October 2019

போர்க்காலத்தில் மட்டுமல்ல போரில்லா காலத்திலும் கூட பெண்களின் பங்களிப்பு சமமாக இருக்க வேண்டும் – கௌரவ ஆளுநர்

”சகல துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. போர்க்காலத்தில் மட்டுமல்ல போரில்லாக் காலத்திலும் கூட பெண்களின் பங்களிப்புச் சமனாக இருத்தல் வேண்டும்.” வட மாகாண பெண்கள் சாரணியத்தை மீள ஆரம்பித்து வைக்கும் நிகழ்வானது இலங்கை பெண்கள் சாரணியர் சங்கத்தினால் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில் 12 அக்டோபர் 2019 அன்று யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பிரதம விருந்தினாராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தெற்கு ஆசியாவில் […]

போர்க்காலத்தில் மட்டுமல்ல போரில்லா காலத்திலும் கூட பெண்களின் பங்களிப்பு சமமாக இருக்க வேண்டும் – கௌரவ ஆளுநர் Read More »

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆளுநரை சந்தித்தார்

இந்த சந்திப்பின்போது ஆளுநர் என்ற ரீதியில் போருக்கு பின்னரான வடமாகாணத்தில் மேற்கொள்ளும் பணிகள் குறித்து உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்ததுடன், விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதற்கு பாடுபடுவதாக கௌரவ ஆளுநர் அவர்கள் தெரிவித்தார். மேலும், வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி தொடர்பில் குறிப்பிட்ட கௌரவ ஆளுநர் அவர்கள் வடமாகாண மக்களுடைய அபிவிருத்திக்கு இந்த வங்கி எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ள வங்கியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்ததுடன், இந்த கூட்டுறவு வங்கியின் வளர்ச்சிக்கு பிரித்தானிய அரசின் உதவியினையும் எதிர்பார்த்திருப்பதாக

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆளுநரை சந்தித்தார் Read More »

காளானிலிருந்து உணவு தயாரிப்பு முறைகள் தொடர்பான செயன்முறை விளக்க பயிற்சிநெறி

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு கோவிற்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் காளானிலிருந்து உணவு தயாரிப்பு முறைகள் தொடர்பான செயன்முறை விளக்க பயிற்சிநெறி 12.10.2019 அன்று நடாத்தப்பட்டது. இதன்போது 5 வகையான சமையல் குறிப்புக்கள் தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டிருந்தது. காளான் உணவுகள் அதிகளவு புரதத்தைக் கொண்டிருப்பதுடன் புற்றுநோய் மற்றும் கொலஸ்திரோல் போன்ற நோய்களுக்கெதிராக மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது. இவை விட்டமின் – E இனை அதிகளவில் கொண்டுள்ளது. கலமுதிர்ச்சியைத் தடுத்து இளமையானதோற்றத்தை வழங்குகின்றது. கலமீளுருவாக்கத்தை தூண்டுகிறது. இப் பயிற்சிநெறியில் அப்

காளானிலிருந்து உணவு தயாரிப்பு முறைகள் தொடர்பான செயன்முறை விளக்க பயிற்சிநெறி Read More »

சர்வதேச முதியோர் வார விழா -2019

சர்வதேச முதியோர் வார விழாவானது ‘வயதுச் சமத்துவத்திற்கான பயணம்’ எனும் தொனிப் பொருளின் கீழ் கைதடியில் அமைந்துள்ள அரச முதியோர் இல்லத்தில்; 01.10.2019 (செவ்வாய்க்கிழமை) தொடக்கம் 07.10.2019 (திங்கட்கிழமை) வரை தொடர்ந்து 07நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவானது அரச முதியோர் இல்ல முதியோர்கள் மற்றும் முதியோர் அமைப்புக்களின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது. இந் நிகழ்வில் கைதடி அரச முதியோர் இல்ல மூத்தோருக்கான விளையாட்டுப்போட்டி, சமூகத்தில் மூத்தோருக்கு சேவையாற்றுவோர் மற்றும் முதியோருக்கு சேவையாற்றும் நிறுவனங்களை கௌரவித்தல்

சர்வதேச முதியோர் வார விழா -2019 Read More »

வனமரங்கள் நடுகை நிகழ்ச்சித்திட்டம்

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு நெடுங்கேணி, கனகராயன்குளம், பம்பைமடு, உளுக்குளம் மற்றும் செட்டிக்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் வனமரங்கள் நடுகை நிகழ்ச்சித்திட்டமொன்று கடந்த 07.10.2019, 08.10.2019 மற்றும் 10.10.2019 ஆம் திகதிகளில் நடாத்தப்பட்டன. இதன்போது நதிப்படுக்கைகளை அண்மித்த பகுதிகளிலும், மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் ஏறத்தாழ 2000 மரங்கள் நாட்டப்பட்டன. இம் மரநடுகை நிகழ்வில் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர் .  

