February 2020

வடக்கு மாகாண ஆளுநர் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு திடீர் விஜயம்

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் ஒன்றை 13 பெ்ப்பிரவரி 2020 அன்று மேற்கொண்டார். பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்தும், பலாலி விமான நிலையத்தினை மேம்படுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் நேரடியாக ஆராய்ந்தார். அத்துடன் சுற்றுலா பயணிகளை அதிகரிக்க பலாலி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும், விமான நிலையத்தையும் நகரங்களையும் இணைக்கும் மார்க்கங்கள் தொடர்பிலும், சுற்றுலா மற்றும் […]

வடக்கு மாகாண ஆளுநர் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் Read More »

விதை உற்பத்திக்காக இயந்திரம் மூலம் நாற்று நடப்பட்ட நெல் வயலில் வயல் விழா

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொல்லவிளாங்குளம் எனும் கிராமத்தில் வ.பிறேமச்சந்திரன், அ.தர்மகுலசிங்கம் ஆகிய இரு விவசாயிகள் கூட்டாக இணைந்து 2 ஏக்கரில் நாற்று நடுகை மூலம் விதை உற்பத்தி மேற்கொண்ட வயலில் விவசாயப் போதனாசிரியர் கி.கீர்த்திகன் அவர்களின் ஒழுங்கமைப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன் தலைமையில் 07.02.2020 வயல் விழா நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாகாண விவசாயப் பணிப்பாளர்

விதை உற்பத்திக்காக இயந்திரம் மூலம் நாற்று நடப்பட்ட நெல் வயலில் வயல் விழா Read More »

மூலோபாய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

மூலோபாய நகரங்கள் அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மற்றும் முன்னெடுக்கவேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலான மீளாய்வு 12 பெப்பிரவரி 2020 ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் உலக வங்கியின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் திரு அங்கஜன் இராமநாதன், பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், யாழ் அரசாங்க அதிபர் ந.வேதநாயகன் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், நகர அபிவிருத்தி சபை உத்தியோகத்தர்கள், குறித்த திட்டங்களோடு தொடர்புடைய திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின்

மூலோபாய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் Read More »

வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டார்

வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் முகாமைத்துவ சபைக்கு தலைவராக திரு.எஸ்.அமிர்தலிங்கம் அவர்கள் 10 பெப்ரவரி 2020 முதல் செயற்படும் வண்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதம் வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால் 10 பெப்ரவரி 2020 அன்று ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.  

வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டார் Read More »

வட மாகாணத்திற்கு புதிதாக 80 அதிபர்கள் நியமனம்

வட மாகாண பாடசாலைகளுக்கு புதிய 80 அதிபர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவமும் இன்று 10 பெப்பிரவரி 2020 யாழ். இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்துகொண்டு நியமன கடிதங்களை வழங்கினார். வடமாகாணத்தின் கல்வியமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வடமாகாணத்தின் பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலன், வட மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார்,வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கல்வி அமைச்சு, கல்வித் திணைக்கள அதிகாரிகள்

வட மாகாணத்திற்கு புதிதாக 80 அதிபர்கள் நியமனம் Read More »

வடக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு கௌரவ வடக்குமான ஆளுநர் திருமதி பி எம் எஸ் சார்ள்ஸ் அவர்கள் ஆலோசனை

வடக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான தொழிவாய்ப்பை பெற்றுக்கொள்ள அரசு தரும் வாய்ப்பை உரிய நேரத்தில் சரியான ஒழுங்கு முறையை பின்பற்றி பெற்றுக்கொள்வதற்கான முயற்சியை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு வடக்குமான ஆளுநர் திருமதி பி எம் எஸ் சார்ள்ஸ் அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார். தொழில்வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தில் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த திட்டத்தின் கீழ் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான வயதெல்லை 45

வடக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு கௌரவ வடக்குமான ஆளுநர் திருமதி பி எம் எஸ் சார்ள்ஸ் அவர்கள் ஆலோசனை Read More »

