உண்மை விதையிலிருந்து வெங்காயச் செய்கை – அறுவடை விழா

மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தின் கீழ், உண்மை விதையிலிருந்து வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல்விழா 02.10.2026 அன்று திரு. க. யினீசன் அவர்களின் தோட்டத்தில் நடைபெற்றது.

இச்செய்கையானது நுண்நீர்ப்பாசன முறையின் கீழ் உயர்மட்டப் பாத்திகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உண்மை விதையிலிருந்து வெங்காயச் செய்கையின் நவீன தொழில்நுட்பங்கள், நுண்நீர்ப்பாசனத்தின் பயன்பாடு மற்றும் உயர்மட்டப் பாத்தி முறையின் நன்மைகள் தொடர்பாக இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடவிதான உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், கமக்கார அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர், விவசாயப் போதனாசிரியர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்வயல்விழா மூலம் உண்மை விதையிலிருந்து வெங்காயச் செய்கையை ஊக்குவிப்பதுடன், நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தும் நோக்கமும் நிறைவேற்றப்பட்டது.