September 2019

வடக்கு வட்டமேசை -‘வடமாகாணத்தில்_துடுப்பாட்ட_அபிவிருத்தியும்_தற்போதைய_பின்னடைவிற்கான_காரணங்களும்’

வடக்கு வட்டமேசை’ (‘Northern_Province_Round_Table’) கலந்துரையாடல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் 19 செப்ரெம்பர் 2019 அன்று மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது. ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக இம்முறை இடம்பெறவுள்ள வட்ட மேசை கலந்துரையாடலில் ‘வடமாகாணத்தில்_துடுப்பாட்ட_அபிவிருத்தியும்_தற்போதைய_பின்னடைவிற்கான_காரணங்களும்’ என்ற தலைப்பில் கலந்துரையாடப்படவுள்ளது. இது தொடர்பில் கருத்துக்கள் தெரிவிக்க ஆர்வமுள்ளோர் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு தமது […]

வடக்கு வட்டமேசை -‘வடமாகாணத்தில்_துடுப்பாட்ட_அபிவிருத்தியும்_தற்போதைய_பின்னடைவிற்கான_காரணங்களும்’ Read More »

மண்தொடாத மனிதன் எப்போதும் விண்தொட்டதில்லை – ஆளுநர்

மனிதன் இப்பொழுது விண்தொட்டிருக்கின்றான் ஆனால் மண்தொடாத மனிதன் எப்போதும் விண்தொட்டதில்லை என்று வடமாகாண விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பமான விவசாயக்கண்காட்சி 2019 இல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார் . ‘காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி’ என்னும் தொனிப்பொருளில் மாவட்ட விவசாய பயிற்சி நிலைய வளாகத்தில் ஆளுநர் தலைமையில் இன்று ஆரம்பமான விவசாய கண்காட்சி நிகழ்வில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு மேலும் ஆளுநர் அவர்கள் குறிப்பிடுகையில், விவசாயிகள் சேற்றிலே

மண்தொடாத மனிதன் எப்போதும் விண்தொட்டதில்லை – ஆளுநர் Read More »

ஆளுநரின் அறிவுறுத்தலில் சாவகச்சேரி பொது சுகாதார அதிகாரிகள் திடீர் கண்காணிப்பு விஜயம்

பொதுமக்களின் முறைப்பாட்டினை அடிப்படையாக கொண்டு வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தென்மராட்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 14 உணவகங்களுக்கு சாவகச்சேரி பொதுசுகாதார பரிசோதகர்கள் இன்று (16) திடீர் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டனர். தென்மராட்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சாவகச்சேரி, கொடிகாமம், மிருசுவில் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள உணவகங்களில் நடைபெற்ற இந்த பரிசோதனையின் போது சட்டத்திற்கமைவாக உணவகங்கள் இயங்குகின்றனவா என்பதுடன் உணவகங்களின் தரம் தொடர்பில் ஆராயப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது 11 உணவகங்கள்

ஆளுநரின் அறிவுறுத்தலில் சாவகச்சேரி பொது சுகாதார அதிகாரிகள் திடீர் கண்காணிப்பு விஜயம் Read More »

விவசாயக் கண்காட்சி 2019 – யாழ்ப்பாணத்தில் 17 செப்ரெம்பர் தொடக்கம் 20 செப்ரெம்பர் வரை நடைபெறும்

யாழ்ப்பாணம் பலாலி வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிலையம் என்பன இணைந்த வளாகத்தில் 17.09.2019 ஆம் திகதி தொடக்கம் 20.09.2019 ஆம் திகதி வரையான 4 நாட்கள் “காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி” என்னும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி – 2019 காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியின் தொடக்க நிகழ்வு 17.09.2019 ஆம் திகதி

விவசாயக் கண்காட்சி 2019 – யாழ்ப்பாணத்தில் 17 செப்ரெம்பர் தொடக்கம் 20 செப்ரெம்பர் வரை நடைபெறும் Read More »

