மகளிர் விவகார அமைச்சு

அரசமுதியோர் இல்லத்தின் முதியோர் தின வார நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன

கைதடி அரச முதியோர் இல்லத்தின் முதியோர் தின வாரத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் 07 ஒக்டோபர் 2025 அன்று மகளிர் விவகார மற்றும் சமூக சேவைகள்  அமைச்சின் செயலாளர் திரு.மு.நந்தகோபாலன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. திருமதி.தனுஜா லுக்சாந்தன் மாகாணப்பணிப்பாளர், சமூக சேவைகள் திணைக்களம் அவர்கள் வரவேற்புரையினை நிகழ்த்தி அதிதிகளை வரவேற்றார். இந் நிகழ்வின் பிரதம அதிதியாக திருமதி.மு.தனுஜா, பிரதம செயலாளர், வடக்கு மாகாணம் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு அதிதிகளாக திரு.ச.சிவஸ்ரீ, விவசாய அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாணம், […]

அரசமுதியோர் இல்லத்தின் முதியோர் தின வார நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன Read More »

முதியோர் தின வாரத்தின் 02ம் நாள் நிகழ்வுகள்

முதியோர் தின வாரத்தின் 02ம் நாள் நிகழ்வுகள் திரு. நா.இராஜமனோகரன், அத்தியட்சகர், அரச முதியோர் இல்லம், கைதடி அவர்களின் தலைமையில் 02.10.2025 அன்று பி.ப 2.30 மணியளவில் இடம்பெற்றது. திருமதி. தனுஜா லுக்சாந்தன், மாகாணப் பணிப்பாளர், மாகாண சமூக சேவைகள் திணைக்களம், வடக்கு மாகாணம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார். இவ்நிகழ்வின் பிரதம அதிதியாக திரு.செ.பிரணவநாதன் (பிரதிப் பிரதம செயளாளர் – ஆளணியும் பயிற்சியும்) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு அதிதிகளாக செல்வி.எம்.சிவகுமாரி (பிரதம உள்ளக கணக்காளர் வ.மா)

முதியோர் தின வாரத்தின் 02ம் நாள் நிகழ்வுகள் Read More »

அரச முதியோர் இல்லத்தில் முதியோர் தின வாரம் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது – 1ம் நாள் நிகழ்வுகள்

இந்த வருடத்திற்கான சர்வதேச முதியோர் தினமானது ‘மூத்தோர்கள் தங்கள் அபிலாஷகளை, தங்கள் நல்வாழ்வை, தங்கள் உரிமைகளை நோக்குமாறு உள்ளூரையும் உலகத்தையும் உந்துகின்றனர்’ எனும் ஐ.நா.வின் 2025 ஆம் ஆண்டுக்கான கருப்பொருளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் கைதடி அரச முதியோர் இல்லத்தில் வழமை போன்று சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு ஒக்டோபர் 01 – 07 ஆந் திகதி வரை முதியோர் வாரமாக வெகு விமர்சையாக நடைபெறுவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. 01.10.2025 ஆம் திகதி புதன் கிழமை

அரச முதியோர் இல்லத்தில் முதியோர் தின வாரம் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது – 1ம் நாள் நிகழ்வுகள் Read More »

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 29 செப்டெம்பர் 2025 அன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சில் அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன்; அவர்களின் தலைமையிலும் மீன்பிடி நீரியல் வளங்கள் மற்றும் சமுத்திர வளங்கலுக்கான அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமாகிய கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரர் அவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகிய கௌரவ க.இளங்குமரன் அவர்களது பங்குபற்றலுடனும் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு Read More »

வடக்கு மாகாண மட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் போட்டி – 2025

மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு, நேரடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி விளையாட்டிற்குரிய மாற்றுத்திறன் வகைப்பாட்டை உறுதிப்படுத்திய மாற்றுத்திறனுடைய வீர வீராங்கனைகளுக்கான முதலாவது மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியானது துரையப்பா விளையாட்டரங்கில் 2025.09.10ஆம் திகதி மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்; நடாத்தப்பட்டது. ஆரம்ப நிகழ்வானது காலை 8.30 மணிக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி. தனுஜா லுக்சாந்தன் தலைமையில் பிரதம விருந்தினர் திரு.மு.நந்தகோபாலன் (செயலாளர், மகளிர் விவகார அமைச்சு) அவர்களால் ஒலிம்பிக் தீபம் ஏற்றி ஆரம்பித்து

வடக்கு மாகாண மட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் போட்டி – 2025 Read More »

