நெல் நாற்று நடுகை வயல் விழா – வன்னேரிக்குளம்

கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகத்தின்; தொழில்நுட்ப வழிகாட்டலின் கீழ் யூனியன் விழுதுகள் இளைஞர் விவசாயக் கழகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் இயந்திர நெல் நாற்று நடுகையின் 2026 சிறுபோகத்திற்கான ஆரம்பவிழாவானது வன்னேரிக்குளம் விவசாயப்போதனாசிரியர் பிரிவில் 16.03.2026 அன்று நடைபெற்றது.
வன்னேரிக்குளம் தொழில்நுட்ப உதவியாளர் T.துசாந் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் திருமதி சோ.விஜயதாசன்- பிரதி விவசாயப்பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், யூனியன் விழுதுகள் கழக உறுப்பினர்கள் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி யூனியன் விழுதுகள் இளைஞர் விவசாயக் கழகத்தினால் 40ஏக்கர் வரையில் இயந்திர நாற்று நடுகை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.