விவசாய அமைச்சு

புயல் மற்றும் வெள்ள அனர்த்தங்களில் இருந்து கால்நடைகளை பாதுகாத்தல்

அடுத்து வரும் இரண்டு மூன்று தினங்கள் (நவம்பர் 26-28 தினங்கள்) வடக்கு மாகாணத்தின் சகல பகுதிகளிலும் 350 மிலி வரையான கடும் மழையுடன் கூடிய காற்று வீசுவதற்கான ஏதுநிலைகள் காணப்படுகின்ற நிலையில் சூழல் வெப்ப நிலையும் 20 டிகிரி செல்சியஸ் வரை குறைவடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. இத்தகைய காலநிலை மாற்றங்களினால் திறந்த வெளிகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் கோழிகள் பாரிய அளவில் பாதிப்படையக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமுண்டு எனவே கால்நடைப்பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை பாதகாப்பதற்காக பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது […]

புயல் மற்றும் வெள்ள அனர்த்தங்களில் இருந்து கால்நடைகளை பாதுகாத்தல் Read More »

பரசூட் மற்றும் இயந்திர தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்ட குமரபுரம் விவசாயப்போதனாசிரியர் பிரிவல் பரசூட் மற்றும் இயந்திர தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை வயல் விழா நிகழ்வானது 26.08.2024 அன்று காலை 10.00 மணியளவில் T.மகேஸ்வரன்(குணா),குமரபுரம்,பரந்தன் என்னும் முகவரியில் உள்ள அவரது வயலில் வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் வழிகாட்டலில் விவசாயப் போதனாசிரியர் திருமதி.N.சரண்ஜா அவர்களின் தலைமையில் யாழ் பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்கள் மற்றும் கமநல சேவைகள் நிலையத்தின் அலுவலர்களுடன் இணைந்து நடாத்தப்பட்டது . இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி.சூ.ஜெகதீஸ்வரி

பரசூட் மற்றும் இயந்திர தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை வயல் விழா நிகழ்வு Read More »

பரசூட் தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை தொடர்பான வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்ட திணைக்களத்தின் கீழ் உள்ள அக்கராயன் விவசாயப்போதனாசிரியர் பிரிவல் பரசூட் தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை தொடர்பான வயல் விழா நிகழவானது 07.08.2024 அன்று காலை 09 மணியளவில் கந்தையா சௌந்தரராசா,அக்கராயன் என்னும் முகவரியில் உள்ள அவரது வயலினில் சிரேஸ்ட பாடவிதான உத்தியோகத்தர் திரு.சோ. விஜயன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.ம.விஜிதரன் (கமநல அபிவருத்தி உத்தியோகத்தர்,அக்கராயன் குளம்)அவர்கள் கலந்து கொண்டதுடன்,பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர்,பாடவிதானஉத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், பகுதிக்குரிய கிராம சேவகர்,

பரசூட் தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை தொடர்பான வயல் விழா நிகழ்வு Read More »

வரிசை முறையிலான பயறுச் செய்கை – வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் ஸ்கந்தபுரம் விவசாயப்போதனாசிரியர் பிரிவல் வரிசை முறையிலான பயறுச் செய்கை தொடர்பான வயல் விழா நிகழவானது 07.08.2024 அன்று காலை 11 மணியளவில் ம.புவநேந்தின் அவர்களினது தோட்டத்தில் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.சூ.ஜெகதிஸ்வரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.ம.விஜிதரன் (கமநல அபிவருத்தி உத்தியோகத்தர்,அக்கராயன் குளம்) அவர்கள் கலந்து கொண்டதுடன், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், பகுதிக்குரிய கிராம சேவகர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டமை

வரிசை முறையிலான பயறுச் செய்கை – வயல் விழா நிகழ்வு Read More »

உலர் வலயத்தில் கறுவா பயிர்ச்செய்கை அறிமுகம் மற்றும் பதப்படுத்தல் செயன்முறை விளக்க நிகழ்வு

