கல்வி அமைச்சு

49ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வடக்கு மாகாணம் புதிய சாதனை

உதைபந்தாட்டத்தில் 4வது தடவையாகவும் சம்பியன் கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனை 8 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தமாக 23 பதக்கங்களைத் கைப்பற்றியது.! இலங்கையின் 49 வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வுகள் காலி தடல்ல விளையாட்டரங்கில் ஆகஸ்ட் மாதம் 29,30, 31 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இதில் வடக்கு மாகாண வீர வீராங்கனைகள் 8 தங்கம் 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தமாக 23 பதக்கங்களை பெற்று வடக்கு மாகாணத்திற்கு […]

49ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வடக்கு மாகாணம் புதிய சாதனை Read More »

பாரம்பரிய கலைச்சங்கமம் – 2025

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு மருவிவரும் பாரம்பரிய கலைகளை பாதுகாக்கும் விதமாக பாரம்பரிய கலைச் சங்கமம் எனும் கலை நிகழ்வினை ஆரம்பித்து நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்பாரம்பரிய கலைச் சங்கமமானது இரண்டு நிகழ்வுகளை உள்ளடக்கிய வகையில் கட்டமைக்கப்பட்டிருந்தது. பாரம்பரிய கலைத்திறன் வெளிப்பாட்டுப் போட்டி பாரம்பரிய கலைநிகழ்வுகளின் சங்கமம் என்கின்ற இருநிகழ்வுகளும் மிகப்பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தி இருப்பதுடன் சமூக மட்டத்திலான கலைப்பெறுமான அடைவு மட்டங்களுக்கு அதிக பெறுமானத்தினை வழங்கியிருப்பது மறுக்கமுடியாத

பாரம்பரிய கலைச்சங்கமம் – 2025 Read More »

வடக்கு மாகாண ஆடிப்பிறப்பு விழா 2025

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின்; ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆடிப்பிறப்பு விழா 2025.07.17 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வ-பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை குழுமத்தால் வெகு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி விழாவில் கல்வி, பண்பாட்டலுவல்கள்,  விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் திரு.த.அகிலன் அவர்கள் பிரதம

வடக்கு மாகாண ஆடிப்பிறப்பு விழா 2025 Read More »

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகாவித்தியாலயத்தில் 12.03.2025 அன்று புதன் கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். விருந்தினர்கள் கலாசார முறைப்படி வரவேற்கப்பட்டதுடன், கலாசார நிகழ்வுகளும் அரங்கில் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்வித் திணைக்களப் பணிப்பாளர்,

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. Read More »

வடக்கு மாகாண மஹா சிவராத்திரி தினம் – 2025

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடத்திய வடக்கு மாகாண மஹா சிவராத்திரி தினம் 2025.02.26 ஆம் நாள் புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு கோவில்குளம், வவுனியா அருள்மிகு அகிலாண்டேச்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் முன்றலில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருவாளர் ம.பற்றிக் டிறஞ்சன்  அவர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. மாலை 6.00 மணிக்கு முதலாம் சாமப்பூசையுடன் விரத நிகழ்வு ஆரம்பமானது. சிவராத்திரி தின கலைநிகழ்வுகளில் பண்பாட்டலுவல்கள்

வடக்கு மாகாண மஹா சிவராத்திரி தினம் – 2025 Read More »

மாகாண விளையாட்டு விழா – ஊர் சுற்று ஓட்டப் போட்டி  (Cross Country Race ) 2025

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் 2025 ஆம் ஆண்டுக்கான ஊர் சுற்று ஓட்டப் போட்டி  (Cross Country Race ) கடந்த 2025.02.23 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெற்றது. ,ந் நிகழ்வில் வடமாகாணத்தின் யாழ் மாவட்டம் சார்பாக 10 ஆண் 06 பெண் போட்டியாளர்களும் கிளிநொச்சி மாவட்டம் சார்பாக 10 ஆண் 06 பெண் போட்டியாளர்களும் முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக 10 ஆண் 05 பெண் போட்டியாளர்களும் வவுனியான மாவட்டம் சார்பாக 09

மாகாண விளையாட்டு விழா – ஊர் சுற்று ஓட்டப் போட்டி  (Cross Country Race ) 2025 Read More »

வடக்கு மாகாண ஒளி விழா– 2024

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடாத்திய வட மாகாண ஒளி விழாவானது 2024.12.27 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் முல்லைத்தீவு வண்ணாங்குளம் புனித இராயப்பர் ஆலயத்தில் பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி லா.நிருபராஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் முதன்மை விருந்தினர்களாக வடக்கு  மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம. பற்றிக் டிறஞ்சன் அவர்களும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்

வடக்கு மாகாண ஒளி விழா– 2024 Read More »

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா – 2024

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் 17.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிமுதல் மன்னார் நகரசபை மண்டபத்தில் ‘கலைத்தவசி’ கலைஞர் (குழந்தை) செ.செபஸ்தியான் அரங்கில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் உயர்திரு.நா.வேதநாயகன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா – 2024 Read More »

ஜூடோ பயிற்சி முகாம் மற்றும் தரப்படுத்தல் 

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள திணைக்களத்தின் பயிற்சி நிலையத்தில் 2024 அக்டோபர் 25,26,27 ஆம் திகதிகளில் மாகாண மட்ட ஜுடோ பயிற்சி முகாம் மற்றும் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கான தரப்படுத்தல் இடம்பெற்றது. இந் நிகழ்வு இரண்டு நாட்கள் பயிற்சி செயலமர்வாகவும் இறுதி நாளன்று தரப்படுத்தல் செய்முறைப் பயிற்சியும் நடைபெற்றது. இப் பயிற்சி நிகழ்வுக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த 214 வீர வீராங்கனைகள் பங்குபற்றியமை சிறப்பம்சம் ஆகும்.அத்துடன் வளவாளராக தேசிய ஜுடோ சம்மேளனத்தின் உறுப்பினர்கள் கலந்து பயிற்சியினை

ஜூடோ பயிற்சி முகாம் மற்றும் தரப்படுத்தல்  Read More »

வடக்கு மாகாண நவராத்திரி விழா– 2024

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் நலன்புரிச்சங்கம், மாகாணக் கல்வித் திணைக்களத்தின் நலன்புரிச்சங்கம் மற்றும் யாழ் வலயக் கல்வி அலுவலக நலன்புரிச்சங்கம் என்பன இணைந்து நடாத்திய வடக்கு மாகாண நவராத்திரி விழா 2024.10.12 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்வி அமைச்சு வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி சிலை முன்றலில் நடைபெற்றது. பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமான விஜயதசமி விழாவில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

வடக்கு மாகாண நவராத்திரி விழா– 2024 Read More »