விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு 10 சதவீத கழிவு அறவிடும் முறைமையை நீக்க விவசாயிகள் ஆதரவளிக்கவில்லை
விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு 10 சதவீத கழிவு அறவிடப்படுவது இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுத்திருந்த பணிப்புரைக்கு அமைவாக யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் 10.01.2025 அன்று ஆளுநருக்கு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அறிக்கையிட்டிருந்தார். உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பொ.ஸ்ரீவர்ணனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த காலங்களில் மத்திய அமைச்சர்களாலும் எமது மாகாண சபைக்கு […]
