பிரதம செயலாளர் அலுவலகம்

புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களிற்கு வடக்கு மாகாண சபையில் உள்ள அமைச்சுக்கள் திணைக்களங்களிற்கு நியமனம் வழங்கப்பட்டது

இலங்கை நிர்வாக சேவைக்கு (திறமை அடிப்படையில்) ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட உத்தியோகத்தர்களில் வடக்கு மாகாணசபைக்கு விடுவிக்கப்பட்ட உத்தியோகத்தர்களிற்கான நியமன கடிதங்கள் 10.10.2025 அன்று பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் பிரதம செயலாளர் திருமதி.தனுஜா முருகேசன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. திரு.மா.முரளி, உதவிச் செயலாளர், மகளிர் விவகார அமைச்சு திரு.ஜோ.லோரன்ஸ், உதவிச் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சு திருமதி.கி.சிவரஞ்சினி, உதவிப் பணிப்பாளர், தொழில்துறைத் திணைக்களம் திரு.ச.லோகேஸ்வரன், செயலாளர், நகரசபை, மன்னார்

புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களிற்கு வடக்கு மாகாண சபையில் உள்ள அமைச்சுக்கள் திணைக்களங்களிற்கு நியமனம் வழங்கப்பட்டது Read More »

வடக்கு மாகாண சபை வளாகத்தில் வாணி விழா கொண்டாடப்பட்டது

வடக்கு மாகாண சபை வளாகத்தில் அமைந்துள்ள அமைச்சுக்கள், பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்கள் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு 02.10.2025 அன்று பேரவைச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் கொத்தணி அலுவலகங்கள் இணைந்து நடாத்திய வாணி விழாவின் இறுதி நாள் நிகழ்வில் அமைச்சு செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து

வடக்கு மாகாண சபை வளாகத்தில் வாணி விழா கொண்டாடப்பட்டது Read More »

டெங்கு நோய் கட்டுப்பாடு தொடர்பான மாகாண மட்ட கூட்டம்

டெங்கு நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்குடன் மாகாண ரீதியிலான டெங்கு நோய் கட்டுப்பாட்டு கலந்துரையாடல் 25.09.2025 காலை 9.00 மணிக்கு பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன் அவர்கள், கூட்டத்திற்கு வருகை தந்தவர்கள் மற்றும் நிகழ்நிலை  மூலமாக கலந்துகொண்டவர்கள் அனைவரையும் வரவேற்றதுடன், பருவமழை நெருங்கி வருவதால் மாகாண மட்டத்தில் டெங்கு நோய்

டெங்கு நோய் கட்டுப்பாடு தொடர்பான மாகாண மட்ட கூட்டம் Read More »

அரச முதியோர் இல்லத்தில் சமூகத்தொடர்பு மைய (Community Interaction Hub) கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட்து

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் இயங்கிவரும் கைதடியில் அமைந்துள்ள அரச முதியோர் இல்லத்திற்காக அமைக்கப்படவுள்ள சமூகத்தொடர்பு மைய (Community Interaction Hub) கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா 24.09.2025 அன்று நடைபெற்றது. இந்த சமூகத்தெடர்பு மையம் ஆனது 37.57 மில்லியன் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை ஊடாக மாகாண சமூக சேவைகள் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து வடக்கு மாகாண மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண

அரச முதியோர் இல்லத்தில் சமூகத்தொடர்பு மைய (Community Interaction Hub) கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட்து Read More »

கழிவு நீர் சுத்திகரிப்புத் தொகுதி (Sewerage Treatment Plant) கட்டுமாணப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது கைச்சாத்திடப்பட்டது

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் ஊடாக (PSDG) மாவட்ட பொது வைத்தியசாலை-மன்னார் மற்றும் மாவட்ட பொது வைத்தியசாலை-முல்லைத்தீவு ஆகிய வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படவிருக்கும் கழிவு நீர் சுத்திகரிப்புத் தொகுதி (Sewerage Treatment Plant) கட்டுமாணப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது (MOU) தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை, பிரதம செயலாளர் செயலகம், மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் ஆகியவற்றுக்கிடையில் பிரதம செயலாளர் செயலகத்தில் 23.09.2025 அன்று கைச்சாத்திடப்பட்டது. இந் நிதியீட்டத்தின் மூலம் மாவட்ட பொது வைத்தியசாலை-மன்னாருக்கு 190Mn ரூபா செலவிலும் மாவட்ட