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகரும் அவருடைய குழுவினரும் வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுடன் 10 பெப்பிரவரி 2020 அன்று நண்பகல் ஆளுநர் இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள். இச்சந்திப்பின் போது வடக்கில் மேம்படுத்தப்படவேண்டிய ஏற்றுமதித்துறை, சுற்றுலாத்துறை, விருந்தோம்பல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான கற்கைநெறிகள். தாதியர்களுக்கான சர்வதேச தரத்திலான கற்கைநெறி, என்பன தொடர்பில் பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டன. அடுத்த 5 வருடத்திற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆர்வத்தை அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் ஆவலுடன் வெளிப்படுத்தினார். குறிப்பிட்ட துறைகளில் முன்னெடுக்ககூடிய திட்டங்கள் தொடர்பில் விரிவாக

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் ஆளுநர் சந்திப்பு Read More »

பகிடிவதைக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஆளுநர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்பு

  இலங்கையின் கல்விப் புலத்தில் உயர்கல்வியில் சித்தியடையும் மாணவர்கள் பல்கலைக்கல்வியைத் தொடருவது அவர்களின் வழமையான கற்றல் செயற்பாடுகளாக இருந்து வருகின்றது. இவற்றுக்கிடையில் அண்மை காலமாக பகிடிவதை தொடர்பான பல குற்றச்சாட்டுக்களும்சம்பவங்களும் நடைபெற்று வருகின்றமை அவதானிக்கப்பட்டு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. எனினும் இன்றுவரை பல்கலைகழக மாணவர்கள் பகிடிவதை தொடர்பில் பல அசௌகரியங்களை சந்திப்பதும் கல்வி தொடர்பாக பல இழப்புக்களை சந்திப்பதும் அவர்கள் வழமையாக எதிர்கொள்ளும் சவால்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. வடமாகாணம் கல்வியை முதன்மைப்படுத்துகின்ற ஒரு மாகாணமாகும். அறநெறிப்பட்ட பண்பாட்டுச் சூழல்

பகிடிவதைக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஆளுநர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்பு Read More »

சுகாதார அமைச்சின் 72 வது தேசிய சுதந்திரதின விழா வைபவம்

வடமாகாண சுகாதார அமைச்சின் “ பாதுகாப்பான தேசம் – செழிப்பான நாடு” என்னும் தொனிப்பொருளை முன்னிலைப்படுத்தி இலங்கையின் 72 வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் 04.02.2020 அன்று காலை 8.00 மணியளவில் அமைச்சின் முன்றலில் நடைபெற்றது. இன்நிகழ்வின் போது சுதந்திரதினத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைச்சின் சிரேஸ்ட உதவிச்செயலாளர் திரு.செ.பிரணவநாதன் அவர்கள் உரையாற்றினார். அதனை தொடந்து அலுவலக சூழலை துப்பரவு செய்யும் சிரமதானப்பணியும் மரநடுகை நிகழ்வுகளும் நடைபெற்றது. இன்நிகழ்வில் அமைச்சின் பிரதம கணக்காளர் உத்தியோகத்தர்கள், மற்றும்

சுகாதார அமைச்சின் 72 வது தேசிய சுதந்திரதின விழா வைபவம் Read More »

வட மாகாண ஆளுநரின் சுதந்திரதினச் செய்தி

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் இலங்கையில் சுபீட்சம் மிக்க எதிர்காலம் தேசிய ஒருமைப்பாட்டுடன் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் முன்நகர ஆரம்பித்திருக்கிறது. 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற யுத்தத்தின் பாதிப்புகள், இழப்புகளில் இருந்து, பேண்தகு அபிவிருத்தியை அடைவதற்காக, மற்ற மாகாணங்களில் இப்போது ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற அபிவிருத்திக்கு இணையான வரப்பிரசாதங்களை , வடக்கின் மக்கள் துரிதமாக பெற்றுக்கொள்வதற்கு அனைவரும் முழுமையாக தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும், நிலைபேறுடைய ஒரு அபிவிருத்திப் பயணத்தில்

வட மாகாண ஆளுநரின் சுதந்திரதினச் செய்தி Read More »