தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டின் குழுப் போட்டிகளில் ஆண் – பெண் இருபாலருக்குமான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியை கௌரவ ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்.

தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டின் குழுப் போட்டிகளில் ஒன்றான ஆண் – பெண் இருபாலருக்குமான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (25.07.2026) சனிக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில், யாழ்ப்பாண மாநகர சபையின் கௌரவ மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராசா, தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் நிர்வாகப் பணிப்பாளர் மனுல சமல் பெரேரா, வடக்கு மாகாணப் பணிப்பாளர் காமினி, யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர் திருமதி சிவகாமி உமாகாந்தன், தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் உதவிப் பணிப்பாளர வினோதினி சிறிமேனன், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன், ஜெய்கா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஆகியோர் பங்கேற்றனர்.

விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு கொடியேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், இந்தப் போட்டிகளில் பங்கேற்க வருகை தந்துள்ள ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த வீர வீராங்களை அன்புடன் வரவேற்பதாகக் குறிப்பிட்டதுடன் விளையாட்டு நிகழ்வு சிறப்புடன் நடைபெற தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.