வனமரங்கள் நடுகை நிகழ்ச்சித்திட்டம் Read More »

நெல் நாற்று நடுகைத் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி வகுப்பு

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு ஓமந்தை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் கடந்த 08.10.2019 ஆம் திகதியன்று நெல் நாற்று நடுகைத் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி வகுப்பொன்று நடாத்தப்பட்டது. வவுனியா மாவட்டத்தைப் பொறுத்த வரையில் விவசாயிகள் சேற்று விதைப்பையே அதிகம் மேற்கொண்டு வருவதுடன் நாற்று நடுகை முறையை மிக அரிதாகவே பின்பற்றுகின்றனர. ஆனால் ஏனைய விதைப்பு முறைகளிலும் நாற்று நடுகைத் தொழில்நுட்பமானது அதிக விளைச்சலைத் தருவதுடன், ஏக்கருக்குத் தேவையான விதை நெல்லின் அளவும் குறைவு. மேலும் இது நோய்த்

நெல் நாற்று நடுகைத் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி வகுப்பு Read More »

மாமரம் கத்தரித்தல் மற்றும் பயிற்றுவித்தல் தொடர்பான பயிற்சிநெறி

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு பாவற்குளம் பகுதியில் கடந்த 09.10.2019 ஆம் திகதியன்று மாமரத்தில் கத்தரித்தல் மற்றும் பயிற்றுவித்தல் தொடர்பான பயிற்சிநெறியொன்று நடாத்தப்பட்டது. பொதுவாக கத்தரித்தல் மற்றும் பயிற்றுவித்தல் செயன்முறையானது மாமரத்தின் இரண்டாவது வளர்ச்சிப் பருவத்திலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றது. இதன் மூலம் தாவரத்தில் சூரியஒளி படும் அளவு அதிகரிக்கப்படுவதுடன், நோய் பீடைத் தாக்கங்களும் குறைக்கப்படுகிறது. மேலும் நோய்த் தாக்கமுற்ற தாவரப் பாகங்கள் அகற்றப்படுவதுடன் தாவரமானது பராமரிக்கக் கூடிய உயரத்தில் பேணப்படுகிறது. இதன் விளைவாக மாமரத்தில் காய் கொள்ளும் தன்மை

மாமரம் கத்தரித்தல் மற்றும் பயிற்றுவித்தல் தொடர்பான பயிற்சிநெறி Read More »

போக்குவரத்து விதியை மீறியவர்களுக்கு மும்மொழிகளிலும் வழங்கப்படவுள்ள தண்டனைச்சீட்டு

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தமிழ்பேசும் மக்களின் நன்மையை கருத்தில்கொண்டு அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்கள் வீதி பயணத்தின்போது வழங்கப்படும் தண்டனைச்சீட்டானது இனிவரும் காலங்களில் மூன்று மொழிகளிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். இதுவரை காலமும் வாகன சாரதி வீதிப்போக்குவரத்து விதிகளை மீறும் பட்சத்தில் குறித்த சாரதியின் வாகன உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு தண்டனைச்சீட்டு வழங்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனைச்சீட்டில் தண்டனைகள் என்ன என்பது தொடர்பில் சிங்கள மொழியிலேயே குறிப்பிடப்பட்டிருந்தன. வடமகாண ஆளுநர் கலாநிதி

போக்குவரத்து விதியை மீறியவர்களுக்கு மும்மொழிகளிலும் வழங்கப்படவுள்ள தண்டனைச்சீட்டு Read More »

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கௌரவ அமைச்சர் , ஆளுநர் கண்காணிப்பு விஜயம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்திற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 13 ஒக்ரோபர் 2019 அன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர். அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் எதிர்வரும் 17ஆம் திகதி ‘யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்’ உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்போது ஆளுநர் அவர்கள் குறிப்பிடுகையில் இ இந்த அபிவிருத்தி திட்டமானது போருக்குபின்னரான

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கௌரவ அமைச்சர் , ஆளுநர் கண்காணிப்பு விஜயம் Read More »

புத்தளத்தில் இயங்கிவரும் மன்னார் வலய பாடசாலைகள் வடமேல் மாகாண ஆளுநரிடம் கையளிப்பு

வட மாகாணம் மன்னார் வலயத்திற்குட்பட்ட தற்போது புத்தளம் மாவட்டத்தில் இயங்கிவரும் ஆறு பாடசாலைகளையும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமேல் மாகாண கௌரவ ஆளுநர் பேசல ஜயரத்ன பண்டார அவர்களிடம் கையளித்தார். இந்த நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. மன்னார் வலயத்தை சேர்ந்த மன் /புத் /றிஸ்வான் அமுகபா ,மன் /புத் /ஆப்தீன் அமுகபா , மன் /புத் / அன்சரி அமுகபா , மன் /புத் / ஹஸ்பன் அமுகபா ,மன்/

புத்தளத்தில் இயங்கிவரும் மன்னார் வலய பாடசாலைகள் வடமேல் மாகாண ஆளுநரிடம் கையளிப்பு Read More »