May 2019

ஐ.நா சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் – ஆளுநர் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜீன் கோப் மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் ரிம் சட்ரன் ஆகியோர் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 31 மே 2019 அன்று காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது வடமாகாண பாடசாலைகளின் பாதுகாப்பு மற்றும் ஆக்கபூர்வமான வகுப்பறை நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுத்து செல்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

ஐ.நா சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் – ஆளுநர் சந்திப்பு Read More »

மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும் – ஆளுநர்

மதத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கம், மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும். அது ஒவ்வொரு இலங்கை இஸ்லாமியருடைய ஆறாவது கடமையாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகின்றேன் என்று வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு மாகாண இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மொகைதீன் ஜூம்மா பள்ளிவாசலில் 28 மே 2019 அன்று மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஆளுநர்

மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும் – ஆளுநர் Read More »

பருத்தித்துறை துறைமுக பிரதேசத்திற்கு ஆளுநர் விஜயம்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் மீள் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ள பருத்தித்துறை துறைமுகப் பகுதிக்கு இன்று (29) மாலை விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் துறைமுகத்தின் ஆரம்ப அபிவிருத்தி நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார். பருத்தித்துறை பிரதேச மீனவர்களின் பொருளாதார நிலைமையினை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த துறைமுக அபிவிருத்தி செயற்திட்டத்தினை முன்னெடுப்பதில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கௌரவ ஆளுநரின் இவ்விஜயத்தில் ஆராயப்பட்டதுடன் , துறைமுகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள மெதடிஸ்ட் பாடசாலைக்கும் ஆளுநர்

பருத்தித்துறை துறைமுக பிரதேசத்திற்கு ஆளுநர் விஜயம் Read More »

ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் நடைபெற்றது

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் இன்று (29) இடம்பெற்றது. –வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் நடைபெற்றது Read More »

வடக்கு மாகாண இணைந்த சேவையின் பதவியணியான அலுவலக பணியாளர் சேவை நியமனக்கடிதங்கள் வழங்கல்

வடக்கு மாகாண அலுவலக பணியாளர் சேவையின் தரம் 3 இன் 16 வெற்றிடங்களிற்கான போட்டிப் பரீட்சை மூலம் தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கு நியமனக்கடிதங்கள் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் 2019.05.29ம் திகதி வடக்கு மாகாண சபை வளாகத்தில் வழங்கி வைக்கப்பட்டன.

வடக்கு மாகாண இணைந்த சேவையின் பதவியணியான அலுவலக பணியாளர் சேவை நியமனக்கடிதங்கள் வழங்கல் Read More »

சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018

வடமாகாண விவசாயத் திணைக்களத்தினால் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சிறந்த விவசாயிகளைத் தெரிவு செய்து கௌரவிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாக யாழ்ப்பாணம் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினரால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் சிறந்த விவசாயிகள் கௌரவிப்பில் 2018 ஆம் ஆண்டிற்கான நிகழ்வானது பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி. அஞ்சனாதேவி சிறிரங்கன் அவர்களின் தலைமையில் 14.05.2019 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக

சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018 Read More »

புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் – ஆளுநர் சந்திப்பு

வடமாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி விஜயகுணவர்தன ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 28 மே 2019 அன்று காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், வடமாகாணத்தில் இடம்பெறும் சமூகவிரோத செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பிலும் , யாழ்மாவட்டத்திலே அதிகளவிலான சமூக விரோத செயல்கள் காணப்படுவதாகவும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் ஆளுநர் அவர்கள் இதன்போது கேட்டுக்கொண்டார். மேலும் சட்டவிரோத மண்அகழ்வு நடவடிக்கைகள்

புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் – ஆளுநர் சந்திப்பு Read More »

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018

2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வும் வயல்விழாவும் முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன் அவர்களின் தலைமையில் ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் 23.05.2019 ஆம் திகதி  ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். மேலும் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் இ.கோகுலதாசன், கால்நடை உற்பத்தி

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018 Read More »

கௌரவ ஆளுநர் எண்ணக்கருவிற்கு அமைவாக யாழில் புத்தக கண்காட்சி

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக புத்தக விற்பனை மற்றும் கண்காட்சி எதிர்வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் செப்டம்பர் 1ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்  நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சி தொடர்பான ஊடக சந்திப்பு இன்று (24) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது குறித்த கண்காட்சியினை ஏற்பாடு செய்யும் இலங்கை நூல் விற்பனையாளர்கள் ஏற்றுமதி இறக்குமதி சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.  

கௌரவ ஆளுநர் எண்ணக்கருவிற்கு அமைவாக யாழில் புத்தக கண்காட்சி Read More »

வடக்கு மாகாண சுகாதார சேவையின் பரிசாரகர தரம்-III க்கான பதவியுயர்வு மீதான நியமனக் கடிதங்கள் கையளித்தல் நிகழ்வு

வடமாகாண சுகாதார அமைச்சினால் சுகாதார சேவை பரிசாரகர் தரம் – iii க்கான பதவியுயர்வுக்கான நியமன கடிதங்கள் 22.05.2019 அன்று சுகாதார திணைக்களத்தின் மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டன. சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.சி.திருவாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் 99 பணியாளர்கள் தமக்கான பதவியுயர்வு மீதான நியமன கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். அத்தோடு வளவாளர்களாக பயிற்சி வழங்கிய அலுவலர்களும் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலாநிதி. சுரேன் ராகவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நியமன

வடக்கு மாகாண சுகாதார சேவையின் பரிசாரகர தரம்-III க்கான பதவியுயர்வு மீதான நியமனக் கடிதங்கள் கையளித்தல் நிகழ்வு Read More »