம் Read More »

வடக்கிற்கு சரியான நேரத்தில் சரியானபருவத்தில் உரங்கள் வழங்கப்படும்

வடமாகாணத்தில் இவ்வருடம் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நேரத்தில் உரங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் 2023.10.15 அன்று நடைபெற்ற விவசாயம் தொடர்பான கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் கூறியிருந்தார். வடமாகாணத்தில் நெற்செய்கைக்கு மட்டுமன்றி மரக்கறி, பழங்கள் உள்ளிட்ட பயிர்களுக்கும் விவசாய திணைக்களம் அதிகூடிய ஆதரவை வழங்கும் எனவும் விவசாய அமைச்சர் கூறினார்.  இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கு வடமாகாணத்தின் விவசாய செயற்பாடுகள் பெருமளவு பங்களிப்பதாகவும், வாழ்வாதாரத்தை

வடக்கிற்கு சரியான நேரத்தில் சரியானபருவத்தில் உரங்கள் வழங்கப்படும் Read More »