உள்ளூராட்சி அமைச்சு

வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது

வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி வடக்கு மாகாண சபையின் வீதி பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் ‘வீதி போக்குவரத்து நடைமுறைகளை கடைப்பிடித்து பெறுமதி மிக்க உயிர்களைக் காப்போம்’ என்னும் தொனிப்பொருளில் இன்று 09/05/2024ம் திகதி காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் பலாலி வீதி வேம்படி சந்தியிலிருந்து வைத்தியசாலை வீதி ஊடாக காங்கேசந்துறை வீதி சத்திரசந்தி வரை கவனயீர்ப்பு நடைபவனி இடம்பெற்றது. இந்நடைபவனியில் வடமாகாண பிரதம செயலாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத்தலைவர்கள், […]

வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது Read More »

வடமாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை – 2024

வடமாகாணத்தின் முல்லைத்தீவு,, வவுனியா, கிளிநெச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் அவர்களுக்கான சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கும் முகமாகவும் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு வடமாகாண தொழிற்துறைத் திணைக்களம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் ஒழுங்குசெய்யப்பட்ட வடமாகாண வர்த்தகச் சந்தை – 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வானது தொழிற்துறைத் திணைக்கள மாகாணப்பணிப்பாளர் திருமதி வனஜா

வடமாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை – 2024 Read More »

வீட்டுத்திட்டங்களின் பௌதீக முன்னேற்ற நிலை – 2022

நிதி, திட்டமிடல் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 2022 ஆம் ஆண்டிற்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை (PSDG) நிதியில் வடக்கு மாகாணத்தில் 25 வீட்டுத்திட்டங்களுக்காக, பெண் தலைமைதாங்கும், வருமானம் குறைந்த அதிக அங்கத்தவர்கள், கடந்த யுத்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அங்கவீனமான தீராத நோய்களினை கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்குறித்த 25 வீட்டுத்திட்ட பயனாளிகள் அனைவரும், தமது வீட்டினை பௌதீக ரீதியாக ஆரம்பித்துள்ளதுடன் 20 பயனாளிகள், கூரை வேலைகளை முடிவுறுத்தியதோடு ஏனைய பயனாளிகள் தொடர்ச்சியாக, பௌதீக கட்டுமானங்களை

வீட்டுத்திட்டங்களின் பௌதீக முன்னேற்ற நிலை – 2022 Read More »

வீட்டுத்திட்டங்களின் பௌதீக முன்னேற்ற நிலை – 2022

நிதி, திட்டமிடல் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 2022 ஆம் ஆண்டிற்கான குறித்தொதுக்கப்பட்ட விசேட அபிவிருத்தி நன்கொடை (PSDG) நிதியில் வடக்கு மாகாணத்தில் 25 வீட்டுத்திட்டங்களுக்காக, பெண் தலைமைதாங்கும், வருமானம் குறைந்த அதிக குடும்ப அங்கத்தவர்கள், கடந்த யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்கள், அங்கவீன தீராத நோயாளிகளினை கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளால், திட்டம் பௌதீக ரீதியாக ஆரம்பிக்கப்பட்டு, அத்திபார கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. முன்னர் திட்டமிட்டமைக்கு அமைவாக, இம்மாத இறுதிக்குள் அனைத்து பயனாளிகளினாலும் அத்திபார

வீட்டுத்திட்டங்களின் பௌதீக முன்னேற்ற நிலை – 2022 Read More »

”வீதி ஒழுங்குகளைப் பேணிப் பாதுகாப்பாகப் பயணிப்போம்” எனும் தொனிப்பொருளில் நடமாடும் சேவை

    

”வீதி ஒழுங்குகளைப் பேணிப் பாதுகாப்பாகப் பயணிப்போம்” எனும் தொனிப்பொருளில் நடமாடும் சேவை Read More »

வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட பயனாளிகளுடனான வீட்டுத்திட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடல் நிகழ்வு

நிதி, திட்டமிடல் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 2022 ஆம் ஆண்டிற்கான குறித்தொதுக்கப்பட்ட விசேட அபிவிருத்தி நன்கொடை (PSDG) நிதியில் வடக்கு மாகாணத்தில் 25 வீட்டுத்திட்டங்களுக்காக, வருமானம் குறைந்த மற்றும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 15 மார்ச் 2022 அன்று வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட, முறையே 04,02,02 வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான, அறிமுக மற்றும் திட்ட நடைமுறைகள் தொடர்பாக, அமைச்சின் செயலாளர் அவர்களின் தலைமையில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் – வவுனியா அலுவலகத்தில்

வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட பயனாளிகளுடனான வீட்டுத்திட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடல் நிகழ்வு Read More »

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பயனாளிகளுடனான வீட்டுத்திட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடல் நிகழ்வு

நிதி, திட்டமிடல் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 2022 ஆம் ஆண்டிற்கான குறித்தொதுக்கப்பட்ட விசேட அபிவிருத்தி நன்கொடை (PSDG) நிதியில் வடக்கு மாகாணத்தில் வீட்டுத்திட்டத்தின் கீழ், வருமானம் குறைந்த மற்றும் பெண் தலைமை தாங்கும் 25 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. முதல் கட்டமாக, இன்று (11.03.2022) யாழ்ப்பாணத்தில் 15 பயனாளிகளுக்கும் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் 02 பயனாளிகளுக்கும் அறிமுக மற்றும் திட்ட நடைமுறைகள் தொடர்பாக, அமைச்சின் செயலாளர் அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றதுடன் அமைச்சிற்கும் பயனாளிகளுக்குமிடையில் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பயனாளிகளுடனான வீட்டுத்திட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடல் நிகழ்வு Read More »

வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டார்

வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் முகாமைத்துவ சபைக்கு தலைவராக திரு.எஸ்.அமிர்தலிங்கம் அவர்கள் 10 பெப்ரவரி 2020 முதல் செயற்படும் வண்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதம் வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால் 10 பெப்ரவரி 2020 அன்று ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.  

வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டார் Read More »

கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணக் கண்காட்சி – 2019

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் 2019 ஆண்டுக்கான மாகாண கண்காட்சியானது “மகளிர் மலர்ச்சியே கிராமிய மறுமலர்ச்சி” என்னும் தொனிப்பொருளில் 09 ஏப்ரல் 2019 அன்று காலை 08.30மணிக்கு ஆரம்பமாகி இரண்டு நாட்கள் (09,10-04-2019) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றுவருகிறது. கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றுவரும் இக்கண்காட்சியினை பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் கலந்துகொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். சிறப்பு

கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணக் கண்காட்சி – 2019 Read More »

சர்வதேச மகளிர் தினம் – 2019

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் ‘நல்வாழ்வுக்கான சமத்துவம்’ எனும் சர்வதேச கருப்பொருளுடன் சர்வதேச மகளிர் தினம் 2019.03.08 அன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. வடக்கு மாகாண மகளிர் விவகாரம், கூட்டுறவு, சமூக சேவைகள், தொழிற்றுறை, அமைச்சின் செயலாளர் திருமதி.ரூபினி வரதலிங்கம் அவர்கள் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எழுத்தாளர், கவிஞர், ஓய்வு பெற்ற அதிபர் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. கோகிலா மகேந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக

சர்வதேச மகளிர் தினம் – 2019 Read More »