மாகாண கைத்தொழில் கண்காட்சிக்கு ஆளுநர் விஜயம்

வடமாகாண தொழிற்திணைக்களம் ,தேசிய அருங்கலைகள் பேரவை ,புடவைக்கைத்தொழில் திணைக்களம் ஆகியன மத்திய வங்கியுடன் இணைந்து நடாத்தும் மாகாண கைத்தொழில் கண்காட்சிக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 14 செப்ரெம்பர் 2019 அன்று மாலை விஜயம் செய்தார் . கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களை உற்பத்தி செய்யும் வடமாகாண உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக யாழ் மத்திய கல்லூரியில் இன்று ஆரம்பமான இந்த கைத்தொழில் கண்காட்சி நாளையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

மாகாண கைத்தொழில் கண்காட்சிக்கு ஆளுநர் விஜயம் Read More »

சிவகுருநாதன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ண துடுப்பாட்டப் போட்டி நிகழ்வில் ஆளுநர் பங்கேற்பு

யாழ் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரிகளுக்கிடையிலான சிவகுருநாதன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2019 துடுப்பாட்டப் போட்டியின் பிரதம அதிதிகளாக ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களும் சிவில் விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்களும் கலந்து சிறப்பித்தனர். வருடாந்தம் இடம்பெறும் இந்த துடுப்பாட்ட போட்டி சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் 14 செப்ரெம்பர் 2019 அன்று இடம்பெற்றது. வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு  

சிவகுருநாதன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ண துடுப்பாட்டப் போட்டி நிகழ்வில் ஆளுநர் பங்கேற்பு Read More »

பாடசாலைகள் வழமைபோல் இயங்கும்- ஊடக அறிக்கை

வட மாகாணத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் எதுவும் இயங்காது என்பதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்திருப்பது தொடர்பில் ஆளுநரின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட தகவல் உண்மையானதல்ல எனவும் வடமாகாணத்தின் சகல பாடசாலைகளும் திங்கட்கிழமை வழமைபோல் இயங்குமெனவும் வட மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது. வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு  

பாடசாலைகள் வழமைபோல் இயங்கும்- ஊடக அறிக்கை Read More »

பாத்தீனியம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு பாத்தீனியம் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் வவுனியா விவசாயக் கல்லூரி வளாகத்திற்கு முன்பாக கடந்த 10.10.2019 ஆம் திகதி அன்று நடாத்தப்பட்டது. இதன்போது பொறுப்பான பாத்தீனியம் உத்தியோகத்தரின் வழிகாட்டலின் கீழ் விவசாயக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மேற்படி பாத்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  

பாத்தீனியம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி Read More »

தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சிநெறி

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு உளுக்குளம் விவசாயபோதனாசிரியர் பிரிவில் கடந்த 08.10.2019 ஆம் திகதி அன்று தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சிநெறியொன்று நடாத்தப்பட்டது. இதன் போது தேனீ குடித்தொகையை பேணுதல், பிரித்தல், பீடைத் தகக்கங்களிலிருந்து பாதுகாத்தல் போன்றன தொடர்பான செயன்முறை விளக்கங்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. தேனீ வளர்பானது வவுனியா மாவட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. எனினும் மிகக் குறைந்தளவிலான முயற்சியாளர்களே மேற்படி தேனீவளர்ப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் மேலும் முயற்சியாளர்களை

தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சிநெறி Read More »

காணி விடுவிப்பு சம்பந்தமான ஊடக அறிக்கை

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வட மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் பயன்படுத்தப்படும் வடமாகாணத்திலுள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஏற்கனவே கௌரவ ஆளுநர் அவர்களினால் யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மீள் உரிமைகோரல் விண்ணப்பப்படிவங்கள் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படுக்கொண்டிருக்கின்றன. இந்த திட்டத்தின்

காணி விடுவிப்பு சம்பந்தமான ஊடக அறிக்கை Read More »