பெண்கள் வலுëட்டல் மற்றும் பாலின மையமயமாக்கல் திறன் மேம்பாடு சார்ந்த பயிற்றுனர்களுக்கான பயிற்சிப்பட்டறை (ToT)

இன்றைய நவீனமயமாக்கப்பட்ட காலகட்டத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் இடையிலான சமத்துவத்தை அடைவதற்காக தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்களின் திறன்களை வளர்ப்பதற்கான ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையாக பெண்கள் வலுவூட்டல் மற்றும் பாலின மையமயமாக்கல் திறன் மேம்பாடானது முக்கியமானதொன்றாக கருதப்படுகின்றது. அந்த வகையில் பாலின சமத்துவத்தை நிறுவனங்களின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் அனைத்திலும் உள்வாங்கிக் கொள்வதை உறுதிசெய்து பால்நிலைசார் பிரச்சனைகள், தலைமைத்துவம், வடமாகாணத்தில் பெண்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள்,  சவால்கள், அது சார்ந்த வழிமுறைகளை உள்ளடக்கியதான  பயிற்சிப்பட்டறையின்

பெண்கள் வலுëட்டல் மற்றும் பாலின மையமயமாக்கல் திறன் மேம்பாடு சார்ந்த பயிற்றுனர்களுக்கான பயிற்சிப்பட்டறை (ToT) Read More »

பெறுமதி சேர் வரி (VAT ) தொடர்பான செயலமர்வு

வட மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாகாண கூட்டுறவு பயிற்சி நிறுவனத்தின் ஒழுங்கமைப்புடன் 2025.06.03-ம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் மு.ப. 9.00 மணிக்கு வட பிராந்திய இறைவரித் திணைக்களத்தின் வழிகாட்டுதலில் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரும் (வ.மா) திரு. ந. திருலிங்கநாதன் அவர்களினால் பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பான செயலமர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. வட மாகாணத்தில் கூட்டுறவுச் சங்கங்களினால் பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பான

பெறுமதி சேர் வரி (VAT ) தொடர்பான செயலமர்வு Read More »

சர்வதேச மகளிர் தினம் 2025 வடக்கு மாகாண சபையில் நடைபெற்றது

‘அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உரிமைகள்,சமத்துவம்.வலுப்படுத்துகை.’ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வானது 2025.03.07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததோடு சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் இந்தியத்

சர்வதேச மகளிர் தினம் 2025 வடக்கு மாகாண சபையில் நடைபெற்றது Read More »

சமூகப் பராமரிப்பு நிலையம் மருதங்கேணியில் திறந்து வைக்கப்பட்டது

சமூக சேவைகள் திணைக்களத்தினால் மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் PSDG வேலைத் திட்டத்தின் கீழ் ரூபா. 13.374 மில்லியன் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட சமூகப் பராமரிப்பு நிலையமானது 2025.02.28ஆம் திகதி காலை 09.00 மணிக்கு கௌரவ ஆளுநர் திரு நா. வேதநாயகம் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ ஆளுநர் திரு நா. வேதநாயகம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு பொ. வாகீசன், செயலாளர், மகளிர் விவகார அமைச்சு, வடமாகாணம், திரு ந. சுதாகரன், பிரதிப்

சமூகப் பராமரிப்பு நிலையம் மருதங்கேணியில் திறந்து வைக்கப்பட்டது Read More »

மகளிர் விவகாரங்களுக்கான மகத்தான களப்பணி தொடர்பான பயிற்சிப்பட்டறை

வடமாகாண மகளிர் விவகார அமைச்சானது மகளிர் விவகாரங்களுக்கான சேவை வழங்கல் பரப்புக்கள் மற்றும் திட்டமிடல் நுட்பங்கள் என்பனவற்றை முக்கியமான சமூகவியல் அம்சங்களாகக் கருதுவதனால், வடமாகாணத்தில் பாலின சமத்துவம் மற்றும் ஒப்புரவு ஆகியவற்றில் உள்ள ,டைவெளிகளை அறிந்து புதிய செயற்றிட்டங்களை உருவாக்கவும் பெண்களை வலுவூட்டுதல், பெண்களின் குரல் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்கான உலகளாவிய சிறந்த நடைமுறைகள் பற்றிய அறிவை பங்கேற்பாளர்களுக்கு வழங்குவதற்காகவும் வடமாகாணத்தில் இந்த நுட்பங்களை நடைமுறைப்படுத்துவதற்கான உள்ளுர் தடைகளை அடையாளம் காணுவதற்காகவும் பெண்களுக்கான சேவையை மேம்படுத்தி செயல்திட்டங்களை

மகளிர் விவகாரங்களுக்கான மகத்தான களப்பணி தொடர்பான பயிற்சிப்பட்டறை Read More »