சிறுவர்களுக்கு உடல், உள ரீதியான தண்டனைகள் வழங்கப்படக்கூடாது. சிறுவர்களை அன்பாகப் போசித்தால் சிறப்பான நாட்டை உருவாக்க முடியும். – கௌரவ ஆளுநர்
உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனையிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்கவேண்டும். பிள்ளைகளை இலக்கு வைத்து வலைப்பின்னல் உருவாக்கப்படுகின்றது. அதை உடைத்தெறிந்து அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவேண்டும். பிள்ளைகள் மீதான முதலீடு என்பது சிறப்பான எதிர்கால நாட்டுக்கான அடித்தளமாகும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு கிளிநொச்சி பாரதி ஸ்ரார் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை மாலை […]
