August 2019

யாழ்ப்பாண மாவட்ட ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட சமூக மட்ட அமைப்பிற்கும், மருதங்கேணியில் அமைந்துள்ள பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கும் வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல்

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. ஆர். வரதீஸ்வரன் அவர்களால் தையிட்டி பகுதியைச் சேர்ந்த ஒன்பது  பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் உள்ளடங்களாக பத்து அங்கத்தவர்களைக் கொண்டு மணப்பெண் அலங்காரப் பொருட்கள் மற்றும் கைவினை சார் பொருட்களின் உற்பத்திகளைச் செய்யும்  பனிமலை மாதா  மகளிர் விவகாரக் குழு, தையிட்டி கிழக்கு, தெல்லிப்பளை என்ற அமைப்பிற்கு  அவர்களின்  உற்பத்தியினை மேலும் விருத்தி செய்வதற்கென (மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்) ரூபா.200,185 பெறுமதியான இயந்திரங்கள்  மற்றும்  உபகரணங்கள் […]

யாழ்ப்பாண மாவட்ட ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட சமூக மட்ட அமைப்பிற்கும், மருதங்கேணியில் அமைந்துள்ள பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கும் வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் Read More »

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ் புத்தகத்திருவிழாவிற்கு இலவச பஸ் சேவை

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய முதன்முறை யாழ் மண்ணில் மிகப்பிரமாண்டமாய் நடைபெறும் யாழ் புத்தகத்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வாசகர்களுக்கு இலவச பஸ்சேவை இடம்பெறவுள்ளது வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம் (29) நல்லூர் தேர்த்திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தகக்கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக இந்த இலவச பஸ் சேவை நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். இந்த புத்தகத்திருவிழாவில் அதிகளவு வாசகர்கள் கலந்து கொள்வதனால் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காலை

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ் புத்தகத்திருவிழாவிற்கு இலவச பஸ் சேவை Read More »

நாளை ஆரம்பமாகவுள்ள யாழ் புத்தக திருவிழாவின் முன்னாயத்தப் பணிகள் தொடர்பில் ஆளுநர் ஆராய்வு

மிக பிரமாண்டமாய் நாளை (27)ஆரம்பமாகவுள்ள யாழ் புத்தகக் கண்காட்சியின் ஏற்பாடுகள் நடைபெறும் யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (26) மாலை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள் , இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ ஆளுநர் தலைமையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 27 ஆகஸ்ட் 2019 அன்று ஆரம்பமாகவுள்ளது.

நாளை ஆரம்பமாகவுள்ள யாழ் புத்தக திருவிழாவின் முன்னாயத்தப் பணிகள் தொடர்பில் ஆளுநர் ஆராய்வு Read More »

கனடா உயர்ஸ்தானிகருக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கான கனடா நாட்டின் உயர்ஸ்தானிகர் திரு டேவிட் மெக்கினன் அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் 26 ஆகஸ்ட் 2019 அன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, போருக்குபின்னரான தற்போதைய வடமாகாண மக்களின் நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த ஏப்ரல் 21 இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரான நிலைமைகள் வடமாகாணத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பில் கனடிய உயர்ஸ்தானிகருடன் Canadian ஒருங்கிணைந்த மோதல் பகுப்பாய்வு செயல்முறை ஐ சேர்ந்த நிகழ்ச்சித்திட்ட

கனடா உயர்ஸ்தானிகருக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு Read More »

ஆளுநர் தலைமையில் திருக்குறள் பெருவிழா முல்லைத்தீவில் ஆரம்பம்

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் நெறிப்படுத்தலில் வடமாகாணத்தில் முதன்முறை இடம்பெறும் திருக்குறள் பெருவிழா “தொட்டணைத்தூறும் மணற்கேணி”  என்னும் தலைப்பில் முல்லைத்தீவு ஊற்றுங்கரை சித்திவிநாயகர் ஆலய மண்டபத்தில் வடமாகாண ஆளுநர் தலைமையில் 23 ஆகஸ்ட் 2019 அன்று ஆரம்பமானது. வடமாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இன்றைய நிகழ்வில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் திருக்குறள் புத்தகம் மற்றும் திருக்குறள் ஸ்டிக்கர்

ஆளுநர் தலைமையில் திருக்குறள் பெருவிழா முல்லைத்தீவில் ஆரம்பம் Read More »

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் அடிக்கல் நாட்டும் வைபவம் 

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் அடிக்கல் நாட்டும் வைபவமானது 16.08.2019 ஆம் திகதி நடைபெற்றது. இக்கட்டடமானது நெதர்லாந்து அரசின் இலகு கடன் உதவியினால் உருவாக்கப்படவுள்ளது. சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். அத்தோடு இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் பசத்தியலிங்கம் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நெதர்லாந்து செயற்திட்ட பணிப்பாளர்கள், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடமாகாண சுகாதார சேவைகள்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் அடிக்கல் நாட்டும் வைபவம்  Read More »

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித் திட்டம் – 26 ஆகஸ்ட் 2019

யாழ் மாவட்டத்தின் நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித் திட்டத்தின் ஏழாவது கட்டத்தின் கீழ் கல்வித்துறையின் நடமாடும் சேவை எதிர்வரும் 26.08.2019 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணிவரை செம்மணி வீதி நல்லூரில் அமைந்துள்ள மாகாணக் கல்வி அமைச்சில் நடாத்துவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித் திட்டம் – 26 ஆகஸ்ட் 2019 Read More »

ஆளுநரின் பொதுமக்கள் தினம்

வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் ஆளுநரின் பொதுமக்கள் தினம்’ கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் இன்று (21) புதன்கிழமை நடைபெற்றது. – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநரின் பொதுமக்கள் தினம் Read More »

வடக்கு வட்டமேசை -‘கூட்டுறவு மற்றும் நுண்கடன் சம்பந்தமான சாதக பாதகங்கள்’

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் ‘வடக்கு வட்டமேசை’ (‘‘Northern_Province_Round_Table’’) கலந்துரையாடல் நாளை (22) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது. கௌரவ ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக இடம்பெறும் இந்த வட்ட மேசை கலந்துரையாடலில் இம்முறை ‘கூட்டுறவு மற்றும் நுண்கடன் சம்பந்தமான சாதக பாதகங்கள்’ தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. நுண்கடன் தொடர்பில் கருத்துக்கள் தெரிவிக்க

வடக்கு வட்டமேசை -‘கூட்டுறவு மற்றும் நுண்கடன் சம்பந்தமான சாதக பாதகங்கள்’ Read More »

சாவகச்சேரி ஆதார வைத்தியாலையில் குணநலம்பெறும் நிலையம் (Healing Center) திறந்து வைக்கப்பட்டது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள குணநலம் பெறும் நிலையம் 15-08-2019 அன்று  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

சாவகச்சேரி ஆதார வைத்தியாலையில் குணநலம்பெறும் நிலையம் (Healing Center) திறந்து வைக்கப்பட்டது. Read More »