மகளிர் விவகார அமைச்சு

கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான சிற்றூழியர்கள் கௌரவ ஆளுநரினால் நியமிக்கப்பட்டனர்

கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான பத்து சிற்றூழியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 2019/03/27 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது வழங்கிவைக்கப்பட்டன. இந் நிகழ்வில் அ.பத்திநாதன், பிரதம செயலாளர் வடக்கு மாகாணம், எல்.இளங்கோவன், செயளாலர், ஆளுநர் செயலகம், வடக்கு மாகாணம், திருமதி.ரூபினி வரதலிங்கம், செயலாளர், மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், திருமதி.வனஜா செல்வரட்ணம், மாகாணப் பணிப்பாளர், சமூக சேவைகள் […]

கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான சிற்றூழியர்கள் கௌரவ ஆளுநரினால் நியமிக்கப்பட்டனர் Read More »

தேசிய தொழிற் தகைமை (NVQ Level – 3) அடிப்படையில் தொழிற்திறன் அபிவிருத்தி பயிற்சிகளை நிறைவு செய்தோரிற்கான பயிற்சி உபகரணம் மற்றும் ஊக்குவிப்பு படி வழங்கும் நிகழ்வு

தேசிய தொழிற் தகைமை (NVQ Level – 3) அடிப்படையில் தொழிற்திறன் அபிவிருத்தி பயிற்சிகளை நிறைவு செய்தோரிற்கான பயிற்சி உபகரணம் மற்றும் ஊக்குவிப்பு படி வழங்கும் நிகழ்வு கைதடி முதியோர் இல்லக் கலாச்சார மண்டபத்தில் 12 மார்ச் 2019 அன்று நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. அ.பத்திநாதன் அவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாகவும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி. ரூபினி வரதலிங்கம் அவர்களின் சிபாரிசுக்கும் வழிநடத்தலுக்கும் அமைவாகவும் இந் நிகழ்வானது தொழிற்துறைத் திணைக்களத்தின்

தேசிய தொழிற் தகைமை (NVQ Level – 3) அடிப்படையில் தொழிற்திறன் அபிவிருத்தி பயிற்சிகளை நிறைவு செய்தோரிற்கான பயிற்சி உபகரணம் மற்றும் ஊக்குவிப்பு படி வழங்கும் நிகழ்வு Read More »

ஆளுநரின் வழிநடத்தலில் வடமாகாணத்தின் சர்வதேச மகளிர் தினம் 

பெண்கள் கல்வித்துறையில் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளனர். சுமார் 60 சதவீதமான பெண்கள் பட்டதாரிகளாக உள்ளனர்   இவர்களில் 45 சதவீதமானவர்கள் கலைத்துறையில் பட்டம் பெற்றவர்கள். இருப்பினும் 35 வீதமானவர்களே தொழிற்துறையை பெற்றுக்கொள்கின்றனர் என்று வடமாகாண மகளிர்விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி  வரதலிங்கம் அவர்கள் தெரிவித்தார். ‘சமத்துவத்திற்கான நல்வாழ்வு’ என்ற தொனிப்பொருளில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் நெறிப்படுத்தலில் பெண்களினால் பெண்களே இந்த நிகழ்வை நடத்த வேண்டும் என்ற வழிகாட்டலுக்கு இணங்க  , வடமாகாணத்தின் 2019 சர்வதேச

ஆளுநரின் வழிநடத்தலில் வடமாகாணத்தின் சர்வதேச மகளிர் தினம்  Read More »