கழிவு நீர் சுத்திகரிப்புத் தொகுதி (Sewerage Treatment Plant) கட்டுமாணப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது கைச்சாத்திடப்பட்டது Read More »

டெங்கு கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு நடைபெற்றது

யாழ்ப்பாண மாவட்டத்தில் பருவப் பெயர்ச்சி மழை காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கில் டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக யாழ்மாவட்ட செயலகத்தால் டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக வடக்கு மாகாணசபை வளாகத்தில் அமைந்துள்ள திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் மத்தியில் டெங்கு கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு 23.09.2025 அன்று பிரதம செயலாளர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த செயலமர்வில் சமூக மருத்துவர் வைத்தியகலாநிதி நாகராசா பரமேஸ்வரன் அவர்களும் வைத்தியகலாநிதி துவாரகா சுதன்

டெங்கு கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு நடைபெற்றது Read More »

புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட (திறந்த) இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளிற்கான நிறுவனமயப்படுத்தப்பட்ட பயிற்சித் திட்டம்

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தால் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளிற்கான நிறுவனமயப்படுத்தப்பட்ட பயிற்சித் திட்டத்தின் தொடர்ச்சியாக மாகாண சபைகளில் பயிற்சி பெறுவதற்கான அறிமுக நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி.தனுஜா முருகேசன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் 22.09.2025 அன்று நடைபெற்றது. செப்டம்பர் 22 முதல் 26 வரை நடைபெறவுள்ள இப் பயிற்சி திட்டத்தில் வடக்கு மாகாண சபையில் உள்ள பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் தொடர்பிலான

புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட (திறந்த) இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளிற்கான நிறுவனமயப்படுத்தப்பட்ட பயிற்சித் திட்டம் Read More »

உலக சுற்றாடல் தினம் – 2025 வடக்குமாகாண சபை வளாகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு எமது நாட்டில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதியிலிருந்து ஜுன் மாதம் 05 ஆம் திகதி வரையான காலப்பகுதி தேசிய சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டதற்கு அமைவாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன் தலைமையில் பின்வரும் செயற்பாடுகள் வடக்கு மாகாணசபை வளாக உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டன. மே 30      –  வளாக சிரமதானம் மே 31      –  அலுவலக

உலக சுற்றாடல் தினம் – 2025 வடக்குமாகாண சபை வளாகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது Read More »

வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக திருமதி. தனுஜா முருகேசன் பதவியேற்றார்

வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக திருமதி. தனுஜா முருகேசன் அவர்கள் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நியமனத்தினூடாக 27 மே 2025 அன்று வடக்கு மாகாண சபை கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந் நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவர், மாவட்ட செயலாளர் – யாழ்ப்பாணம், மாவட்ட செயலாளர் – மன்னார், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத்

வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக திருமதி. தனுஜா முருகேசன் பதவியேற்றார் Read More »

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77வது சுதந்திர தினம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் கொண்டாடப்பட்டது

“தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77வது தேசிய சுதந்திர தினம் இன்று (பெப்ரவரி 04) கைதடியில் உள்ள பிரதம செயலாளர் செயலக வளாகத்தில் வைபவ ரீதியாக கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை பிரதிப் பிரதம செயலாளர்-நிர்வாகம் திருமதி. எ. அன்ரன் யோகநாயகம் ஏற்றி வைத்தார், வடக்கு மாகாணக் கொடியை உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. எஸ்.பிரணவநாதன் ஏற்றி வைத்தார். நன்றியுரையை உதவிப் பிரதம செயலாளர் திருமதி எம்.டென்ஷியா வழங்கியிருந்தார். பிரதம செயலாளரின்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77வது சுதந்திர தினம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் கொண்டாடப்பட்டது Read More »