வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கத்துக்கும் இடையிலான கலந்துரையாடல்
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கத்துக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (28.01.2025) இடம்பெற்றது. இதன்போது ஆரிசிய ஆலோசகர் சங்கத்தினரால் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்று கையளிக்கப்பட்டது. அதில், களப்பணியில் ஈடுபடும் அவர்களுக்கு பொருத்தமான கொடுப்பனவு வழங்கப்படவேண்டும், சம்பள மாற்றியமைப்பு மற்றும் சம்பள உயர்வு சரியாகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், நீண்டகாலம் வெளிமாவட்டங்களில் பணியாற்றிய ஆசிரிய ஆலோசகர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட வேண்டும், காகிதாகி கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும், […]