‘இணைந்த கைத்தொழில் கரங்கள்’ கண்காட்சியும் பயிற்சிப்பட்டறையும்

‘இணைந்த கைத்தொழில் கரங்கள்’ கண்காட்சியும்பயிற்சிப்பட்டறையும் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 16.02.2019 தொடக்கம் 17.02.2019 வரை நடைபெற்றது. யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகம் இந்திய துணைத்தூதரகத்தின்அனுசரனையுடன் வடமாகாண தொழிற்துறைத்திணைக்களத்தின் இணை அனுசரனையுடனும் வடமாகாணகல்வி அமைச்சின் முறைசாரா கல்விப்பிரிவுடன் இணைந்துயாழ்ப்பாணத்தில் சிறுகைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காகவும், புதிய தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதற்காகவும் இந்தியாவில் இருந்து இயந்திர உபகரணங்கள் மற்றும்17 தொழில் துறை சார்ந்த கைத்தொழில் உற்பத்தியாளர்களை வரவழைத்து வடமாகாணத்திலுள்ள450 இற்கும் மேற்பட்ட தொழில் முயற்சியாளர்களிற்கு 02 நாட்களிற்கு சிறந்த முறையில்பயிற்சிப்பட்டறை நடாத்தப்பட்டதுடன் சிறந்த முறையில் பயிற்சியை நிறைவுசெய்தவர்களிற்கானசான்றிதழ்களும்  பயிற்சி நிறைவில் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் விருந்தினர்களாக இந்திய துணைத்தூதுவர் யாழ்ப்பாணம் ஸ்ரீமான் சங்கர்பாலசந்திரன், வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகரசபைமுதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், வட மாகாண பிரதிப் பிரதம செயலாளர்- நிர்வாகம் திருமதிசரஸ்வதி மோகநாதன், பதில் மாகாணப் பணிப்பாளர், தொழிற்துறைத் திணைக்களம் திருமதிவனஐா செல்வரத்தினம் மற்றும் யாழ் றோட்டறிக் கழகத் தலைவர் சு.டீ.பிரசாந்தன் ஆகியோர்கலந்து சிறப்பித்தனர். இப்  பயிற்சிப்பட்டறையில் உள்ளடக்கப்பட்ட தொழிற்துறைகளாவன. இயந்திரம் மூலம் சப்பாத்தி தயாரிக்கும் முறை. இயந்திரம் மூலம் கோழி உரிக்கும் முறை. இயந்திரம் மூலம் மரவள்ளி கிழங்கு சீவும் முறை. இயந்திரம் மூலம் வாழைக்காய் சீவும் முறை. இயந்திரம் மூலம் தேங்காய்ப் பூ திருவும் முறை. இலகுவில் மரம் ஏறும் முறை. இயந்திரம் மூலம் வாழை மடலை வாழை நாராக்கும்  முறை. இயந்திரம் மூலம் மோட்டார் வாகன சுத்திகரிப்பு முறை. கடதாசிப் பை தயாரிக்கும் முறை. இயந்திர செக்கு மூலம் எண்ணெய் தயாரிக்கும் முறை. இயந்திரம் மூலம் சிறியளவான தானியங்கள் அரைக்கும் முறை.

‘இணைந்த கைத்தொழில் கரங்கள்’ கண்காட்சியும் பயிற்சிப்பட்டறையும் Read More »

மகளிர் விவகார அமைச்சினால் மெழுகுவர்த்தி உற்பத்திற்கான வாழ்வாதார உதவி

மெழுகுதிரி உற்பத்தியில் 04 பேர் கொண்ட குழுவாக ஈடுபடும் பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கு 2018ம் ஆண்டு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதியூட்டத்தினூடாக உற்பத்தியினை விஸ்தரிப்பதற்கான உற்பத்தி உபகரணங்கள், தளபாடங்கள் மற்றும் கொட்டகை அமைப்பதற்கான நிதி ஆகிய உதவிகள் வடமாகாணம், மகளிர் விவகார அமைச்சினூடாக அண்மையில் வழங்கப்பட்டது. அமைச்சின் செயலாளர் திருமதி.ரூபினி வரதலிங்கம் அவர்களினால் வேலணை கிழக்கு, 1ம் வட்டாரத்தில் சாட்டி கிராமத்தில் அமைந்துள்ள ‘யோசப் மெழுகுதிரிகள்’ உற்பத்தி செய்யும் குறித்த மகளிர்

மகளிர் விவகார அமைச்சினால் மெழுகுவர்த்தி உற்பத்திற்கான வாழ்வாதார உதவி Read More »

2019 ஆம் ஆண்டின் அரச முதியோர் இல்லத்தின் நிகழ்வுகள்.

