பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையை ஓரிருநாள்கள் மாத்திரம் முன்னெடுக்க முடியாது. தொடர்;ச்சியாக சகல திணைக்களங்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். மக்களுக்கு போதியளவு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் சட்டநடவடிக்கையை தீவிரமாக முன்னெடுக்குமாறு பணித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இதனை நாளையிலிருந்தே ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தினார். பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 11.06.2025 அன்று புதன்கிழமை நடைபெற்றது. ஆளுநர் தனது ஆரம்ப உரையில், அலுவலர்களை களத்துக்குச் சென்று பணியாற்றுமாறு திரும்பத் திரும்பக் கூறிவருகின்றபோதும் […]
