தேனீக்களின் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு 2017ம் ஆண்டு மே 20 முதன்முறையாக உலக தேனீ தினமானது ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டது. 2026 ஆம் ஆண்டின் உலக தேனீ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுடன் கூடிய களச்செயற்பாட்டு விழாவானது வடமாகாண விவசாயத்திணைக்களத்தினால் நடாத்தப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் ஆலங்குளம் கிராமத்தில் விவசாயப் போதனாசிரியர் திரு. க. ஜெனோஜன் அவர்களின் ஏற்பாட்டிலும், முல்லைத்தீவு பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி சி. கிருபவதனி அவர்களின் தலைமையிலும், விவசாயி திரு. சு. குகதாசன் அவர்களின் இல்ல வளாகத்தில் 22.05.2026 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு. சு. சிவஸ்ரீ அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். மேலும் மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் திரு. த. ராஜகோபு, மேலதிக மாகாண விவசாய பணிப்பாளர் திரு. தெ. யோகேஸ்வரன், முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் திரு. சி. ஜெயகாந்தன், கண் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் டாக்டர் ச. சந்திரகுமார் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.






யாழ்மாவட்டத்தில் உரும்பிராய், விவசாயப்போதனாசிரியர் பிரிவில் பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி அஞ்சனாதேவி சிறிரங்கன் தலைமையில் 20.05.2026 புதன் கிழமை நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக தேசிய கல்வியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் அம்பிகை பாலன் அவர்களும் ஆசிரியர் பயிற்சி கலாசாலை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. நற்குணானந்தன் அவர்களும் மற்றும் மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலக கணக்காளர் திரு ப.கண்ணதாசன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். அத்தியார் இந்துக்கல்லூரி ஆசிரியர், மாணவர்கள், ஸ்ரீசரவணபவானந்த பாடசாலை ஆசிரியர், மாணவர்கள், கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தவர்கள், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள் மற்றும் தேனீ வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகளும் கலந்து கொண்டார்கள்.





மன்னார் மாவட்டத்தில் இரணைஇலுப்பைக்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் சின்னவலையன்கட்டு பிரதேசத்தில் திரு.சி.சிவராம் தலைமையில் 20.05.2026 புதன் கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி. பிரியதர்சினி றமணேந்திரன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். அவர் தனது உரையில் தேனீ இனங்கள் பயிர் உற்பத்திக்கும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் வழங்கும் முக்கிய பங்களிப்பை வலியுறுத்திக் கூறினார். மேலும் அவர் தனது உரையில் உலக தேனீக்கள் தின வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கிக் கூறியதுடன் தேன் உற்பத்தி கிராம மட்ட பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடியதெனக் குறிப்பிட்டார்.





