சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சு
செயலாளர்
ஜே.எஸ்.அருள்ராஜ்
செயலாளர்
பொது தொ.பே : +94-21-2220800
தொ.நகல் : +94-21-2220806
மின்னஞ்சல்: mhealthnpc@gmail.com
பணிக்கூற்று:
உடல், உள ஆரோக்கியம் கொண்ட நிகழ்கால மற்றும் எதிர்கால மனிதவளத்தினை திட்டமிட்டு வளப்படுத்தி நீடித்து நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்தல்.
பிரதான செயற்பாடுகள்
- வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுதேச மருத்துவ ஆணையாளர், சமூகசேவைகள் பணிப்பாளர் மற்றும் நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் ஆணையாளர் ஆகியோருடன் ஒருங்கிணைந்து செயற்படுதலும், அவர்களுக்கு பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் பயனுறுதிமிக்க நிதி, நிர்வாக, திட்டமிடல் நடவடிக்கைகள் தொடர்பாகவும் துறைசார் நடவடிக்கைகளை மேம்படுத்தல் தொடர்பாகவும் வழிகாட்டல்களை வழங்குதல்.
- நிதி முகாமைத்துவம் மீது கட்டுப்பாட்டினைக் கொண்டிருத்தல்.
- அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்களுக்கு ஐந்து வருட தந்திரோபாய திட்டத்தை தயாரித்தல்.
- நிதி, ஆளணிகளை பெற்றுக் கொள்வதற்கு மத்திய அமைச்சுக்களுடன் ஒருங்கிணைந்த செயற்பாட்டைக் கொண்டிருத்தல்.
- துறைசார்உத்தியோகத்தருக்கானபுலமைப்பரிசில்களைமத்தியசுகாதாரஅமைச்சின் அனுமதியுடன் ஒழுங்குசெய்தல்.
- வெவ்வேறான நிதிவழங்கும் முகவர்களிடமிருந்து அபிவிருத்தி வேலைகளுக்கு நிதியைப் பெற்றுக் கொள்ளல்.
- நன்கொடையாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் நிதியினைக் கொண்டு இனக் குழப்பங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திவேலைகளை ஒழுங்கமைத்தலும் மேற்பார்வைசெய்தலும்.
- உதவிகளையும் வழிகாட்டுதலையும் வழங்குவதன் மூலம் சுகாதார நிலையங்கள் மற்றும் சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், குறிக்கப்பட்ட இலக்கினைஅடைவதற்குதொடர்நடவடிக்கைஎடுத்தல்.
- அபிவிருத்திக்காக தகவல்களை ஆராய்தறித்தல்.
- மேற்கத்தையமற்றும் பாரம்பரிய சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்றத்தைக் கண்காணித்தலும் ஒருங்கிணைத்தலும்.
- திணைக்கள சேவைகளைதகவல் தொழிநுட்பம் ஊடாக இலகுவாக பெற்றுக் கொள்ளவழிய மைத்தல்.
- உடல், உளநல ரீதியாகபாதிக்கப்பட்டவர்களுக்கும் வலுவிழந்தோர்களுக்கும் மற்றும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கைஎடுத்தல்.
குறிக்கோள்கள்
- மாகாண மட்டத்தில் திறமையான நிர்வாக, நிதி, திட்டமிடல் மற்றும் முகாமைத்துவமுறைமை கொள்கைகளை உருவாக்குதலும் அபிவிருத்திசெய்தலும்.
- அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்களுக்கிடையில் கொள்கைகளைப் பரப்புதலும் அமுல்படுத்தலும் அவற்றை கண்காணித்தலும்.
- பின் தங்கிய பகுதிகளில் பௌதீக உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதார மற்றும் சமூகசேவைகளை மேம்படுத்தல்.
- தேசிய மற்றும் மாகாணமட்ட திணைக்களங்களுடன் துறைசார் நடவடிக்கைகளை ஒன்றிணைத்தல்.
- அடிப்படை சுகாதார பராமரிப்பு சேவைகளை பிராந்திய மட்டத்தில் வழங்குவதற்கு கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் நியமனங்களையும் உருவாக்குதல்.
- சகலதுறை பணியாளர்களினதும் வேலைதேசியநியம தொழில்சார் பயிற்சித் தரத்துடன் இருப்பதை உறுதிசெய்தல்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் அனர்த்த முகாமைத்துவத் திட்டம் செயற்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தல்.
- சிறந்த செயலாற்றுகைமற்றும் நிலையான முறைமைகளுக் கூடாக சகலருக்கும் உயர்தர வினைத் திறனுடைய இலகுவில் பெறக்கூடியசுகாதார, சமூகசேவைகளை உறுதிசெய்தல்.
- ஆதரவற்ற சிறுவர்கள், விதவைகள், முதியோர்கள், ஆகியோருக்கு ஆதரவுச் சேவைகளிற்கு முக்கியத்துவம் வழங்கிப் பலப்படுத்தல்.
- பெண் சமத்துவம், உரிமைகள் மேம்பாட்டுக்கு உதவுதல்.
- தேசிய கொள்கைகளை அடிப்படையாக வைத்து மாகாண கொள்கைகளை வகுத்தலும், நடைமுறைப்படுத்தலும்.
தொடர்பு அட்டவணை
அஞ்சல் முகவரி :சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம்.
பொது தொ.பே இல :021- 2220807
தொ.நகல் :021- 2220806
மின்னஞ்சல் : mhealthnpc@gmail.com
பதவி | பெயர் | தொ.பே இல | மின்னஞ்சல் |
செயலாளர் | திரு.ஜே.எஸ்.அருள்ராஜ் | அலு. தொ.பே: 0212220800 கைபேசி: 0777589871 | mhealthnpc@gmail.com |
சிரேஸ்ட உதவிச் செயலாளர் | திருமதி.அ.சாந்தசீலன் | அலு. தொ.பே: 0212220809 தொ.நகல்: 021- 2220806 கைபேசி: 0776483985 | santhanabish@gmail.com |
உதவிச் செயலாளர் | திரு.சி.சுரேந்திரன் | தொ.நகல்: 021-2220806 Mobile: 0775913125 | mhealthnpc@gmail.com |
உதவிச் செயலாளர் | செல்வி.வே.தேவகுமாரி | தொ.நகல்: 021-2220806 Mobile: 0779431870 | mhealthnpc@gmail.com |
திட்டமிடல் பணிப்பாளர் | திரு.க.ஜெயக்குமார் | அலு. தொ.பே: 0212220802 தொ.நகல்: 021- 2220806 கைத் தொ.பே: 0777136708, 0751856713 | kjeyamm@gmail.com |
பிரதம கணக்காளர் | திருமதி சு.கலைச்செல்வன் | அலு. தொ.பே: 0212220801 தொ.நகல்: 021- 2220806 கைத் தொ.பே: 07683955463 | selvaaccountant@gmail.com |
நிர்வாக உத்தியோகத்தர் | திரு.சந்திரசேகரம் பிரசாத் | அலு. தொ.பே: 0212220803 தொ.நகல்: 021- 2220806 கைத் தொ.பே: 0776701562 | cpshath@gmail.com |
திட்டமிடல் நிகழ்ச்சித் திட்ட அலுவலர் | திரு.கோ.கிருஸ்ணகுமார் | அலு. தொ.பே: 0212220802 தொ.நகல்: 021- 2220806 கைத் தொ.பே: 0777615341 | gkrish26@gmail.com |
LATEST NEWS & EVENTS
Post Views: 3,896