குரக்கன் அறுவடை, வயல்விழா -புன்னைநீராவி

கிளிநொச்சி மாவட்ட புன்னைநீராவி விவசாயப்போதனாசிரியர் பிரிவில், 2026ஆம் ஆண்டு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறுதானியச் செய்கையை ஊக்குவித்தல் செயற்பாட்டின் கீழ் குரக்கன் செய்கை வயல்விழாவானது விவசாயப்போதனாசிரியர் திருமதி.கி.தண்குழலி தலைமையில் குளோரி தோட்டம் உழவனூர் பகுதியில் 01.10.2026 காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாடவிதான உத்தியோகத்தர் திரு.க.பிரதீபன், புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள், தர்மபுரம் மத்திய கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கண்டாவளை பிரதேச விவசாயப்போதனாசிரியர்கள், கற்பகதரு சங்கத்தலைவர், செயலாளர் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர், மேலும் இந் நிகழ்வில் குரக்கனிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டது.

பாரம்பரிய விவசாய நடைமுறைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு இவ் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. வயலில் விளைந்த பயிர்களின் அறுவடை நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன், விவசாயிகளின் பாரம்பரிய அறிவு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.