நிகழ்வானது 25.07.2024 அன்று மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் வட்டக்கச்சியில் “வளம் தரும் வாசனை பயிரை வரவேற்போம்” எனும் தொனிப்பொருளில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி.சூ.ஜெகதீஸ்வரி தலைமையில் காலை 10 மணிக்கு இடம்பெற்றது. 1/4 ஏக்கர் விஸ்தீரணத்தில் செய்கையை மேற்கொள்ளும் நோக்கில் குறித்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் வைபவ ரீதியான கறுவாச்செடி நடுகை, அதன் பதப்படுத்தல் தொடர்பான செயல்முறை விளக்கங்கள், பயிற்செய்கை முகாமைத்துவம் தொடர்பான தெளிவு படுத்தல்கள் மற்றும் கருவாவிலிருந்து சிற்றுண்டி, தேநீர் தயாரிப்பு

உலர் வலயத்தில் கறுவா பயிர்ச்செய்கை அறிமுகம் மற்றும் பதப்படுத்தல் செயன்முறை விளக்க நிகழ்வு Read More »

பரசூட் முறையிலான நெற் செய்கை வயல் விழா நிகழ்வு – முல்லைத்தீவு மாவட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நட்டாங்கண்டல் விவசாய போதனாசிரியர் பிரிவில் முன்று முறிப்பு கிராமத்தில் நீல வெட்டியர் குளம் வயல்வெளியில் பரசூட் முறையாலான நெற்செய்கையின் அறுவடை விழாவானது 2024.07.04 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு நட்டாங்கண்டல் விவசாய போதனாசிரியர் சண்முகராசா சரண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் யாமினி சசீலன் அவர்களும், சிறப்பு விருந்தினராக பாண்டியன்குள கமநல சேவை நிலையத்தின் பெரும் போக உத்தியோகத்தர், முன்று

பரசூட் முறையிலான நெற் செய்கை வயல் விழா நிகழ்வு – முல்லைத்தீவு மாவட்டம் Read More »

உழுந்துப் பயிர்ச்செய்கையில் மஞ்சள் சித்திர வடிவ வைரஸ் நோய் முகாமைத்துவம் தொடர்பான வயல்விழா – தேராவில் பண்ணை

உழுந்துப் பயிர்ச்செய்கையில் மஞ்சள் சித்திர வடிவ வைரஸ் நோய் முகாமைத்துவம் தொடர்பான வயல்விழாவானது வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவிலில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பூங்கனியியல் கருமூலவள மாதிரிப் பண்ணையில் 2024.07.03 ஆம் திகதி காலை 9.30 மணியக்கு பண்ணை முகாமையாளர் தங்கராஜா – கமலதீபன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி செந்தில்குமரன் சுகந்தினி கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர்

உழுந்துப் பயிர்ச்செய்கையில் மஞ்சள் சித்திர வடிவ வைரஸ் நோய் முகாமைத்துவம் தொடர்பான வயல்விழா – தேராவில் பண்ணை Read More »

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் “அறுவடை – 02 ” பருவ இதழ் வெளியீடு

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் “அறுவடை பருவ இதழின் 02 ஆவது இதழ் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த அறுவடை பருவ இதழின் வெளியீட்டு நிகழ்வு, 20.06.2024 அன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய மாநாட்டு மண்டபத்தில், விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் தின நிகழ்வின்போது நடைபெற்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மரியதாசன் ஜெகூ அவர்கள் தலைமையில் நடைபெற்ற “அறுவடை” பருவ இதழ் 02 வெளியியீட்டு நிகழ்வில் வடக்கு மாகாண

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் “அறுவடை – 02 ” பருவ இதழ் வெளியீடு Read More »

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றுச்சூழல் தின நிகழ்வு

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவினால் சுற்றுச்சூழல் தின நிகழ்வு 20.06.2024 அன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய மாநாட்டு மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ தலைமையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தின நிகழ்வில், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு, அறுவடை சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு ஆகியன இடம்பெற்றதோடு சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நாடகப்போட்டியில்

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றுச்சூழல் தின நிகழ்வு Read More »

“ஜெயகமு ஸ்ரீ லங்கா” நடமாடும் சேவை – மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து சேவைகளையும் தமது பிரதேசங்களிலேயே நடமாடும் சேவையின் மூலம் பெற்றுக்கொள்ளும் நிகழ்வானது சித்திரை மாதம் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் மன்னார் நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. இதில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மானுச நானயக்கார மற்றும் வெளிநாட்டு வேலைவாயப்பு ஊக்குவிப்பு இராஜங்க அமைச்சர் கௌரவ ஜகத் புஷ்பகுமாரஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். இந்நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச

“ஜெயகமு ஸ்ரீ லங்கா” நடமாடும் சேவை – மன்னார் மாவட்டம் Read More »