புத்தாண்டு தினத்தன்று ஆரோக்கிய விநாயகர் சமேத நிற்சிங்க வைரவர் ஆலயத்தில் விசேட பூசைகளும் தேசியக் கொடியேற்றலுடனான சத்தியப்பிரமாண நிகழ்வுகளும் மூத்தோர்கள், உத்தியோகத்தர்களால் இணைந்து செயற்படுத்தப்பட்டது. இத் தினத்தில் உள மேம்பாட்டிற்காகவும், மகிழ்வான எதிர்காலத்தை நோக்கியதான விழிப்புணர்விற்காகவும் நிகழ்வுகள் ஏற்படுத்தப்பட்டன. தைப்பொங்கல் தினத்தன்று விசேட ஆராதனைகளும் தியான நிகழ்வுகளும் இல்லச் சூழலில் ஒழுங்குபடுத்தப்பட்டு, வடிவமைக்கப்பட்டு சமூக நிறுவனங்களின் ஒன்றிணைவுடனும் தமிழ்ப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மூத்தோர்களின் பங்குபற்றுதலுடனான பொங்கல் நிழ்வும் செய்யப்பட்டது.

2019 ஆம் ஆண்டின் அரச முதியோர் இல்லத்தின் நிகழ்வுகள். Read More »

வாழைநார் பிரித்தெடுக்கும் இயந்திரம் லோட்டஸ் தொழில் முயற்சியாளர்கள் குழுவிற்கு வழங்கப்பட்டது

சமூக மட்ட அமைப்புக்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டத்தில் வாழைநார் சார் உற்பத்தியில் ஈடுபடும் கன்னட்டி வெங்கலச்செட்டிக்குளத்தினைச் சேர்ந்த 12 பேர் கொண்ட குழுக்களாக ஈடுபடும் லோட்டஸ் தொழில் முயற்சியாயர்ளுக்கு 2018ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட மூலதன நிதியினூடாக (PSDG)ரூபா 445,000.00 பெறுமதியான வாழைநார் பிரித்தெடுக்கும் இயந்திரம் எமது அமைச்சினூடாக வழங்கப்பட்டது.

வாழைநார் பிரித்தெடுக்கும் இயந்திரம் லோட்டஸ் தொழில் முயற்சியாளர்கள் குழுவிற்கு வழங்கப்பட்டது Read More »

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் – யாழ்ப்பாணம்

பெண் தலைமைத்துவக்  குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவிப் பொருட்கள் விநியோக  நிகழ்வானது 2018.12.12 ஆம் திகதி  அன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் மகளிர் விவகார அமைச்சு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, நல்லூர் மற்றும் தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த  ஐந்து பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் சமையல் உபகரணங்கள் மின்சார நீர் இறைக்கும் மின் மோட்டர், தையல் இயந்திரங்கள்  மற்றும்

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் – யாழ்ப்பாணம் Read More »

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட அமைப்புகளுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் – வெண்கலச்செட்டிகுளம்

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட அமைப்புகளுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் விநியோக  நிகழ்வானது 2018.12.14 ஆம் திகதி  அன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் ஏஞ்சல் மெழுகுதிரி உற்பத்தியாளர் குழு மண்டபம், கன்னாட்டி, வெண்கலச்செட்டிகுளத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வெண்கலச்செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவினைச் சேர்ந்த நான்கு பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மெழுகுதிரி உற்பத்திக்கான ரூபா 99,450.00 பெறுமதியான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொண்டனர்.

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட அமைப்புகளுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் – வெண்கலச்செட்டிகுளம் Read More »