ஆளுநர்

வடக்கு மாகாண மாவட்டங்களுக்கிடையிலான நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் தொடர்பான அமையத்தின் முதலாவது சந்திப்பு ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் காணப்படும் நீர் வளங்களை முகாமைத்துவம் செய்து வட மாகாணத்தில் காணப்படும் நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரினைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் பிரச்சினைகளுக்கு பொதுவானதும் உறுதியானது நிரந்தரத் தீர்வொன்றினை காணுவதனை நோக்காகக் கொண்டு ஆளுநர் அவர்களின் ஆலோசனையின் பேரில் அமையப் பெற்றுள்ள மாவட்டங்களுக்கிடையிலான நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் தொடர்பான அமையத்தின் முதலாவது சந்திப்பு வட மாகாண ஆளுநரின்  தலைமையில் 07 பெப்பிரவரி 2019 அன்று முற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. […]

வடக்கு மாகாண மாவட்டங்களுக்கிடையிலான நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் தொடர்பான அமையத்தின் முதலாவது சந்திப்பு ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது Read More »

பாதுகாப்பு படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது

கிளிநொச்சி மாவட்டத்தின் கரச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதுகாப்பு படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று (07) முற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதனடிப்படையில் பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டிலிருந்த 39.95 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதுடன் அவற்றில் பொதுமக்களுக்கு சொந்தமான 21.24 ஏக்கர் காணிகளுக்கான உரிமைப் பத்திரங்கள் உரிமையாளர்களிடம் கௌரவ ஆளுநர் அவர்களினால் கையளிக்கப்பட்டது.  

பாதுகாப்பு படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது Read More »

வடக்கு மாகாணத்தின் மொழிப்பிரச்சினை தொடர்பில் ஆராய ஆளுநரால் குழுவொன்று நியமனம்

வடக்கு மாகாணத்தின் அரச நிறுவனங்களில் காணப்படும் மொழிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின்      சிரேஷ்ட விரிவுரையாளரொருவரின் தலைமையில் ஐவரடங்கிய விசேட குழுவொன்று வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் வடக்கு மாகாணத்தின் சகல அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் மும்மொழிக் மொழிக்கொள்கையினை சரியான முறையில் அமுல்படுத்த வேண்டுமென்று வடக்கு மாகாண

வடக்கு மாகாணத்தின் மொழிப்பிரச்சினை தொடர்பில் ஆராய ஆளுநரால் குழுவொன்று நியமனம் Read More »

இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஆளுநரைச் சந்தித்தார்

இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்போர்ன் காஸ்ட்டேசேதர் அவர்கள்  வட மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (07) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஆளுநரைச் சந்தித்தார் Read More »

வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் பதிவு செய்ய ஆளுநர் பணிப்பு

வட மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்வதற்கான உத்தரவினை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் விடுத்துள்ளார்.  இதனடிப்படையில் வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களினதும் உரிமையாளர்கள் தமது கல்வி நிலையங்கள் தொடர்பான முழுமையான தகவல்களையும், கல்வி நிலையம் அமைந்திருக்கும் காணி மற்றும் இடம் தொடர்பான முழுமையான தகவல்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 04ஆம் திகதிக்கு (2019.03.04) முன்னர் வடக்கு மாகாண கல்வி அமைச்சில் பதிவு

வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் பதிவு செய்ய ஆளுநர் பணிப்பு Read More »

வடக்கு மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கக்கூடிய சூழலை உருவாக்க அரச அலுவலர்கள் அர்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் – ஆளுநரின் செயலாளர்

போரிலிருந்து மீண்டுவந்திருக்கும் மாகாணமாக வட மாகாணம் காணப்படுவதால் இங்குள்ள மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கக்கூடிய சூழலை உருவாக்க வட மாகாணத்தின் அரச அலுவலர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென வட மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் அவர்கள் வட மாகாணத்தின் அரச அலுவலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 04 பெப்பிரவரி 2019 அன்று காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற 71ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஆளுநர் செயலக பணிக்குழாம் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

வடக்கு மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கக்கூடிய சூழலை உருவாக்க அரச அலுவலர்கள் அர்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் – ஆளுநரின் செயலாளர் Read More »

ஆளுநரின் சுதந்திரதின வாழ்த்து செய்தி

இலங்கையின் 71ஆவது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்கள். காலணித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது எமது மண்ணிற்கு பெருமையே ஆனாலும் அரசியல் பொருளாதார கலாசார சமூக சுதந்திரத்தினை அனைத்து மக்களும் பெற்றுக்கொள்ளும் வரையிலும் எமது பயணமானது தொடரவேண்டும். அதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதியும் ஏனையவர்களும் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள். அமைதியாக அனைவரும் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்! கலாநிதி சுரேன் ராகவன், ஆளுநர்,வட மாகாணம்.

ஆளுநரின் சுதந்திரதின வாழ்த்து செய்தி Read More »

உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி 20 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிப்பு

வடக்கு மாகாணம் மற்றும் நாடு முழுவதும் உருளைக்கிழங்கு பயிற்செய்கையில் ஈடுபடும்  விவசாயிகளின் வருமானத்தினை அதிகரிக்கும் நோக்கில் விளைச்சல் காலத்தில் உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியினை அதிகரிக்கக்கோரி யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களிடம் கோரிக்கையினை முன்வைத்தார். ஆளுநர் அவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கமைய உடனடியாகவே உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியினை 20 ரூபாவிலிருந்து ஐம்பது ரூபாயாக அதிகரிக்குமாறு விவசாய அமைச்சர் பி.ஹரிசன் அவர்களுக்கு ஜனாதிபதி அவர்கள்

உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி 20 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிப்பு Read More »

வடக்கு ஆளுநருக்கும் நிரல் அமைச்சுக்களின் செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இலங்கை அரசின் நிரல் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோருடனான சந்திப்பு  31 ஜனவரி 2019 அன்று கொழும்பபிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு மாகாணமாக வடக்கு மாகாணம் காணப்படுவதால் அது அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கியுள்ளதனை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டிய ஆளுநர் அவர்கள், நிரல் அமைச்சுக்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து

வடக்கு ஆளுநருக்கும் நிரல் அமைச்சுக்களின் செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு Read More »

வடக்கு ஆளுநருக்கும் பா.உ அங்கஜன் இராமநாதனுக்குமிடையில் சந்திப்பு

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அமைப்பாளருமான அங்கஜன் ராமநாதன் அவர்களுக்கும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 30 ஜனவரி 2019 அன்று  ஆளுநரின் செயலகத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய சாத்தியமான வழிமுறைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

வடக்கு ஆளுநருக்கும் பா.உ அங்கஜன் இராமநாதனுக்குமிடையில் சந்திப்பு Read More »